For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உயிருக்கு போராடிய அப்பா.. நீ ஐபிஎல்லுக்கு போ.. பென் ஸ்டோக்ஸை அனுப்பிய குடும்பம்.. என்ன நடந்தது?

துபாய்: இங்கிலாந்து அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு தயார் ஆகியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் வெற்றி தோல்வியோடு விளையாடி வருகிறது. ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் என்று அந்த அணியில் வலிமையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆனாலும் மிடில் ஆர்டர் வலிமையாக இல்லாத காரணத்தால் அந்த அணி மோசமாக திணறி வருகிறது. அந்த அணியின் மிடில் ஆர்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் குடும்ப காரணங்களால் தற்போது வரை ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை.

கலந்து கொள்ள முடியவில்லை

கலந்து கொள்ள முடியவில்லை

பென் ஸ்டோக்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது முதலில் சந்தேகமாகவே இருந்தது. இவர் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் சமயத்தில் அவரின் அப்பாவின் உடல்நிலை மோசமானது. இதனால் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து சென்று அங்கு இருக்கும் தனது அப்பாவுடன் தங்கிவிட்டார். அவரின் அப்பாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது.

நியூசிலாந்து

நியூசிலாந்து

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் வீரராக இருந்தாலும் இவரின் தாய்நாடு நியூசிலாந்து. இதனால் இன்னும் பென் ஸ்டோக்ஸ் அப்பா நியூசிலாந்தில்தான் இருக்கிறார். இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து சென்று கடைசி காலத்தில் தனது அப்பாவுடன் இருக்க நினைத்தார். தற்போது தனது அப்பாவின் உடல்நிலை கொஞ்சம் முன்னேறி உள்ள காரணத்தால், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்லில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

அமீரகம் வந்திருக்கும் பென் ஸ்டோக்ஸ் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு என் அப்பாவை பிரியும் மனமில்லை. அவரை விட்டு கிளம்பும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் என் குடும்பத்தினர் என்னை சென்று கிரிக்கெட் விளையாட சொன்னார்கள். என் அப்பா என்னை சென்று ஐபிஎல்லில் கலந்து கொள்ள சொன்னார்.

கலந்து கொள்ள சொன்னார்

கலந்து கொள்ள சொன்னார்

கிரிக்கெட்தான் முக்கியம். உன்னுடைய தொழில்தான் உனக்கு முக்கியம். அதை போய் செய் என்று அனுப்பி வைத்தார். என் குடும்பம்தான் என்னை முழுக்க முழுக்க ஐபிஎல்லில் விளையாடும்படி அனுப்பி வைத்தது. எனக்கு என் அணி வீரர்களும், ஐபிஎல் நிர்வாகமும் முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.

அழுத்தம்

அழுத்தம்

எனக்கு கொஞ்சம் கூட அவர்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. என்னை ஐபிஎல்லுக்கு வரும்படி யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இப்போது என் குடும்பமே என்னை போய் கிரிக்கெட் விளையாடும்படி கூறுகிறது. எனக்கு என் அணி நிர்வாகம் பெரிய அளவில் உதவி செய்தது. அந்த வகையில் அவர்களுக்கு நன்றி.. விரைவில் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக ஆடுவேன், என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 7, 2020, 14:15 [IST]
Other articles published on Oct 7, 2020
English summary
IPL 2020: Ben Stokes's ailing father pushed him to go to UAE to play cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X