For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கச்சிதமான பிளான்.. கை கொடுத்த 2 பேர்.. அடுத்தடுத்து வீழ்ந்த மும்பை கோட்டை.. எப்படி நடந்தது?

அபுதாபி: மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி திட்டமிட்டபடி மிக சிறப்பாக விளையாடி வருகிறது. தோனி அண்ட் கோ போட்ட பிளான் கட்சிதமாக சென்னை அணிக்கு சாதகமாக வேலை செய்ய தொடங்கி உள்ளது.

மும்பை மற்றும் சென்னை அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது அபுதாபியில் நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே நடந்து வரும் இந்த போட்டி, தொடக்கத்தில் இருந்தே சென்னை அணிக்கு சாதகமாக சென்று கொண்டு இருக்கிறது.

தொடக்கத்தில் இருந்தே சென்னை வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதிலும் சென்னை அணியின் கேப்டன் தோனி என்ன செய்வார் என்று கணிக்கப்பட்டதோ, அதேபோல் களத்தில் கலக்கி வருகிறார்.

இம்ரான் தாஹிர் அதிரடி நீக்கம்.. யாரும் எதிர்பார்க்காத இளம் வீரரை இறக்கிய தோனி.. சிஎஸ்கே மாஸ் முடிவுஇம்ரான் தாஹிர் அதிரடி நீக்கம்.. யாரும் எதிர்பார்க்காத இளம் வீரரை இறக்கிய தோனி.. சிஎஸ்கே மாஸ் முடிவு

நிலைமை என்ன

நிலைமை என்ன

மும்பை அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் சென்னை அணியின் ஆடும் லெவலின் முரளி விஜய் , ஷேன் வாட்சன், டு பிளசிஸ் , அம்பதி ராயுடு, கெதர் ஜாதவ், தோனி, ஜடேஜா,சாம் கரன், தீபக் சாகர், பியூஸ் சாவ்லா, லுங்கி நிகிடி ஆகியோடு இடம்பெற்று உள்ளனர்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

சென்னை அணியில் திட்டமிட்டபடி அதிக அளவில் ஸ்பின் பவுலர்கள் இறக்கப்பட்டனர். சென்னை சார்பாக சாம் கரன், பியூஸ் சாவ்லா, ஜடேஜா, கேதார் ஜாதவ் என்று நான்கு ஸ்பின் பவுலர்கள் களமிறங்கினார்கள். மும்பை அணி இதை எதிர்பார்க்கவில்லை. சென்னை அணி மூன்று ஸ்பின் பவுலர்கள் உடன் இறங்கும். அணியில் பிராவோ இருப்பார் என்று மும்பை நினைத்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் சென்னை அணி ஷாக்கிங் திருப்பமாக பிராவோவிற்கு பதிலாக சாம் கரனை அணியில் எடுத்தது. சென்னை இப்படி அதிக ஸ்பின் பவுலருடன் இறங்க காரணம், அபுதாபியில் பிட்ச்தான். அமீரகத்தில் இருக்கும் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று அபுதாபி. இந்த மைதானத்தின் பிட்ச் மிக மிக உலர்ந்த, வறட்சியான பிட்ச் என்று கூட கூறலாம். இதனால் இந்த பிட்சை தொடக்கத்தில் சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

அதன்பின்

அதன்பின்

அதன்பின் இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக மாறும். இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு, இந்த ஐபிஎல் தொடர் முழுக்கவே ஸ்பின் பவுலர்கள்தான் மாஸ் காட்ட போகிறார்கள் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் சென்னை நான்கு ஸ்பின் பவுலர்களை இறக்கியது. இதனால் கை மேல் பலன் கிடைத்தது. மும்பை அணி சென்னையின் ஸ்பின் அட்டாக்கை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

செம

செம

முக்கியமாக சாம் கரன் பவுலிங் மற்றும் சாவ்லா ஓவர் இரண்டிலும் மும்பை வீரர்கள் திணறினார்கள். முக்கியமாக ரோஹித் சர்மா அதிகம் திணறினார். இதனால் தோனி திட்டமிட்டபடி வரிசையாக மும்பையின் முக்கிய வீரர்கள் ரோஹித், டீ காக் விக்கெட்டை இழந்தனர்.

விக்கெட் எடுத்த்தனர்

விக்கெட் எடுத்த்தனர்

வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தது. பெரிய அளவில் ரன்னும் செல்லவில்லை. சாவ்லா, சாம் குரன் வரிசையாக விக்கெட்டுகளை எடுத்தனர். இரண்டு பேரின் பவுலிங்கை எதிர்கொள்ளமுடியாமலும், தோனியின் கச்சிதமான திட்டத்தை சமாளிக்க முடியாமலும் மும்பை அணி தற்போது திணறி வருகிறது.

Story first published: Saturday, September 19, 2020, 21:13 [IST]
Other articles published on Sep 19, 2020
English summary
vIPL 2020: Chennai Super Kings master plan with spin bowlers against MI team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X