For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயசான தோனிக்கெல்லாம் என் ஐபிஎல் டீமில் இடமில்லை.. அதிர வைத்த ஆஸி. வீரர்

துபாய் : 2020 ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் சிறந்த ஐபிஎல் வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்தார்.

அதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல முன்னணி வீரர்களை அவர் தேர்வு செய்யவில்லை.

அந்த முக்கிய வீரர் நிலைமை இதுதான்.. தோனி திட்டம் காலி.. சிக்கலில் சிஎஸ்கே!அந்த முக்கிய வீரர் நிலைமை இதுதான்.. தோனி திட்டம் காலி.. சிக்கலில் சிஎஸ்கே!

தோனிக்கு இடமில்லை

தோனிக்கு இடமில்லை

குறிப்பாக சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அணியில் இடம் அளிக்கவில்லை. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நான்கு முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு கேப்டன் பதவியும் அளிக்கவில்லை.

வெற்றிகரமான கேப்டன்

வெற்றிகரமான கேப்டன்

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் என்றால் அது தோனி தான். பங்கேற்ற ஒவ்வொரு சீசனிலும் சிஎஸ்கே அணியை அவர் பிளே-ஆஃப் அழைத்துச் சென்றுள்ளார். மேலும், சிஎஸ்கே அணிக்காக அதிக ரன் குவித்த இரண்டாவது வீரரும் அவர் தான்.

அனுபவ வீரர்களுக்கு இடமில்லை

அனுபவ வீரர்களுக்கு இடமில்லை

ஆனால், அவருக்கு தன் அணியில் இடம் அளிக்கவில்லை. அதே போல, ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற அனுபவ அதிரடி வீரர்களுக்கும் தன் அணியில் பிராட் ஹாக் இடம் அளிக்கவில்லை. அது ஏன் என்பது பற்றி அவரே விளக்கமும் கூறி உள்ளார்.

ஏன் இடமில்லை?

ஏன் இடமில்லை?

"நான் தோனி, டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் ஆகியோருக்கு இடம் அளிக்கவில்லை. அவர்களுக்கு கொஞ்சம் வயது அதிகம். ஆனால், அவர்கள் இதை மாற்ற முடியும். தொடர் முடிந்த உடன் என் சிறந்த அணி பட்டியலில் அவர்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்றார் ஹாக்.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

பிராட் ஹாக் அறிவித்த சிறந்த ஐபிஎல் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆவார். அவர் கடந்த இரண்டு சீசன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தார். இந்த சீசனில் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர். இருந்தாலும் தன் அணிக்கு கேன் வில்லியம்சனை கேப்டனாக அறிவித்துள்ளார் ஹாக்.

டாப் ஆர்டர்

டாப் ஆர்டர்

அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். இருவருமே உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் என்பதால் அவர்களை தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசையில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.

விக்கெட் கீப்பர் யார்?

விக்கெட் கீப்பர் யார்?

கேப்டன் கேன் வில்லியம்சன் நான்காம் வரிசையில் இடம் பெற்றுள்ளார். தோனியை தவிர்த்துள்ள ஹாக், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்து ஆச்சரியம் அளித்துள்ளார். ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசயில் ஐந்தாம் இடத்தில் இடம் பெற்றுள்ளார்.

ஆல் - ரவுண்டர்கள்

ஆல் - ரவுண்டர்கள்

அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுழற் பந்துவீச்சு பேட்ஸ்மேன்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் சுனில் நரைன் ஆகியோரை ஆல் - ரவுண்டர்களாக தேர்வு செய்துள்ளார் பிராட் ஹாக். ஆண்ட்ரே ரஸ்ஸல் வேகப் பந்துவீச்சாளராகவும் செயல்படுவார்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

சுழற் பந்துவீச்சுக்கு ஜடேஜா, சுனில் நரைன் ஆகியோருடன், யுஸ்வேந்திர சாஹல் இடம் பெற்றுள்ளார். வேகப் பந்துவீச்சாளர்களாக இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு அணி வீரர்களுக்கு இடமில்லை

இரண்டு அணி வீரர்களுக்கு இடமில்லை

இந்த 11 வீரர்கள் அடங்கிய அணியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து மூன்று பேரும், மும்பை, பெங்களூர், கொல்கத்தா அணிகளில் இருந்து தலா இருவரும் இடம் பெற்றுள்ளனர். சிஎஸ்கே, டெல்லி அணியில் இருந்து தலா ஒருவர் இடம் பெற்றுள்ளனர். பஞ்சாப், ராஜஸ்தான் அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.

Story first published: Monday, September 14, 2020, 19:46 [IST]
Other articles published on Sep 14, 2020
English summary
IPL 2020 : Brad Hogg picks best IPL XI. He didn’t added Dhoni in his team. He also gave captaincy to Kane Williamson. Rishabh Pant is the wicket keeper of his best IPL 2020 XI team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X