For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எந்த அரசியலும் இல்லை.. உண்மையில் நடந்தது இதுதான்.. புறக்கணிக்கப்பட்ட ரோஹித்.. கோலி செய்தது என்ன?

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படாதது தொடர்பாக நிறைய வதந்திகள் பரவி வரும் நிலையில்.. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் பட்டியல் நேற்று வெளியானது. டெஸ்ட், ஒருநாள், டி 20 தொடருக்கான வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது.

இந்த பட்டியலில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. ரோஹித் சர்மாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஏன்

ஏன்

இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பை கிடைக்காமல் போனது தொடர்பாக பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தொடங்கி மூத்த கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் இது தொடர் கேள்விகளை எழுப்பி இருந்தனர். ஆஸ்திரேலிய தொடர் எவ்வளவு முக்கியம். அப்படிப்பட்ட தொடரில் ரோஹித் சேர்க்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

கோலி

கோலி

கோலி - ரோஹித் இடையே இருந்த மோதல்தான் இந்த முடிவிற்கு காரணம் என்று இணையத்தில் பலர் விவாதம் செய்தனர். கோலி, ரோஹித் சர்மா இரண்டுக்கு பேருக்கும் இடையே கேப்டன்சி பொறுப்பில் போட்டி நிலவி வருகிறது. இதனால் ரோஹித் சர்மாவை காலி செய்ய கோலி இப்படி செயல்பட்டு இருக்கிறார். கோலிதான் ரோஹித் சர்மாவின் நீக்கத்திற்கு காரணம் என்று இணையத்தில் பலர் விமர்சனம் வைத்து இருந்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ரோஹித் சர்மா உண்மையில் காயம் காரணமாக அவதிப்படுவதுதான் அவரின் நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவருக்கு கீழ் தொடையில் ஏற்பட்ட காயம்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் என்கிறார்கள். இவருக்கு காயம் மோசமாக இருக்கிறது. அதனால்தான் கடந்த இரண்டு போட்டியில் இவர் ஆடவில்லை என்று கூறுகிறார்கள். இதுதான் இவர் இந்திய அணியில் எடுக்கப்படாமல் போனதற்கும் காரணம் என்கிறார்கள்.

காரணம்

காரணம்

ஆனால் நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் சர்மா பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டது. காலில் பெரிய அளவில் காயம் இல்லையே என்பதை உணர்த்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது. நான் பிட்டாக இருக்கிறேன். என்னால் ஆட முடியும் என்பதை ரோஹித் உணர்த்துவது போல இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

இந்தநிலையில்தான் ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் ரோஹித் சர்மா கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதாவது தற்போது துபாயில் இருக்கும் ரோஹித் சர்மா இந்தியா திரும்ப வேண்டும். இந்தியாவில் இருந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடலை சோதனை செய்து.. ஒரு வாரமாவது சிகிச்சை பெற வேண்டும். அதன்பின் பிட்னஸை நிரூபித்து இந்திய அணியில் ரோஹித் சர்மா இணைய முடியும் என்கிறார்கள்.

கொரோனா

கொரோனா

கொரோனா விதிகள் காரணமாக இவர் உடனே இந்திய அணியில் இணைய முடியாது. இதனால் ரோஹித் சர்மா இந்திய அணிக்குள் வர சில வாரங்கள் ஆகலாம். இன்னொரு பக்கம் ரோஹித் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு ஆசைப்பட்டு இந்தியா திரும்பினால், அவரால் மீதம் இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது. ஆம் மீதம் உள்ள ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் ஆடுவது சந்தேகம்தான் என்கிறார்கள்.

அரசியல்

அரசியல்

ரோஹித் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதை குறித்து யோசிக்க வாய்ப்புள்ளது. இதில் அரசியல் எல்லாம் எதுவும் இல்லை. கோலி இதில் எதுவும் செய்யவில்லை. முழுக்க முழுக்க ரோஹித் எடுக்கும் முடிவை பொறுத்தே அவருக்கான இந்திய அணி வாய்ப்பு முடிவு செய்யப்படும் என்கிறார்கள். ரோஹித் இந்திய திரும்பவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, October 27, 2020, 15:32 [IST]
Other articles published on Oct 27, 2020
English summary
IPL 2020: All you need to know about Rohit Sharma and Team India Selection
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X