For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை மன்னித்துவிடுங்கள்.. கண்ணீர் விட்ட வாட்சன்.. ரெய்னாவை விளாசும் சிஎஸ்கே பேன்ஸ்.. என்ன நடந்தது?

சென்னை: சென்னை அணியின் ஓப்பனிங் வீரர் வாட்சன் செய்த காரியம் ஒன்றால் தற்போது மூத்த வீரர் ரெய்னாவை சிஎஸ்கே பேன்ஸ் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

ஐபிஎல் போட்டி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வென்ற சிஎஸ்கே அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தது.

அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை தோல்வி அடைந்தாலும், விரைவில் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 5 நாட்களில் அடுத்த போட்டி நடக்க உள்ளதால் தற்போது சென்னை தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

கடந்த போட்டி எப்படி

கடந்த போட்டி எப்படி

இந்த நிலையில் கடந்த போட்டியில் சென்னை அணியின் ஓப்பனிங் வீரர் வாட்சன் செய்த காரியம் ஒன்று பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மற்றும் டெல்லி இடையில் நடந்த போட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த போட்டியில் வாட்சன் மொத்தம் 14 எடுத்து அவுட்டானார். இந்த போட்டிக்கு முதல் நாள்தான், வாட்சனின் பாட்டி காலமாகி உள்ளார்.

காலமானார்

காலமானார்

இவரின் அம்மாவின் அம்மா வயோதிகம் காரணமாக காலமாகிவிட்டார். சிறு வயதில், வாட்சனை வளர்த்தவர் இவர்தான். சரியாக போட்டிக்கு முதல் தினம் இவர் காலமானார். ஆனால் தனது பாட்டியின் மரண செய்தி கேட்ட பின்பும் கூட வாட்சன் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருக்கிறார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இது தொடர்பாக தனது குடும்பத்திற்கு கடிதம் எழுதிய வாட்சன், என்னை மன்னித்து விடுங்கள், உங்களுடன் நான் இப்போது இருக்க முடியவில்லை. உங்களுக்கு என் அன்புகளை அனுப்புகிறேன். பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், என்று வாட்சன் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு முன் எப்படி

இதற்கு முன் எப்படி

இதற்கு முன்பும் கடந்த சீசனில் வாட்சன் இதேபோல் சென்னை அணிக்கு உயிரை கொடுத்து ஆடினார். மும்பைக்கு எதிரான இறுதி போட்டியில் வாட்சனின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் வந்தது. ஆனாலும் ரத்தம் சொட்ட சொட்ட அவர் விளையாடினார். அதன்பின் ஒரு வாரம் இவரால் எழுந்து நடக்க முடியவில்லை .

மோசம் ரெய்னா

மோசம் ரெய்னா

இந்த நிலையில்தான் தற்போது ரெய்னா விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். இவர் சிஎஸ்கே அணியில் தற்போது விளையாடாமல் இருக்க பால்கனி பிரச்சனை முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. தோனிக்கு பால்கனி உள்ள ரூம் கொடுக்கப்பட்டது. எனக்கு கொடுக்கப்படவில்லை என்று ரெய்னா சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

சண்டை போட்டார்

சண்டை போட்டார்

இதனால் தோனிக்கும், ரெய்னாவிற்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும், ரெய்னாவிற்கும் கூட சண்டை வந்தது. இந்த ஐபிஎல் தொடரில் ரெய்னா கலந்து கொள்ளாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணம் என்கிறார்கள். ரெய்னாவின் குடும்ப உறுப்பினர்கள் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட காரணமும் இதற்கு பின் உள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

இதனால் தற்போது ரெய்னா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அங்கே வாட்சன் உயிரை கொடுத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார். தனது பாட்டி இறந்தாலும் மேட்சிற்கு வருகிறார்.ரத்தம் சொட்ட சொட்ட ஆடுகிறார். ஆனால உங்களுக்கு பால்கனிதான் பிரச்சனையா ? உடனே ஈகோவை விட்டுவிட்டு சிஎஸ்கே நிர்வாகத்துடன் பேசுங்கள் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

திரும்புங்கள்

திரும்புங்கள்

நீங்கள் திறமையான வீரர். ஈகோ பார்க்காமல் உடனே அணிக்கு திரும்புங்கள். நீங்கள் இல்லாமல் சிஎஸ்கே அணி மோசமாக திணறுகிறது. உடனே அணிக்கு திரும்பி, சிஎஸ்கே நிர்வாகம் உடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை சரி செய்யுங்கள என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

Story first published: Sunday, September 27, 2020, 12:39 [IST]
Other articles published on Sep 27, 2020
English summary
IPL 2020: CSK fans give thumbs up for Watson and lash out Raina for his ego.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X