வேண்டவே வேண்டாம்.. தோனியின் ஈகோவை சீண்டிய வார்த்தை.. மொத்தமாக நீக்கப்படும் 2 பேர்.. இன்று அதிரடி!?

துபாய்: மும்பைக்கு எதிராக இன்று ஷார்ஜாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான ஆட்டம் நடக்க உள்ளது. புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை பிடிக்க போகும் அணி எது என்பதற்கான கடுமையான போட்டி நடந்து வருகிறது.

இதுவரை 10 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்து இருக்கும் சிஎஸ்கே அணி இனி நடக்கும் போட்டிகளில் எல்லாம் வரிசையாக வெற்றிபெற்றால் ஒருவேளை பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு உருவாகும்.

இன்று நடக்கும்

இன்று நடக்கும்

இதனால் இன்று நடக்கும் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. இன்று வலுவான மும்பை அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இன்று மும்பையை வெல்வது கடினம் என்பதால் சிஎஸ்கே அணி இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. தொடர் தோல்விகளால் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இன்று சிஎஸ்கே அணிக்குள் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறுகிறார்கள். அணியில் இருக்கும் முக்கியமான இரண்டு வீரர்கள் நீக்கப்பட்டு புதிய இரண்டு வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இன்று சிஎஸ்கே அணி குறைவான ஸ்பீட் பவுலர்கள் உடன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.

முதல் நீக்கம்

முதல் நீக்கம்

இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியில் இருந்து கேதார் ஜாதவ் நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இவருக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் போதுமான வாய்ப்பை இதுவரை கொடுத்துவிட்டது. ஆனால் எந்த போட்டியிலும் இதுவரை கேதார் ஜாதவ் தன்னை நிரூபிக்கவில்லை. இதன் காரணமாக இன்று நடக்கும் போட்டியில் கேதார் ஜாதவ் கண்டிப்பாக ஆட மாட்டார். இனி வரும் போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது.

நீக்கம்

நீக்கம்

அடுத்த சீசனில் இவர் இருக்க மாட்டார் என்பதால்.. பெரும்பாலும் கடைசியாக ஆடிய ஆட்டம்தான் கடைசி போட்டி என்கிறார்கள். அதேபோல் அணியில் இருந்து ஜோஸ் ஹசல்வுட் கண்டிப்பாக நீக்கப்படுவார் என்று கூறுகிறார்கள். இவர் கடந்த போட்டியில் நன்றாக விளையாடினார். பிராவோவிற்கு மாற்றாக ஆடினார். ஆனால் சார்ஜாவில் நடக்கும் போட்டியில் ஸ்பின் பவுலர்கள் தேவை என்பதால் இன்று ஹஸல்வுட் ஆட மாட்டார்.

யார்

யார்

இதனால் இன்று நடக்கும் போட்டியில் இவர்கள் இருவரும் ஆட மாட்டார்கள். சிஎஸ்கே சார்பாக இன்று கேதார் ஜாதவிற்கு பதிலாக அணியில் என் ஜெகதீசன் எடுக்கப்படுவார் என்று கூறுகிறார்கள். கடந்த போட்டியில் ஜெகதீசனை எடுக்காமல் போனது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அதிலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தோனியின் "இளைஞர்களுக்கு ஸ்பார்க் இல்லை" என்ற கமெண்ட்டை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

விமர்சனம்

விமர்சனம்

தோனியை தனிப்பட்ட வகையில் இந்த விமர்சனங்கள் கடுமையாக பாதித்து உள்ளது. தன்னுடைய ஈகோவை இந்த விமர்சனங்கள் சீண்டி விட்டதாக தோனி நினைக்கிறார். இதனால் இன்று நடக்கும் போட்டியில் கண்டிப்பாக ஜெகதீசனுக்கு தோனி வாய்ப்பு கொடுப்பார் என்று கூறுகிறார்கள். அதேபோல் இன்னொரு பக்கம் தோனி இன்று இம்ரான் தாஹிருக்கும் வாய்ப்பு கொடுக்க உள்ளார்.

இம்ரான் தாஹிர்

இம்ரான் தாஹிர்

ஆம் ஹஸல்வுட் இடத்தில் இன்று இம்ரான் தாஹிர் பவுலிங் செய்ய உள்ளார். ஐபிஎல் தொடர் நடக்கும் அமீரக மைதானங்கள் எல்லாம் மொத்தமாக ஸ்லோ பிட்சாக மாறிவிட்டது. இதன் காரணமாக பெரும்பாலான போட்டிகள் தற்போது லோ ஸ்கோர் போட்டிகளாக உள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் ஸ்பின் பவுலிங் முக்கியம் என்பதால் இம்ரான் தாஹிர் அணியில் இருப்பார்.

ஆடும் அணி

ஆடும் அணி

இன்று ஆடும் அணியில் என். ஜெகதீசன், டு பிளசிஸ், சாம் கரன், வாட்சன், ராயுடு, ஜடேஜா, தோனி, இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர், சாஹர் ஆகியோர் இன்று ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது. கடைசி கட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: CSK may make few changes in the team today against MI in Sharjah.
Story first published: Friday, October 23, 2020, 8:36 [IST]
Other articles published on Oct 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X