டுவென்டி டுவென்டி ஐபிஎல் ஏலம்.. டிசம்பர் 19ம் தேதி தொடக்கம்.. கொல்கத்தாவில்

கொல்கத்தா: 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில்தான் வழக்கமாக ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும். இந்த முறை முதல் முறையாக வெளியில் கொண்டு போகின்றனர்.

2021ம் ஆண்டில் புதிய அணிகள் இடம் பெறவுள்ளன. இதனால் மிகப் பெரிய அளவிலான ஏலம் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கடைசியாக 2018ம் ஆண்டு பெரிய அளவிலான ஏலம் நடைபெற்றது என்பது நினைவிருக்கலாம்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தற்போது உள்ள அணிகள் தங்களது அணிகளை இறுதிப்படுத்திக் கொள்ள ரூ. 85 கோடி வரை செலவிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தற்போது கையிருப்பில் உள்ள தொகையை விட கூடுதலாக ரூ. 3 கோடி வைத்துக் கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதித்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது கையில் ரூ. 8.2 கோடி மிச்சம் வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 7.15 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 6.05 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 5.3 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 3.7 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 3.2 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ. 3.05 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ. 1.8 கோடி கையில் வைத்துள்ளன.

ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய அனுமதியின்படி, இந்தத் தொகை போக கூடுதலாக இவை ரூ. 3 கோடி வரை இந்த எட்டு அணிகளும் ஏலத்தின்போது செலவழிக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020 Auction will be held in Kolkata on December 19th. This is the first time an IPL auction is going to be held outside Bangalore.
Story first published: Tuesday, October 1, 2019, 11:41 [IST]
Other articles published on Oct 1, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X