For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜாகிட்ட மன்னிப்பு கேட்க ரெடி.. வேலை போனதால் கெஞ்சிய முன்னாள் வீரர்.. ஈவு இரக்கமே காட்டாத பிசிசிஐ

மும்பை : முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை கடந்த மார்ச் மாதம் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியது பிசிசிஐ.

அப்போதே ஜடேஜாவை அவர் மோசமாக விமர்சித்து பேசியதால் தான் பதவி நீக்கப்பட்டார் என பேசப்பட்டது.

அதன் பின் அவர் தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஈமெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை.. ஐபிஎல்-ஐ விட்டு விலகியது விவோ.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்தியா - சீனா எல்லை பிரச்சனை.. ஐபிஎல்-ஐ விட்டு விலகியது விவோ.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பதில் சொல்லாத பிசிசிஐ

பதில் சொல்லாத பிசிசிஐ

தற்போது அவர் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும், தன்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்க்குமாறும் அந்த ஈமெயிலில் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், பிசிசிஐ எந்த பதிலும் கூறவில்லை என கூறப்படுகிறது.

தவறான விமர்சனம்

தவறான விமர்சனம்

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கிரிக்கெட் வர்ணனையாளராக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் அவர் மும்பை வீரர்களுக்கு சாதகமாக பேசுவதாக சில ரசிகர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். அதே போல, அவர் கூறும் விமர்சனம் பல சமயம் தவறாக இருப்பதையும் பலரும் சுட்டிக் காட்டி இருக்கின்றனர்.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

இதனால், கடந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். ரசிகர்கள் பலர் அவரது வர்ணனை வரும் போது தாங்கள் சத்தத்தை குறைத்து வைத்துக் கொண்டு போட்டிகளை காண்பதாகக் கூட கூறி உள்ளனர்.

அரைகுறை வீரர்

அரைகுறை வீரர்

இது போன்ற விமர்சனங்கள் 2019 உலகக்கோப்பை தொடரிலும் அதிகரித்தது. அப்போது ஒரு பேட்டியில் இந்திய அணியின் ஆல் - ரவுண்டர் ஜடேஜாவை முழுமை அடையாத அரைகுறை வீரர் என குறிக்கும் வகையில் "பிட்ஸ் அண்ட் பீசஸ்" (bits and pieces) வீரர் என குறிப்பிட்டு பேசி இருந்தார்.

ஜடேஜா கடும் எதிர்ப்பு

ஜடேஜா கடும் எதிர்ப்பு

அது அப்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் ஜடேஜாவே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் வெளியிட்டார். அதனால் பரபரப்பு அதிகரித்தது. ஜடேஜாவின் எதிர்ப்புடன் அந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது.

ஹர்ஷா போக்ளே விவகாரம்

ஹர்ஷா போக்ளே விவகாரம்

அதன் பின் சில மாதங்கள் முன்பு ஒரு கிரிக்கெட் விவாதத்தின் போது இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவின் கருத்து ஒன்றை எதிர்த்து பேசிய மஞ்ச்ரேக்கர், அவரை காயப்படுத்தும் வகையில் பேசி இருந்தார்.

என்ன தகுதி இருக்கிறது?

என்ன தகுதி இருக்கிறது?

ஹர்ஷா போக்ளே கிரிக்கெட் ஆடாதவர் என்பதை குறிக்கும் வகையில், குறிப்பிட்ட விஷயத்தில் கருத்து சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதுவும் பெரும் சர்ச்சை ஆனது. பின்னர் அது தொடர்பாக விளக்கம் அளித்து சமாளித்தார் மஞ்ச்ரேக்கர்.

நீக்கம்

நீக்கம்

இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியதால் பிசிசிஐ அவரை இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு முன்னதாக வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியது. அப்போது இது பற்றி பிசிசிஐ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மன்னிப்பு கேட்க தயார்

மன்னிப்பு கேட்க தயார்

அப்போதே ஐபிஎல் தொடரிலும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற மாட்டார் என கூறப்பட்டது. நீக்கப்பட்ட பின்னர் யாரேனும் தன் கருத்தால் காயப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

பிசிசிஐ மெயில்

பிசிசிஐ மெயில்

எனினும், அந்த மெயிலுக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை பிசிசிஐ. இந்த நிலையில் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள வர்ணனையாளர்களுக்கு பிசிசிஐ மெயில் அனுப்பி இருக்கிறது. சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு ஐபிஎல் தொடரிலும் வாய்ப்பு இல்லை என கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது.

Story first published: Thursday, August 6, 2020, 21:03 [IST]
Other articles published on Aug 6, 2020
English summary
IPL 2020 : BCCI not replied to Sanjay Manjrekar over reinstating his position as a commentator. Earlier, Sanjay Manjrekar wrote an email to BCCI that he is ready to apologise to cencerned party.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X