For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்சர்கள்.. பிசிசிஐ கூட்டத்தில் முடிவு.. அரசு அனுமதி கிடைக்குமா?

மும்பை : 2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் துவங்கி நவம்பர் 10 வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Recommended Video

IPL sponsors பட்டியலில் china நிறுவனங்களை நீக்காத BCCI

இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன நிறுவனங்களின் விளம்பரங்களை ஐபிஎல் தொடரில் தொடர உள்ளதாக பிசிசிஐ கூறி உள்ளது.

குறுகிய காலமே இருப்பதால் விளம்பர ஸ்பான்சர்கள் மாற்றம் குறித்து முடிவு எடுக்க முடியவில்லை என பிசிசிஐ விளக்கம் கூறி உள்ளது.

இந்த ஐபிஎல் மட்டும் இல்ல... மகளிர் ஐபிஎல்லும் நடத்துவோம்... முன்னாள் கேப்டன் உறுதி இந்த ஐபிஎல் மட்டும் இல்ல... மகளிர் ஐபிஎல்லும் நடத்துவோம்... முன்னாள் கேப்டன் உறுதி

ஐபிஎல்

ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது.

பிசிசிஐ கூட்டம்

பிசிசிஐ கூட்டம்

இது குறித்து இறுதி முடிவு எடுக்க நேற்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. அதில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்த தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

சீன விளம்பரதாரர்கள்

சீன விளம்பரதாரர்கள்

அதே கூட்டத்தில் சீன விளம்பரதாரர்களை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது. தற்போது பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகி இருக்கும் தகவலின்படி பிசிசிஐ சீன நிறுவனங்களின் விளம்பரங்களை தொடர உள்ளதாக கூறப்படுகிறது.

அரசு ஒப்புதல் அளிக்குமா?

அரசு ஒப்புதல் அளிக்குமா?

எனினும், இந்த முடிவுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அரசு ஒப்புதல் அளித்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

கடும் சிக்கல்

கடும் சிக்கல்

விவோ மொபைல் நிறுவனம் தான் ஐபிஎல்-இன் முக்கிய ஸ்பான்சர். அது நேரடி சீன நிறுவனம் ஆகும். அது தவிர, ஸ்பான்சர் பட்டியலில் இருக்கும் பேடிஎம், ட்ரீம் 11, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் சீன முதலீடு கொண்டவை. சீன நிறுவனங்களின் விளம்பரங்களை பெற அரசு தடை விதித்தால் ஐபிஎல் கடும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 3, 2020, 10:57 [IST]
Other articles published on Aug 3, 2020
English summary
IPL 2020 : BCCI ready to go ahead with Chinese sponsors. But, this decision is yet to be cleared by government.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X