For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன ஆனாலும் சரி.. இந்த 3 பேரை நீக்க மாட்டோம்.. சிஎஸ்கே போடும் ரீ-டெயின் திட்டம்.. மற்றவர்கள் கதி!?

துபாய்: சிஎஸ்கே அணியில் என்ன நடந்தாலும் மூன்று வீரர்களை நீக்க மாட்டோம் என்று அணி நிர்வாகம் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்விகளால் சிஎஸ்கே அணி துவண்டு போய் உள்ளது. அணி வீரர்களின் ஆட்டத்தை பார்த்து சிஎஸ்கே அணி நிர்வாகம் கடும் கோபத்தில் உள்ளது.

அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்களை இந்த சீசன் முடிந்த பின் அப்படியே கழட்டி விட சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

ஒவ்வொரு சீசனிலும் ஒரு அணி நிர்வாகம் 5 வீரர்களை தங்கள் அணிக்குள் தக்க வைக்க முடியும். அதாவது ஏலத்தில் வெளியே விடாமல், வேறு அணியை எடுக்க விடாமல் தங்கள் அணிக்குள் குறிப்பிட்ட வீரர்களை தக்க வைக்க முடியும். ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களையும் ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்க வைக்க முடியும். இந்த முறைக்கு ரீ-டெயின் என்று பெயர்.

எப்படி

எப்படி

இந்த ரீ-டெயின் முறை மூலம்தான் 2018ல் சிஎஸ்கே அணி ஜடேஜா, பிராவோ, தோனி போன்ற வீரர்களை அணிக்குள் தக்க வைத்தது. இந்த நிலையில் அடுத்த வருட ஐபிஎல் சீசனுக்கு முன் சின்ன ஏலம் ஒன்று நடக்க உள்ளது . பெரிய அளவில் முழுமையான ஏலம் நடக்க போவது இல்லை. சின்ன ஏலம் மட்டுமே வரும் சீசனுக்கு முன் நடக்க உள்ளது.

ஏலம்

ஏலம்

இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி முக்கியமான வீரர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்ப போகிறது. மொத்தம் மூன்று வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி ரீ-டெயின் செய்யும் என்கிறார்கள். ஜடேஜா, சாம் கரன், தோனி இவர்கள் மூவரை மட்டுமே சிஎஸ்கே ரீ-டெயின் செய்யும். இவர்களை கண்டிப்பாக சிஎஸ்கே விட்டுக்கொடுக்காது என்று கூறுகிறார்கள்.

வேறு யார்

வேறு யார்

பார்ம் மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்து டு பிளசிஸ், பிராவோ இருவரும் ரீ-டெயின் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற வீரர்கள் யாரும் ரீ-டெயின் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். வாட்சன், ஜாதவ், சாகர், தாஹிர் என்று யாருமே ரீ-டெயின் செய்யப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஹர்பஜனும் கண்டிப்பாக ரீ-டெயின் செய்யப்பட வாய்ப்பு இல்லை.

ரெய்னா

ரெய்னா

ஆனால் இதில் ரெய்னாவின் நிலை என்ன ஆகும் என்று உறுதியாக தெரியவில்லை. ரெய்னா இந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். அடுத்த சீசனில் இவர் சிஎஸ்கே அணிக்கு திரும்புவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்று தெரியவில்லை. இதனால் அடுத்த வருடம் சிஎஸ்கே அணி புதுமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, October 23, 2020, 15:16 [IST]
Other articles published on Oct 23, 2020
English summary
IPL 2020: CSK may retain these players before next season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X