For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் பெரிதாகும் கோலி vs ரோஹித்.. 30 வீரர்களின் லிஸ்ட்.. குழப்பத்தில் பிசிசிஐ.. என்ன நடக்கிறது?

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் சில இந்திய வீரர்களுக்கு வரும் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஆனால் இந்த அணியை தேர்வு செய்வதில் பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் மும்பை, பெங்களூர், டெல்லி ஆகிய அணிகள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. இந்த சீசனின் புள்ளிகள் பட்டியலில் இந்த மூன்று அணிகள் டாப் இடங்களில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

நீக்கம் என்ன

நீக்கம் என்ன

இந்திய அணியில் இருந்து தோனி வெளியேறிவிட்டதால் அவரின் இடம் காலியாக உள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா காயம் காரணமாக வெளியேறி உள்ளனர். இதனால் அவர்களின் இடமும் காலியாக உள்ளது. இதனால் இவர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இந்திய அணிக்குள் எந்த வீரர்களை எல்லாம் தேர்வு செய்வது என்பது குறித்து ரோஹித் கோலி இடையே போட்டி நடந்து வருகிறது. அதாவது யாருடைய ஆதரவு வீரர்களை அணியில் எடுப்பது என்று இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. பெங்களூர் அணியில் இருக்கும் முக்கியமான வீரர்களை அணியில் எடுக்க கோலி திட்டமிடுகிறார்.

டெஸ்ட்

டெஸ்ட்

டெஸ்ட், ஒருநாள், டி 20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதனால் முகமது சிராஜ், உமேஷ் யாதவ், படிக்கல், சாஹல், வாஷிங்கடன் சுந்தர், சைனி ஆகியோரை அணியில் எடுக்க கோலி முயன்று வருகிறார். ஆர்சிபி வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கோலி முடிவு செய்துள்ளார். டி 20 அணியில் சுந்தர், படிக்கலுக்கு வாய்ப்பு கொடுக்கவும், உமேஷ், சிராஜுக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் கோலி நினைக்கிறார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

அதேபோல் தனக்கு நெருக்கமான கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரையும் அணியில் எடுக்க கோலி திட்டமிட்டு உள்ளார். ஆனால் ரோஹித் சர்மாவோ மும்பை மற்றும் டெல்லி அணியில் இருக்கும் வீரர்களை அணிக்குள் எடுக்க நினைக்கிறார். பண்ட், அக்சர் பட்டேல், அஸ்வின், மும்பையில் உள்ள இஷான் கிஷான், ராகுல் சாகர் போன்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வர ரோஹித் சர்மா நினைக்கிறார்.

இரண்டு போட்டி

இரண்டு போட்டி

அதேபோல் பாண்டியா பிரதர்ஸ் இருவரையும் அணியில் எடுக்கவும் ரோஹித் முயன்று வருகிறார். இதனால்தான் கோலி, ரோஹித் பேருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. உலகக் கோப்பை தொடரின் போதே இந்த மோதல் நிலவியது குறிப்பிடத்தக்கது. ரோஹித், கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷமி, தவான் ஆகியோர் உறுதியாக அணியில் இருப்பார்கள்.

மீதம் யார்

மீதம் யார்

மீதம் உள்ள வீரர்கள் யார் என்பதே தற்போது விவாதமாக உள்ளது. பிசிசிஐ இதனால் கடும் குழப்பத்தில் உள்ளது. கொரோனா ரூல்ஸ், காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய ஏ அணியோடு சேர்த்து மொத்தம் 30 வீரர்களோடு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது.

கொரோனா

கொரோனா

கொரோனா காரணமாக தொடருக்கு இடையில் புதிய வீரர்கள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்று அணியில் இணைய முடியாது. யாருக்காவது காயம் ஏற்பட்டால் புதிய வீரர்கள் இங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல முடியாது. ஒரே அடியாக எல்லா வீரர்களையும் ஆஸ்திரேலியா கொண்டு செல்வதே சரியான திட்டமாக இருக்கும். இதனால் ரோஹித், கோலி பரிந்துரைக்கும் பெரும்பாலான வீரர்கள் இந்த 30 பேர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, October 21, 2020, 12:10 [IST]
Other articles published on Oct 21, 2020
English summary
IPL 2020: BCCI should choose players from RCB and MI squad for team India tour to Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X