For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவமானங்கள்.. தோல்விகள்.. கேப்டன் பதவியும் இல்லை.. எதற்காகவும் டீமை விட்டுக் கொடுக்காத மிஸ்டர் 360!

துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடி வரும் ஏபி டிவில்லியர்ஸ் 37 வயதான போதும் அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் ஆடி வருவது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வலியுடன் அவர் விக்கெட் கீப்பிங் செய்தது அவர் மீதான மதிப்பை உயர்த்தி உள்ளது.

பெங்களூர் அணி எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் அந்த அணியை விட்டு விலகாமல், சலிக்காமல் அவர் தன் சிறப்பன ஆட்டத்தை அணிக்காக அளித்து வருகிறார்.

கேன் வில்லியம்சன் வேண்டும்.. அதற்காக இப்படியா? முக்கிய வீரரை நீக்கிய வார்னர்.. பொங்கிய ரசிகர்கள்!கேன் வில்லியம்சன் வேண்டும்.. அதற்காக இப்படியா? முக்கிய வீரரை நீக்கிய வார்னர்.. பொங்கிய ரசிகர்கள்!

தோல்விகள், அவமானங்கள்

தோல்விகள், அவமானங்கள்

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அளவுக்கு தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்த அணி எதுவும் இருக்க முடியாது. அந்த அணியில் தான் உலகின் இரண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனாலும் அந்த அணியால் கடந்த சீசன்களில் வெற்றிகளை குவிக்க முடியவில்லை.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

எத்தனை தோல்விகள் வந்தாலும் விராட் கோலி கேப்டன் பதவியில் தொடர்ந்து வருகிறார். ஏபி டிவில்லியர்ஸ்க்கு கேப்டன் பதவியை கொடுத்துப் பார்க்கலாம். அது அணியில் மாற்றம் ஏற்படுத்தி வெற்றிகளை குவிக்க வைக்கலாம் என பலரும் கடந்த இரண்டு சீசன்களில் கூறினர்.

அணித் தேர்வில் தான் பிரச்சனை

அணித் தேர்வில் தான் பிரச்சனை

ஆனாலும், அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. விராட் கோலி எடுக்கும் முடிவுகளை அவர் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார். அணித் தேர்வில் தான் பிரச்சனை. அதனால் தான் பெங்களூர் அணி தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், அதை மாற்ற டிவில்லியர்ஸ்க்கு எந்த அதிகாரமும் இல்லை.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

பெங்களூர் அணி எத்தனை தோல்விகளை சந்தித்தாலும், ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டாலும் ஏபி டிவில்லியர்ஸ் அந்த அணிக்காக தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் கூட முதல் போட்டியில் வென்ற பெங்களூர் அணி, இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது.

டிவில்லியர்ஸ் ஆட்டம்

டிவில்லியர்ஸ் ஆட்டம்

மூன்றாவது போட்டியில் மும்பை அணிக்கு எதிராக மீண்டும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் டிவில்லியர்ஸ் பங்கு அதிகம். 170-180 ரன்களை மட்டுமே எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி டிவில்லியர்ஸ் அதிரடியால் 201 ரன்களை எட்டியது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

போட்டி டை ஆகி சூப்பர் ஓவர் சென்ற போதும் டிவில்லியர்ஸ் அப்போது ஒரு ஃபோர் அடித்து சூப்பர் ஓவர் வெற்றியை எளிதாக்கினார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் கடும் கழுத்து வலியுடன் தான் அந்தப் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்தார்.

வலியுடன் பேட்டிங்

வலியுடன் பேட்டிங்

அதே வலியுடன் மீண்டும் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தார். அவரது அர்ப்பணிப்பு உணர்வு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. கேப்டன் கோலி உட்பட யாரும் இவரை விட பெங்களூர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்க முடியாது.

முன்னுதாரணம்

முன்னுதாரணம்

37 வயதாகும் நிலையில் டிவில்லியர்ஸ் உடல் வலிகளால் அவதிப்பட்டு வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் கிரிக்கெட்டுக்கு அவர் நிரந்தரமாக விடை கொடுப்பார். ஆனால், அதற்கு முன் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக மாறி உள்ளார்.

மிஸ்டர் 360

மிஸ்டர் 360

மிஸ்டர் 360 என அவரது அதிரடி பேட்டிங் ஸ்டைலுக்காக பாராட்டப்படும் ஏபி டிவில்லியர்ஸ், எதையும் எதிர்பார்க்காமல், தான் சிறப்பாக ஆடியும் அணி தோற்கும் போது துவளாமல் இளம் வீரர்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பாடம் எடுத்து வருகிறார்.

Story first published: Wednesday, September 30, 2020, 16:25 [IST]
Other articles published on Sep 30, 2020
English summary
IPL 2020 : AB de Villiers still giving his best for RCB, despite the failures of the team over the years.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X