For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூச்சு விட முடியாமல் தவித்த தோனி.. இர்பான் பதான் போட்ட ஒற்றை ட்வீட்.. ட்விட்டரில் பெரும் பரபரப்பு!

துபாய் : தோனி குறித்து இர்பான் பதான் பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தோனி வயதான நிலையில் பேட்டிங் செய்ய முடியாமல் திணறி வருகிறார். ஆனால், மற்ற வயதான வீரர்களை அவர் என்ன செய்தார் என குறிப்பிட்டு, பெயர் சொல்லாமல் கடும் விமர்சனம் செய்துள்ளார் பதான்.

இந்த ட்வீட் ரசிகர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

ஏமாற்றிய ஸ்மித், சாம்சன்.. மானத்தை காப்பாற்றிய அந்த 2 வீரர்கள்.. கோலி செம ஹேப்பி!ஏமாற்றிய ஸ்மித், சாம்சன்.. மானத்தை காப்பாற்றிய அந்த 2 வீரர்கள்.. கோலி செம ஹேப்பி!

மோசமான கட்டம்

மோசமான கட்டம்

தோனி தன் கிரிக்கெட் வாழ்வின் மிக மோசமான கட்டத்தில் இருக்கிறார். அவரால் நிலையாக பேட்டிங் செய்ய முடியவில்லை. ரன் குவித்தாலும் அது அணியின் வெற்றிக்கானதாக இல்லை. தோல்வி உறுதியான பின் அடிக்கும் சிக்ஸர்களால் என்ன பயன்? என்ற விமர்சனம் அவர் மீது முன் வைக்கப்படுகிறது.

சில நிமிடங்கள் ஓய்வு

சில நிமிடங்கள் ஓய்வு

அது மட்டுமின்றி அவரது உடல்நிலையும் முன்பு போல இல்லை. வேகமாக ரன் ஓடுவதில் தோனியை மிஞ்ச முடியாது என பெயர் பெற்ற அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டு ரன் சேர்த்து ஓடினால் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

சிரமம்

சிரமம்

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி மிகவும் சிரமப்பட்டார். அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 165 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்தது. 42 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்த நிலையில் அணியை காப்பாற்ற களமிறங்கினார் தோனி.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

ஆனால், அவரால் எளிதாக ரன் குவிக்க முடியவில்லை. அவர் நிதான ஆட்டம் ஆட தேவைப்படும் ரன் ரேட் எகிறியது. அவரது ஆட்டத்தால் ஓவருக்கு 20க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலைக்கு சென்றது சிஎஸ்கே அணி.

வெப்பம்

வெப்பம்

அப்போது தோனி அதிகமாக சிங்கிள் ரன்கள் ஓடத் துவங்கினார். பவுண்டரி அடிக்க முயன்றார். துபாயின் வெப்பமான சூழ்நிலையால் அவரது உடல்நிலை விரைவில் மோசமானது. பல முறை பேட், கிளவுஸ் மாற்றி தனக்கான ஓய்வு நேரத்தை பெற்றுக்க் கொண்டார்.

மாத்திரை அளிக்கப்பட்டது

மாத்திரை அளிக்கப்பட்டது

சில முறை ரன் ஓடிய உடன் கீழேயே அமர்ந்து விட்டார். அவருக்கு ஒரு முறை மாத்திரை கூட அளிக்கப்பட்டது. தோனியின் வயது தான் இதற்கு காரணம் என்ற பேச்சு எழுந்தது. இந்த நிலையில், இர்பான் பதான் அதை குத்திக் காட்டி ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இர்பான் பதான் ட்வீட்

இர்பான் பதான் ட்வீட்

இர்பான் பதான் ட்வீட் - சிலருக்கு வயது என்பது ஒரு எண் மட்டுமே. ஆனால், அடுத்தவர்களுக்கு அது அணியை விட்டு நீக்க ஒரு காரணம். இவ்வாறு பதிவிட்டு இருந்தார் இர்பான் பதான். தோனி வயதை வைத்து மற்ற வீரர்களை நீக்கியதை சுட்டிக் காட்டி பரபரப்பை கிளப்பினார்.

வயதான வீரர்களை நீக்கினார்

வயதான வீரர்களை நீக்கினார்

தோனி கேப்டன் ஆன அடுத்த ஆண்டு முதல் இந்திய அணியில் வயதான வீரர்களை ஓரங்கட்டி அணியை விட்டு நீக்கினார். கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன், சச்சின் என அந்தப் பட்டியல் நீளம். சில வீரர்கள் வேறு சில காரணங்களால் நீக்கப்பட்டனர்.

காரணமே இன்றி நீக்கப்பட்டவர்கள்

காரணமே இன்றி நீக்கப்பட்டவர்கள்

கௌதம் கம்பீர், இர்பான் பதான் போன்றோர் காரணமே இன்றி நீக்கப்பட்டனர். அவர்கள் தோனியுடன் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நீக்கப்பட்டதாக கூறப்படுவதும் உண்டு. அந்த வகையில் தான் இர்பான் பதான் ட்வீட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குத்திக் காட்டிய பதான்

குத்திக் காட்டிய பதான்

தோனி மற்றவர்களை வயதை காட்டி நீக்கினார். ஆனால், தனக்கு என வரும் போது மட்டும் வயது ஒரு எண் மட்டுமே என்று கூறுகிறார் என குத்திக் காட்டி இருக்கிறார் பதான். தோனி பெயரை சொல்லாமல் பதிவிடப்பட்டுள்ள இந்த பதிவு ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது.

Story first published: Saturday, October 3, 2020, 19:33 [IST]
Other articles published on Oct 3, 2020
English summary
IPL 2020 - CSK News : Irfan Pathan mentioned Dhoni’s age after CSK loss
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X