For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோபத்தில் கத்திய அம்பதி ராயுடு.. உலகின் டாப் பவுலருக்கு இப்படி ஒரு நிலையா?.. அதிர வைத்த பும்ரா!

அபுதாபி: உலகின் டாப் பவுலரான பும்ரா நேற்றைய போட்டியில் மிக மோசமாக பந்து வீசியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை படுதோல்வி அடைந்தது. மும்பை வெற்றிபெறும் என்று எல்லோரும் நினைத்த நிலையில்,அதிர்ச்சி அளிக்கும் வகையில் களத்தில் மோசமாக தோல்வியை தழுவியது.

மும்பை அணி வலுவான பேட்டிங், பவுலிங் ஆர்டரை கொண்டு இருந்தும் கூட சென்னைக்கு எதிரான போட்டியில் மோசமாக தோல்விவை தழுவியது.

திரும்பி வந்து கெத்து காட்டிய சிஎஸ்கே நாயகன்... சிஎஸ்கே கேப்டனாக 100வது வெற்றி திரும்பி வந்து கெத்து காட்டிய சிஎஸ்கே நாயகன்... சிஎஸ்கே கேப்டனாக 100வது வெற்றி

மும்பை தோல்விக்கு

மும்பை தோல்விக்கு

சென்னைக்கு எதிராக மும்பை தோல்வி அடைந்ததற்கு மும்பையின் பவுலிங் மோசமாக சொதப்பியதும் காரணம். மும்பையின் எந்த பவுலரும் நேற்று சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. ஜேம்ஸ் பாட்டின்சன் மட்டும் கொஞ்சம் நன்றாக பவுலிங் செய்தார். டிரெண்ட் போல்ட், குர்ணால் பாண்டியா, பும்ரா, ராகுல் சாகர் என்று எல்லோரும் வரிசையாக மோசமாக பவுலிங் செய்தனர்.

பும்ரா

பும்ரா

அதிலும் நேற்று போட்டியில் பும்ரா மிக மோசமாக பவுலிங் செய்தது விமர்சனங்களை சந்தித்தது. டெத் ஓவர்களில் அவர் சரியாக பந்து வீசவில்லை. அதேபோல் அவரின் பவுலிங் வேகமும் சரியாக இல்லை. சரியான லெந்தில் அவர் பந்து வீசவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டது.

யார்க்கர்

யார்க்கர்

அதேபோல் பும்ராவின் யார்க்கர் பந்துகளை எளிதாக எதிர்கொள்ள முடியாது. ஆனால் நேற்று பும்ராவின் யார்க்கர்கள் அவ்வளவு கடினமானதாக இல்லை. அவரின் யார்க்கர்களை, சென்னை வீரர்கள் எளிமையாக எதிர் கொண்டனர். இதை பார்த்து சென்னை வீரர்களே ஷாக் ஆனார்கள்.

பும்ரா

பும்ரா

அதிலும், பும்ரா நல்ல வீரர். மும்பையாக் இருந்தாலும், அவரின் ஓவரை சென்னை வீரர்கள் இப்படி போட்டு பொளப்பதை பார்க்க மனசே கஷ்டமாக இருக்கிறது என்று சிஎஸ்கே ரசிகர்களே குறிப்பிட்டு இருந்தனர். இந்த போட்டியின் 6வது ஓவரில் பும்ராவின் பந்தில் ராயுடு சிக்ஸர் அடித்தார். பும்ராவின் யார்க்கரை எளிதாக ராயுடு சிக்ஸர் பறக்கவிட்டார்.

சிக்ஸர் பறந்தது

சிக்ஸர் பறந்தது

இந்த சிக்ஸரை அடித்துவிட்டு, ராயுடு கோபத்தில் கத்தினார். தன்னை இந்திய அணியில் பலரும் புறக்கணித்த காரணத்தால், அம்பதி ராயுடு கோபத்தில் கத்தினார். தன்னுடைய பவுலிங்கை வீரர்கள் எல்லோரும் எளிதாக அடித்தது பும்ராவிற்கே அதிர்ச்சியாக இருந்தது. ஐசிசி ரேங்கிங்கில் டாப் பவுலராக இருக்கும் பும்ரா இப்படி பெரும் பின்னடைவை சந்தித்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Story first published: Sunday, September 20, 2020, 15:27 [IST]
Other articles published on Sep 20, 2020
English summary
IPL 2020: Bumrah bowling didn't work well against Chennai Super Kings today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X