For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களுக்கு என்ன ஆச்சு? மாற்றி மாற்றி ஆடிய அஸ்வின்.. எழுந்து நின்று கத்திய பாண்டிங்.. உருவான மோதல்!

துபாய்: நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் அஸ்வின் செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சை ஆகியுள்ளது.

நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி எளிதாக வென்றது. தொடக்கத்தில் வெற்றிகளை குவித்து வந்த டெல்லி அணி தற்போது மோசமான ஆட்டம் காரணமாக வரிசையாக தோல்விகளை தழுவி வருகிறது.

கொல்கத்தா அணி மீண்டும் இந்த ஐபிஎல் சீசனில் கம்பேக் கொடுத்துள்ளது. அதிலும் கொல்கத்தாவின் முக்கியமான வீரர்கள் ராணா, சுனில் நரேன் இருவரின் பேட்டிங் மீண்டும் பார்மிற்கு வந்துள்ளது.

பேட்டிங் பார்ம்

பேட்டிங் பார்ம்

நேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 194 ரன்கள் எடுத்தது. அதன்பின் டெல்லி அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவரில் டெல்லி அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தோல்வி ஏன்

தோல்வி ஏன்

நேற்று டெல்லி அணியின் அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினார்கள். திடீரென பார்மிற்கு திரும்பிய சுனில் நரேன் எல்லோருடைய ஓவரையும் போட்டு துவைத்து எடுத்தார். நேற்று நன்றாக பவுலிங் செய்த அக்சர் பட்டேலுக்கு ஒரே ஒரு ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதிகம் ரன் கொடுப்பார் என்பதால், லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் களத்தில் இருக்கிறார் என்பதால் அவருக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது.

எத்தனை ஓவர்

எத்தனை ஓவர்

இதன் காரணமாக ரைட் ஹேன்ட் ஆப் ஸ்பின் பவுலர் அஸ்வினுக்கு நேற்று அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. நேற்று மொத்தமாக அஸ்வின் 4 ஓவரும் போடுவதற்கு அனுமதிக்கப்பட்டார். நான்கு ஓவரிலும் இவர் ஆப் ஸ்பின் போட்டார். ஆனாலும் இவர் ஓவரை கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் பிரித்து எடுத்தனர். ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை அஸ்வின் வாரி வழங்கினார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ரன் செல்கிறது என்று தெரிந்ததும் கொஞ்சம் கடினமான பந்துகளை அஸ்வின் போட்டு இருக்க வேண்டும். ஆனால் ரிஸ்க் எடுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு, சுனில் நரேன் நிற்கும் போது, அவருக்கு போய் லெக் ஸ்பின் போட்டார். அஸ்வினின் லெக் ஸ்பின் அவ்வளவு சிறப்பானது கிடையாது. ஆனால் அந்த லெக் ஸ்பின் பவுலிங்கை பார்மில் இருக்கும் சுனில் நரேனுக்கு அஸ்வின் வீசினார்.

அஸ்வின் வீசினார்

அஸ்வின் வீசினார்

அதை சுனில் நரேன் சிக்ஸுக்கு பறக்கவிட்டார். அஸ்வினின் ஆப் ஸ்பின் பவுலிங்கிலேயே நேற்று அதிகமாக ரன்கள் சென்றது. அப்படி இருக்கும் போது நேற்று தேவையில்லாமல் லெக் ஸ்பின் போட்டு மேலும் ரன்களை வாரி வழங்கினார். அஸ்வின் இதற்கு முன்பே களத்தில் தனது ஸ்பின் முறையை அடிக்கடி மாற்றி அவமானப்பட்டு இருக்கிறார். நேற்றும் இப்படி செய்துதான் அவர் ரன்களை அதிகம் கொடுத்தார்.

பாண்டிங் கோபம்

பாண்டிங் கோபம்

நேற்று அஸ்வினின் இந்த செயலை பார்த்து பாண்டிங்கும் கோபம் அடைந்தார். என்ன இவர் இப்படி பவுலிங் போடுகிறார். ஏன் லெக் ஸ்பின் போடுகிறார் என்று கோபம் அடைந்தார். அக்சர் பட்டேலுக்கு ஓவர் கொடுக்காமல் உங்களுக்கு கொடுத்ததே நீங்கள் ரைட் ஹேண்ட் ஆப் ஸ்பின் பவுலர் என்பதால்தான்.. அப்படி இருக்கும் போது லெக் ஸ்பின் போட்டால் என்ன நியாயம் என்பது போல பாண்டிங் மைதானத்தை பார்த்து கத்தினார்.

Story first published: Sunday, October 25, 2020, 8:34 [IST]
Other articles published on Oct 25, 2020
English summary
IPL 2020: Ashwin bowled leg-spin to Sunil Narine, Ponting get up to advice him.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X