ரிப்போர்ட் கொடுங்கள்.. சிஎஸ்கே ரேடாரில் தோனி.. ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக செக்.. முழு பின்னணி!

துபாய்: சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்கள் 2020 ஐபிஎல் தொடரில் ஆடிய விதத்தை அந்த அணி நிர்வாகம் விரும்பவில்லை என்று தகவல்கள் வருகிறது. அணியில் இருக்கும் சில வீரர்களின் ஆட்டத்தை பார்த்து அணி நிர்வாகம் கோபத்தில் உள்ளதாக கூறுகிறார்கள்.

2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான தொடராக மாறியுள்ளது. எல்லா வருடமும் நன்றாக ஆடி பிளே ஆப் வரை செல்லும் சிஎஸ்கே இந்த முறை மிக மோசமாக சொதப்பி உள்ளது.

சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் ஒருபக்கம் ஷாக் ஆகி உள்ளனர். இன்னொரு பக்கம் அணி நிர்வாகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அதாவது சிஎஸ்கே வீரர்களின் ஆட்டத்தை பார்த்து அணி நிர்வாகம் கோபத்தில் உள்ளது என்று கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வீரர் என்று இல்லாமல் எல்லா வீரர்களின் மீதும் சிஎஸ்கே அணி நிர்வாகம் கோபத்தில் உள்ளது. எல்லா வீரர்களும் இந்த சீசனில் மோசமாக சொதப்பி உள்ளனர். சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு தனிப்பட்ட ஒரு நபரை குற்றஞ்சாட்ட முடியாது.

எப்படி

எப்படி

இந்த வருடம் அணியின் ஓப்பனிங் வீரர்களே சரியில்லை. முரளிவிஜய், வாட்சன், இருவரும் தொடக்கத்தில் சரியாக ஆடவில்லை. டு பிளசிஸ் சரியாக ஆடினாலும், முக்கியமான ஆட்டங்களில் கை கொடுக்கவில்லை. இன்னொரு பக்கம் அம்பதி ராயுடுவும் முழு பார்மில் இல்லை. சில போட்டிகளில் தேவையில்லாமல் அவுட் ஆனார்.

மோசம்

மோசம்

அதேபோல் பவுலிங் என்று எடுத்துக்கொண்டால் சாகர், கரன் சர்மா, சாவ்லா, பிராவோ என்று யாரும் சரியாக பந்து வீசவில்லை. இந்த சீசனில் சாம் கரன், ஜடேஜா மட்டுமே சிஎஸ்கேவில் கொஞ்சம் நம்பிக்கை அளித்தனர். இன்னொரு பக்கம் ஜாதவ் பெரிய அளவில் அணியில் எதுவும் செய்யவில்லை. அணிக்காக இவர் துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

தோனி

தோனி

சிஎஸ்கே கேப்டன் தோனியும் இந்த முறை சரியாக கேப்டன்சி செய்யவில்லை. பவுலிங் ரொட்டேஷன் சரியில்லை. அணி தேர்வு சரியில்லை. தோனியின் தனிப்பட்ட பேட்டிங் சரியில்லை என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. தோனி மீது சிஎஸ்கே நிர்வாகம் தனிப்பட்ட வகையில் அதிருப்தியில் உள்ளது என்று கூறுகிறார்கள்.

கண்காணிக்கிறது

கண்காணிக்கிறது

இந்த சீசனில் தோனி எடுத்த முடிவுகள் எல்லாமே அணிக்கு எதிராகவே சென்று இருக்கிறது. இதன் காரணமாகவே தற்போது சிஎஸ்கே இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது. இதனால் தோனியின் முடிவுகள் குறித்து விசாரிக்கவும் சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. தோனி சிஎஸ்கே கேப்டனாக அடுத்த வருடம் நீடிப்பது குறித்து அணி நிர்வாகம் விசாரணை செய்யும்.

நீடிப்பாரா?

நீடிப்பாரா?

சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு வீரர்கள் குறித்தும் இந்த தொடர் முடிந்த பின் ரிப்போர்ட் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய ரெய்னா, ஹர்பஜன் குறித்தும் விசாரிக்க உள்ளனர். இந்த ரிப்போர்ட்டை வைத்துதான் சிஎஸ்கே அணி யாரை எல்லாம் நீக்கிவிட்டு அடுத்த சீசனில் புதிய மாற்று வீரர்களை கொண்டு வரலாம் என்று முடிவு செய்யும்.

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

இதற்கான தீவிர ஆலோசனைகள் நடந்து வருகிறது. யாரை எல்லாம் நீக்கலாம், யாரை எல்லாம் அணியில் வைக்கலாமென்று விரைவில் முடிவு எடுக்கப்படும். பிளே ஆப் போட்டிகள் தொடங்கிய பின் இந்த ரிப்போர்ட் தயாரிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: CSK is planning to prepare a report on every individual player after the series.
Story first published: Friday, October 23, 2020, 11:28 [IST]
Other articles published on Oct 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X