For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் கெரியரை புரட்டி போட்ட தோனி.. 4 வருடம் கழித்து பழி தீர்த்த இளம் வீரர்..நேற்று என்ன நடந்தது

துபாய்: நேற்று டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு பின்பாக வேறு ஒரு காரணமும் இருக்கிறது. 4 வருடமாக இளம் வீரர் ஒருவர் பட்ட அவமானங்களுக்கு நேற்று திருப்பி பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. நேற்று முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.

நன்றாக தொடக்கம் இருந்தாலும் சிஎஸ்கே கடைசியில் மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. அதன்பின் இறங்கிய டெல்லி கடைசி ஓவரில் அதிரடி காட்டி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

இந்த போட்டியில் கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் பேட்டிங் மொத்தமாக ஆட்டத்தை மாற்றிவிட்டார். நேற்று கடைசி ஓவரில் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. மொத்தமாக ஆட்டம் சிஎஸ்கே கையை விட்டு போய் இருந்தாலும், கடைசி கட்டத்தில் வெற்றிபெற வாய்ப்பு கை கூடி வந்தது. நேற்று பிராவோ பவுலிங் செய்து இருந்தால் ரன் செல்வதை கட்டுப்படுத்தி சிஎஸ்கே வென்று இருக்கும்.

ஜடேஜா

ஜடேஜா

ஆனால் நேற்று பிராவோ காயம் காரணமாக பாதியில் வெளியேறிவிட்டார். இதனால் நேற்று ஜடேஜா கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்து, மூன்றாவது பந்து மற்றும் 5வது பந்தில் அடுத்தடுத்து அக்சர் பட்டேல் மூன்று சிக்ஸர் அடித்தார். தவான்தான் மேட்சை முடிப்பார் என்று எல்லோரும் நினைத்த நிலையில் அக்சர் பட்டேல் அதிரடியாக போட்டியை முடித்தார்.

மூன்று சிக்ஸ்

மூன்று சிக்ஸ்

அக்சர் பட்டேல் அந்த ஓவரில் மூன்று சிக்ஸர் அடிப்பார் என்று யாருமே நினைக்கவில்லை. டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரே.. அக்சர் பட்டேல் நேற்று சைலன்ட் ஹீரோ போல செயல்பட்டார். அமைதியாக அணியின் வெற்றிக்கு உதவினார் என்று பாராட்டினார். அக்சர் பட்டேல் இதன் மூலம் 4 வருட கோபத்தை நேற்று தீர்த்துக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும்.

2016ல் என்ன நடந்தது

2016ல் என்ன நடந்தது

கடந்த 2016ம் வரும் சிஎஸ்கே அணி தடையில் இருந்த போது தோனி புனே அணிக்காக விளையாடி வந்தார். அப்போது பஞ்சாப் அணிக்காக அக்சர் பட்டேல் விளையாடி வந்தார். இரண்டு அணிகளும் மோதிய ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் 172 ரன்கள் எடுத்தது. இதனால் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று புனே அணி களமிறக்கியது.

சேசிங் செய்தது

சேசிங் செய்தது

இதில் புனே அணி சேசிங் செய்த போது கடைசி ஓவரில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். அந்த ஓவரில் பேட்டிங் செய்த தோனி மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடித்தார். பின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்தார். பின் மீண்டும் 5 மற்றும் 6வது பந்தில் அடுத்தடுத்து சிக்ஸ் அடித்து போட்டியை முடித்தார்.

மோசமான ஓவர்

மோசமான ஓவர்

அக்சர் பட்டேல் இந்த மோசமான ஓவர் காரணமாக ஷாக் ஆனார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் அக்சர் பட்டேல் கிரிக்கெட் கெரியரை இந்த ஓவர் மொத்தமாக புரட்டி போட்டது. அதன்பின் பெரிதாக ஐபிஎல் தொடரில் எந்த அணிகளும் அக்சர் பட்டேல் மீது கவனம் செலுத்தவில்லை. அக்சர் பட்டேல் கிரிக்கெட் அப்போது மொத்தமாக புரட்டி போடப்பட்டது.

பதிலடி கொடுத்தார்

பதிலடி கொடுத்தார்

அன்று அக்சர் பட்டேலை பலர் இணையத்தில் கடுமையாக கிண்டல் செய்தனர். இவரின் கிரிக்கெட் கிராப் அப்போது மோசமான சரிவை சந்தித்தது. தற்போது 4 வருடங்கள் கழித்து அக்சர் பட்டேல் அந்த ஓவருக்கு திருப்பி கொடுத்துள்ளார். 4 வருடங்கள் கழித்து தோனி போலவே கடைசி ஓவரில் 3 சிக்ஸர் அடித்து அக்சர் பட்டேல் பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Sunday, October 18, 2020, 9:06 [IST]
Other articles published on Oct 18, 2020
English summary
IPL 2020: Axar Patel paid back to Dhoni yesterday for 2016 Pune - Punjab match after 4 yours.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X