For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவ்வளவு அவமானம்.. கோலியின் புறக்கணிப்பு.. மொத்தமாக திருப்பி கொடுக்கும் தமிழக வீரர்.. அஸ்வின் ஆட்டம்!

துபாய்: பல புறக்கணிப்புகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்த வருட ஐபிஎல்லில் அஸ்வினின் ஆட்டம் பார்த்து பிசிசிஐ மீண்டும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளது.

ஸ்பின் பவுலர் ரவிசந்திரன் அஸ்வின் தமிழகத்தில் இருந்து தேர்வான மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். உலக அளவில் அதிக விக்கெட் எடுத்த ஸ்பின் பவுலர்களில் இவரும் ஒருவர். கும்ப்ளே, ஹர்பஜன் போன்ற ஜாம்பவான்களுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின்தான் இருக்கிறார்.

முரளிதரனின் 800 விக்கெட் சாதனையை முறியடிக்க கூடிய ஒரே வாய்ப்பு இருந்த இந்திய வீரராக ரவிசந்திரன் அஸ்வின் பார்க்கப்பட்டார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் திடீர் என்று சில போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை என்றதும் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். கடந்த மூன்று வருடங்கள் முன்பு வரை நல்ல பார்மில் இருந்த அஸ்வின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதிலும் கோலி இந்திய அணியின் கேப்டனாக உருவெடுத்த பின் தொடர்ந்து அஸ்வினை புறக்கணித்துவிட்டு சாஹல், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுத்தார் .

லெக் ஸ்பின்

லெக் ஸ்பின்

சாஹல், குல்தீப் என்று இரண்டு லெக் ஸ்பின்னர்கள் வந்த பின் மொத்தமாக அணியில் அஸ்வினின் வாய்ப்பு பறிக்கப்பட்டது. இதனால் 3 வருடமாக அஸ்வின் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். இதன் காரணமாக அஸ்வின் தனது ஆப் ஸ்பின் பவுலிங்கை மாற்றிவிட்டு லெக் ஸ்பின் பவுலிங்கும் கூட கற்றுக்கொண்டார்.

குட்டிக்கரணம்

குட்டிக்கரணம்

அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று படாதபாடு பட்டார். ஆனால் அஸ்வினுக்கும் கோலிக்கும் இருக்கும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர்ந்து இவர் அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்தார். ஐபிஎல் தொடரிலும் கூட இவர் கேப்டனாக இருந்த பஞ்சாப் அணியே மொத்தமாக இவரை புறக்கணித்து வெளியே அனுப்பியது. 2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய ஸ்பின் பவுலர்கள் சரியாக பந்து வீசவில்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அப்போதும் கூட அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஒரு வருடமாக தனது பார்மை அஸ்வின் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். லெக் ஸ்பின் பவுலிங்கை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தனது வலிமையாக ஆப் ஸ்பின் பவுலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் அந்த அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இந்த தொடரில் நல்ல எக்கனாமி கொண்ட வீரர்களில் அஸ்வின் ஒருவராக இருக்கிறார். அமீரகத்தில் பெரிய அளவில் ஸ்பின் பவுலிங் இந்த முறை எடுபடவில்லை. ஆனாலும் அக்சர் பட்டேல், அஸ்வின், சாஹல் போன்ற சிலர் மட்டுமே இந்த முறை சிறப்பாக ஐபிஎல் தொடரில் பந்து வீசி வருகிறார்கள். இந்த நிலையில் விமர்சனங்கள் அனைத்திற்கும் தனது பார்ம் மூலம் பதிலடி கொடுத்துள்ள அஸ்வின் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக உள்ளார்.

தேர்வாகிறார்

தேர்வாகிறார்

ஆம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர் மாதம் விளையாட உள்ள கிரிக்கெட் தொடரில் அஸ்வின் விளையாட உள்ளார். 3 வருடங்கள் கழித்து அஸ்வின் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாக இருக்கிறார். குல்தீப் யாதவ் அணிக்கு தேர்வாக வாய்ப்பு இல்லாத நிலையில் மீண்டும் அஸ்வின் உள்ளே வருகிறார். இந்த வருட ஐபிஎல்லில் அஸ்வினின் ஆட்டமும் பார்த்து பிசிசிஐ மீண்டும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளது .

யார் எல்லாம்

யார் எல்லாம்

ஏறத்தாழ இந்த செய்தி உறுதியாகி உள்ள நிலையில் அஸ்வின் உற்சாகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் அஸ்வின், சாஹல் ஆகியோர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கும் இன்னொரு பக்கம் சாஹல், வாஷிங்டன் சுந்தர் இருவரும் டி 20 அணிக்கும், அக்சர் பட்டேல் மாற்று பவுலராகவும் தேர்வாக உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Story first published: Thursday, October 22, 2020, 13:35 [IST]
Other articles published on Oct 22, 2020
English summary
IPL 2020: After Ashwin bowling for Delhi Capitals get impresses, He may get selected for Team India again.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X