For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்போதே எல்லாம் முடிந்துவிட்டது.. மொத்தமாக கைவிரித்த கோச் பிளமிங்.. சிக்கலில் தோனி.. என்ன செய்வார்?

துபாய்: நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் முதல் பவர் பிளேவை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், மொத்த போட்டியும் அப்போதே முடிந்துவிட்டது என்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

நேற்று மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மிக மோசமாக தோல்வி அடைந்தது. வெற்றி பெறுவதற்காக கொஞ்சம் கூட போராடாமல் மொத்தமாக சிஎஸ்கே அணி மும்பையிடம் சரண் அடைந்தது.

இதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. ஐபிஎல் தொடரில் முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்துள்ளது.

தோல்வி

தோல்வி

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் பிளமிங் நேற்று பேட்டி அளித்தார். அதில், நேற்று சிஎஸ்கே அணிக்குள் இம்ரான் தாஹிரை கொண்டு வர வேண்டிய தேவை இருந்தது. இதன் காரணமாகவே நேற்று அணிக்குள் வாட்சன் நீக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப சாவ்லா நீக்கப்பட்டு ரூத்துராஜ் அணிக்குள் வந்தார். அதனால்தான் அவர் ஓப்பனிங் செய்தார்.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

நேற்று பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. அதனால் பவுலர்கள் டிபன்ட் செய்வதற்கு என்று பெரிய இலக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. சிஎஸ்கே அணியின் ஸ்பின் பவுலிங் இந்த சீசனில் சரியாக இல்லை. இந்த சீசன் முழுக்க சிஎஸ்கே ஸ்பின் பவுலிங் மோசமாக சொதப்பியது. இதனால் தாஹிர் அணிக்குள் வர வேண்டிய கட்டாயம் இருந்தது.

பேட்டிங் சொதப்பிவிட்டது

பேட்டிங் சொதப்பிவிட்டது

அவர்தான் உலகின் டாப் டி 20 ஸ்பின் பவுலர். இதனால் அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் அணியின் பேட்டிங் சொதப்பிவிட்டது. இதனால் பவுலிங்கில் மாற்றம் செய்தது பலன் அளிக்காமல் போய்விட்டது. இந்த தொடர் முழுக்க இப்படித்தான் இருந்தது.

பவர் பிளேவிலேயே முடிந்துவிட்டது

பவர் பிளேவிலேயே முடிந்துவிட்டது

நாங்கள் இந்த தொடரில் பல விஷயங்களை முயன்று பார்த்தோம். எல்லாம் எங்களுக்கு எதிராகவே முடிந்தது. சிஎஸ்கே அணிக்கு நேற்று போட்டி முதல் பவர் பிளேவிலேயே முடிந்துவிட்டது. நேற்று இளைஞர்களை களமிறக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் திட்டமிட்டபடி ரிசல்ட் வரவில்லை.

5 விக்கெட்டுகளை இழந்தது

5 விக்கெட்டுகளை இழந்தது

அதிலும் முதல் பவர் பிளேவில் 5 விக்கெட்டுகளை இழந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அது மிக மோசமான பவர் பிளே. நாங்கள் அப்படியே ஆடிப்போய்விட்டோம். அதை பார்க்கவே எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. இளம் வீரர்கள் நன்றாகவே இருந்தனர், ஆனால் அவர்களால் நேற்று திறமையை நிரூபிக்க முடியவில்லை.

ஆதரவு

ஆதரவு

அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். எனினும் மீதம் இருக்கும் மூன்றுக்கு போட்டிகளில் வெற்றிபெற தீவிரமாக உழைப்போம். முக்கியமான மாற்றங்களை வரும் காலத்தில் செய்ய வேண்டும்.வெற்றியோடு மூன்று போட்டிகளையும் முடிப்போம். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். அடுத்த சீசனை கருத்தில் கொண்டு இந்த சீசனில் முடிவுகளை இனி எடுப்போம், என்று பிளமிங் குறிப்பிட்டுள்ளார்.

அதே பேச்சு

அதே பேச்சு

கடந்த சில போட்டிகளாவே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பின் மிகவும் வருத்தமாக பிளமிங் பேசுகிறார். அணியை கை விடுவது போலவே பிளமிங் பேசுகிறார். இன்றும் கூட எல்லாம் செய்துபார்த்துவிட்டோம்.. எதுவும் செட்டாகவில்லை என்று பேசி உள்ளார். இதனால் பிளமிங் சிஎஸ்கேவிற்கு பயிற்சி அளிக்கும் ஆர்வத்தில் இருக்கிறாரா? இல்லையா என்று கேள்வி எழுந்துள்ளது.

தோனி

தோனி

தோனிதான் பிளமிங்கை சிஎஸ்கே பயிற்சியாளராக நியமிக்க அதிக ஆர்வம் காட்டினார். கடந்த 12 வருடமாக இவர்கள் உறவு சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்த வருடம் இருவரும் சேர்ந்து போட்ட பிளான் எதுவுமே வேலை செய்யவில்லை. இதனால் தோனி இனி என்ன செய்வார்? புதிய பயிற்சியாளரை அணிக்குள் கொண்டு வர திட்டமிடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, October 24, 2020, 11:17 [IST]
Other articles published on Oct 24, 2020
English summary
IPL 2020: Coach Fleming talks about CSK defeat against MI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X