For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே விருந்து... ஒரே கொண்டாட்டம்... கொரோனாவிடம் தப்பித்த கிறிஸ் கெயில்

துபாய் : கடந்த வாரத்தில் ஜமய்க்காவில் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் 34வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. சமூக இடைவெளியின்றி இந்த கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

Recommended Video

CPL 2020 SNP VS BT Patriots won by 6 wickets | Oneindia Tamil

இதில் பங்கேற்ற உசேன் போல்ட்டிற்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

 இதுக்கு பேசாம நாங்க டெஸ்ட் மேட்ச்சே பாத்துக்குறோம்.. ரசிகர்களை கடுப்பேற்றிய டி20 போட்டி! இதுக்கு பேசாம நாங்க டெஸ்ட் மேட்ச்சே பாத்துக்குறோம்.. ரசிகர்களை கடுப்பேற்றிய டி20 போட்டி!

கிறிஸ் கெயில் பங்கேற்பு

கிறிஸ் கெயில் பங்கேற்பு

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தனது 34வது பிறந்த நாளை கடந்த வாரத்தில ஜமய்க்காவில் கொண்டாடினார். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் ஆட்டம் பாட்டத்துடன் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மேற்கிந்திய தீவுகளின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் பங்கேற்றார்.

கிறிஸ் கெயில் பரிசோதனை

கிறிஸ் கெயில் பரிசோதனை

இதையடுத்து உசேன் போல்ட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. எந்தவிதமான அறிகுறிகளும் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ள போல்ட், ஆயினும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து விழாவில் பங்கேற்ற கிறிஸ் கெயிலும் கொரோனா பரிசோதனைகளை செய்துக் கொண்டார்.

பாதிப்பு இல்லை என முடிவு

பாதிப்பு இல்லை என முடிவு

கிறிஸ் கெயிலுக்கு இரண்டுமுறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இந்த சீசனில் விளையாடவுள்ள கெயில், யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கிறிஸ் கெயில் பதிவு

கிறிஸ் கெயில் பதிவு

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு முதல் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் தற்போது இரண்டாவது டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் இரண்டிலும் நெகட்டிவ் வந்துள்ளதாகவும் கெயில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். யூஏஇ பயணத்திற்கு முன்பாக தான் 2 கொரோனா டெஸ்ட் எடுத்து இரண்டிலும் நெகட்டிவ் வந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, August 26, 2020, 18:45 [IST]
Other articles published on Aug 26, 2020
English summary
Chris Gayle tested negative twice for COVID-19, will leave for UAE to joining his Kings XI Punjab team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X