மயங்கி விழுந்த டீன் ஜோன்ஸ்.. உயிரைக் காப்பாற்ற போராடிய பிரெட் லீ.. பரபர நிமிடங்கள்.. என்ன நடந்தது?

மும்பை : 2020 ஐபிஎல் தொடரின் விமர்சகராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவரது இறுதி நிமிடங்களில் அவரைக் காப்பாற்ற பிரெட் லீ போராடி உள்ளார். நின்று போன இதயத்தை செயல்பட வைக்க சில மருத்துவ முறைகளை பயன்படுத்தி போராடி இருக்கிறார்.

அது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. மாரடைப்பு ஏற்படும் முன் டீன் ஜோன்ஸ் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஜீனியஸ் தோனி.. தரமான சம்பவம்.. இரண்டே நாளில் கிடைத்த செம பதிலடி.. வாயடைத்து கப்சிப் ஆன விமர்சகர்கள்

டீன் ஜோன்ஸ்

டீன் ஜோன்ஸ்

டீன் ஜோன்ஸ் முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஆவார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரராக 80களில் வலம் வந்தார். ஒருநாள் போட்டிகளில் தன் பாணியை உருவாக்கியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

நெத்தியடி விமர்சகர்

நெத்தியடி விமர்சகர்

ஓய்வுக்கு பின் பயிற்சியாளர், கிரிக்கெட் விமர்சகர், வர்ணனையாளர் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளாக விமர்சகராக பெரும் புகழ் பெற்று விளங்கினார். நெத்தியடியாக விமர்சனம் செய்து வந்தார்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் டீன் ஜோன்ஸ் சிறப்பி நிகழ்ச்சியான டக் அவுட் எனப்படும் விமர்சன நிகழ்ச்சியில் முக்கியமான நபராக இருந்தார். ஸ்காட் ஸ்டைரிஸ், பிரெட் லீ ஆகியோருடன் டீன் ஜோன்ஸ் பங்கேற்று வந்தார். மிகவும் வேடிக்கையாகவும், ஆழ்ந்த அர்த்தங்களுடனும் அவர் சொல்லும் விமர்சனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு மதிப்பு இருந்தது.

மாரடைப்பு

மாரடைப்பு

இந்த சீசனிலும் டக் அவுட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் ஜோன்ஸ். மும்பையில் மற்ற வர்ணனையாளர்களுடன் தங்கி இருந்தார். அப்போது அவரது ஹோட்டலில் நடந்து சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

என்ன செய்தார்?

என்ன செய்தார்?

அவருக்கு மாரடைப்பு ஏற்படும் முன் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துள்ளார். பின் கணினியில் சில வேலைகளை செய்துள்ளார். அதன் பின் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வலியில் துடித்து மயங்கிய போது பிரெட் லீ அருகே இருந்துள்ளார்.

பிரெட் லீ போராட்டம்

பிரெட் லீ போராட்டம்

பிரெட் லீ அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். நின்று போன இதயத்தை செயல்பட வைக்க சிபிஆர் எனும் மருத்துவ முதலுதவியை செய்து இருக்கிறார் பிரெட் லீ. எனினும், எந்த பலனும் இல்லை. அதே நேரம் ஆம்புலன்சையும் அழைத்து இருந்தனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

ஹோட்டல் அருகிலேயே இருந்த ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி, அதிலேயே அவருக்கு ஆக்சிஜன் மற்றும் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மருத்துவமனை எடுத்துச் சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதன் பின் அவர் இறந்த செய்தி வெளியானது.

அறையில் இருந்தாரா?

அறையில் இருந்தாரா?

ஆஸ்திரேலிய நாளிதழ்கள் டீன் ஜோன்ஸ் அறைக்கு வெளியே இருந்த போது மயங்கி விழுந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், மும்பை ஊடகங்கள் அவர் வலி ஏற்பட்ட போது அறைக்கு உள்ளேயே தான் இருந்தார். அவருடன் மற்றொரு நபர் தங்கி இருந்தார். அவர் தகவல் தெரிவித்ததை அடுத்து பிரெட் லீ மற்றும் சிலர் வந்து அவரை காப்பாற்ற முயன்றனர் என செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியா எடுத்துச் செல்ல முடிவு

ஆஸ்திரேலியா எடுத்துச் செல்ல முடிவு

டீன் ஜோன்ஸ் உடலை ஆஸ்திரேலிய எடுத்துச் செல்ல ஸ்டார் தொலைக்காட்சி முயன்று வருகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய ஹை கமிஷனிடம் தொடர்பு கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறி உள்ளது. பிரெட் லீ, ஸ்காட் ஸ்டைரிஸ் உள்ளிட்டோர் கனத்த இதயத்துடன் நேற்றைய போட்டியின் டக் அவுட் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 : Brett Lee tried to save Dean Jones in last minute with CPR procesures. But, his efforts gone vain.
Story first published: Friday, September 25, 2020, 12:39 [IST]
Other articles published on Sep 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X