For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எந்த டீமை வேணா கொண்டு வாங்க.. முதல் போட்டியிலேயே தோனி இறக்க போகும் பிரம்மாஸ்திரம்.. மாஸ்டர் பிளான்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மிகப்பெரிய பிரம்மாஸ்திரத்தை களமிறக்க உள்ளது என்று கூறுகிறார்கள்.

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மிகப்பெரிய பிரம்மாஸ்திரத்தை களமிறக்க உள்ளது என்று கூறுகிறார்கள். மும்பை அணி எவ்வளவு வலுவான அணியை கொண்டு வந்தாலும், இரண்டே வீரர்களை வைத்து மும்பையை சமாளிக்க சென்னை சூப்பர் திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடக்க உள்ளது. நடப்பு சாம்பியன் மும்பை மற்றும் ரன்னர் அப் சென்னைக்கும் இடையே நடக்கும் முதல் போட்டி அதிரி புதிரியாக இருக்க போகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இன்றி போட்டி நடப்பதால் டிஆர்பி இன்னொரு பக்கம் எகிற போகிறது. அதுவும் பொதுவாக சென்னை- மும்பை போட்டி என்றாலே சுவாரசியம் அதிகமாக இருக்குமென்பதால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிஎஸ்கே நல்ல டீம் இல்லை.. கப் ஜெயிக்காது.. கவாஸ்கர் சரமாரி விமர்சனம்!சிஎஸ்கே நல்ல டீம் இல்லை.. கப் ஜெயிக்காது.. கவாஸ்கர் சரமாரி விமர்சனம்!

சென்னை எப்படி

சென்னை எப்படி

சென்னை அணியில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் விலகி உள்ள நிலையில் சென்னை தற்போது வெளிநாட்டு வீரர்களை மலைபோல நம்பி இருக்கிறது. வாட்சன், பிராவோ அணியில் நிரந்தர வெளிநாட்டு வீரர்கள். ரெய்னா இல்லாத காரணத்தால் டு பிளசிஸ் கண்டிப்பாக அணியில் இருப்பார். இந்த நிலையில் தோனி தற்போது மிட்சல் சாண்டர் அல்லது இம்ரான் தாஹீர் இருவரில் ஒருவரை அணியில் பிரம்மாஸ்திரமாக பயன்படுத்த போகிறார் என்கிறார்கள்.

என்ன போட்டி

என்ன போட்டி

முதல் போட்டி நடக்கும் அபுதாபி மைதானம் அளவில் பெரிய மைதானம்தான். அமீரகத்தில் இருக்கும் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று. சார்ஜா போல மிக சின்ன மைதானம் கிடையாது. அதேபோல் இந்த மைதானத்தின் பிட்ச் மிக மிக உலர்ந்த, வறட்சியான பிட்ச் என்று கூட கூறலாம். இதனால் இந்த பிட்சை தொடக்கத்தில் சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

போக போக வறட்சி

போக போக வறட்சி

போக போக இந்த பிட்ச் மேலும் காய்ந்து போகும். இதனால் பிட்ச் மேலும் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக மாறும். இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு, அதிலும் ஆப் - ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமானது. இந்த ஐபிஎல் தொடர் முழுக்கவே ஸ்பின் பவுலர்கள்தான் மாஸ் காட்ட போகிறார்கள். அதோடு இந்த தொடரும் பெரும்பாலும் குறைந்த ரன் கொண்ட தொடர்களாவே இருக்க போகிறது.

சென்னை ஏன்

சென்னை ஏன்

இங்குதான் மும்பைக்கு எதிராக சென்னை தனது பிரம்மாஸ்திரத்தை இறக்க போகிறது என்று கூறுகிறார்கள். இன்று நடக்கும் போட்டியில் மும்பை அணி குருனால் பாண்டியா, ராகுல் சாகர் என்று இரண்டு ஸ்பின் பவுலர்கள் உடன் களமிறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஸ்பின் பிட்ச் என்றாலும் கூட, பேட்டிங் பலம் வேண்டும் என்பதால் ஸ்பின் பவுலர்கள் குறையாகவே மும்பை அணியில் இன்று விளையாட வாய்ப்புள்ளது.

மும்பை எப்படி

மும்பை எப்படி

நான்கு ஸ்பீட் பவுலர்கள், குருனால் பாண்டியா, ராகுல் சாகர் என்ற 2 ஸ்பின் பவுலர்கள் உடன் மும்பை களமிறங்கும் என்கிறார்கள். ஆனால் இங்குதான் சென்னை அணி பெரிய டிவிஸ்ட் செய்ய காத்து இருக்கிறது. அதன்படி சென்னை அணி இன்று 4 ஸ்பின் பவுலர்கள் உடன் களமிறங்கும் என்று கூறுகிறார்கள். இம்ரான் தாஹிர், பியூஸ் சாவ்லா இரண்டு முழு நேர ஸ்பின் பவுலர்கள் இன்று சென்னைக்கு விளையாட வாய்ப்புள்ளது.

இரண்டு பேர்

இரண்டு பேர்

அது போக ஜடேஜா மற்றும் கேதார் ஜாதவ் இருவரும் ஸ்பின் பவுலிங் செய்வார்கள். இதனால் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின் என்று சமமாக கலவையாக சென்னை அணி இன்று மும்பைக்கு எதிராக களமிறங்க போகிறது. இன்னொரு பக்கம் பிராவோ, தீபக் சாகர், சரத்துல் தாக்கூர் ஸ்பீட் பவுலிங் செய்வார்கள். இங்குதான் சென்னை அணி மும்பைக்கு செக் வைத்துள்ளது.

பிரம்மாஸ்திரம்

பிரம்மாஸ்திரம்

மும்பை வீரர்கள் இயல்பாகவே ஸ்பின் பவுலிங்கில் சொதப்புவார்கள். அதோடு இன்னொரு பக்கம் அபுதாபி பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பிட்ச். இதனால் மும்பை அணிக்கு எதிராக 4 ஸ்பின் பவுலர்களை சென்னை கொண்டு வரும் என்கிறார்கள். இந்த தொடர்பில் ஸ்பின் பவுலிங் அணியே அதிகம் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று வல்லுனர்கள் கணித்து உள்ளனர் என்பதால் சென்னை அணி, தனது ஸ்பின் படையை களமிறக்கும் என்கிறார்கள்.

சென்னையின் அஸ்திரம்

சென்னையின் அஸ்திரம்

அதிலும் மிட்சல் சாண்டருக்கு தாஹீரை விட அதிக வாய்ப்புள்ளது. இவர் நல்ல ஸ்பின் பவுலர் மட்டுமல்ல. சிறந்த ஆல் ரவுண்டரும். இவர் உள்ளே வந்தால் பேட்டிங்கும் வலிமை அடையும். 8 வீரர்கள் வரை நல்ல பேட்டிங் ஆர்டர் இருக்கும். அதனால் மிட்சல் சாண்டருக்கு அணியில் அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் .

4 பேர் அதிகம்

4 பேர் அதிகம்

அதே சமயம் 4 ஸ்பின் பவுலர்கள் அதிகம். இம்ரான் தாஹிர், சாண்டர் களமிறங்க வாய்ப்பு குறைவு. அல்லது பியூஸ் சாவ்லா வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அதனால் இன்றைய போட்டியில் தோனி இப்படி ஒரு ரிஸ்க்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Saturday, September 19, 2020, 8:58 [IST]
Other articles published on Sep 19, 2020
English summary
IPL 2020: Chennai Super Kings may go with more spinners against MI today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X