For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா அது? ஐபிஎல்-இல் ஆடும் முதல் அமெரிக்க வீரர்! பிராவோ கண்டெடுத்த முத்து.. கொல்கத்தாவின் சொத்து

துபாய் : ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு அமெரிக்க வீரர் பங்கேற்க உள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மாற்று வீரராக அலி கான் என்ற அமெரிக்க வீரரை தேர்வு செய்துள்ளது.

அவர் 2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பங்கேற்க உள்ளார். ஆனால், அவரை முதலில் அடையாளம் கண்டது சிஎஸ்கே வீரர் டிவைன் பிராவோ தான்.

 தோனி அடித்த மெகா சிக்ஸ்.. உணர்ச்சிவசப்பட்ட முரளி விஜய்.. சிஎஸ்கே வீடியோ.. செம வைரல்! தோனி அடித்த மெகா சிக்ஸ்.. உணர்ச்சிவசப்பட்ட முரளி விஜய்.. சிஎஸ்கே வீடியோ.. செம வைரல்!

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடக்க உள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை அனைத்து ஐபிஎல் அணிகளும் பின்பற்றி வருகின்றன. இதன் இடையே பல அணிகளில் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியும் உள்ளனர்.

வீரர்கள் விலகல்

வீரர்கள் விலகல்

கொரோனா வைரஸ் அச்சம், குவாரன்டைன் சிக்கல், தனிப்பட்ட காரணங்கள், காயம் என ஐந்து வீரர்களுக்கும் மேல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர். அதில் ஒருவர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஹாரி கர்னி.

ஹாரி கர்னி

ஹாரி கர்னி

வேகப் பந்துவீச்சாளரான ஹாரி கர்னி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் முக்கிய வீரராக விளங்கினார். இந்த ஆண்டு கொல்கத்தா அணியில் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வேகப் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

காயம் காரணமாக விலகல்

காயம் காரணமாக விலகல்

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹாரி காயம் காரணமாக 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு மாற்றாக வேறு வேகப் பந்துவீச்சாளரை தேர்வு செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது.

அலி கான்

அலி கான்

கொல்கத்தா அணி யாரை தேர்வு செய்யப் போகிறது? என்பது மர்மமாக இருந்த நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களால் நடத்தப்படும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த அலி கானை தேர்வு செய்துள்ளனர்.

கண்டெடுத்த பிராவோ

கண்டெடுத்த பிராவோ

அலி கான் அமெரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்தவர். அவர் குளோபல் கனடா டி20 தொடரில் ஆடிய போது வெஸ்ட் இண்டீஸ் வீரரும், சிஎஸ்கே வீரரும் ஆன டிவைன் பிராவோவால் அடையாளம் காணப்பட்டு, கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இடம் பெற்றார்.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

கடந்த சீசனில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக ஆடிய அலி கான் 12 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். 2020 சீசனில் 8 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரது பவுலிங் எகானமி 7.43 ஆகும்.

140 கிலோ மீட்டர் வேகம்

140 கிலோ மீட்டர் வேகம்

அலி கான் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக் கூடியவர். அவர் சிறந்த யார்க்கர் வீசுவதில் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறார். டி20 போட்டிகளில் யார்க்கர் பந்துகள் வீசுவதன் மூலம் ரன் ரேட்டை கட்டுப்படுத்த முடியும் என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி

அலி கான், பிராவோ, பொல்லார்டு உள்ளிட்ட வீரர்கள் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஒன்றாக ஆடிய நிலையில், அவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க கிளம்பி வந்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் செப்டம்பர் 23 அன்று தன் முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆட உள்ளது.

Story first published: Saturday, September 12, 2020, 21:00 [IST]
Other articles published on Sep 12, 2020
English summary
IPL 2020 : Ali Khan is the first ever American player in IPL to play for Kolkata Knight Riders. He was identified by Dwayne Bravo while playing in Global T20 in 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X