For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வருஷம் பேபி சிட்டிங் செய்துவிட்டு.. டீமில் எடுத்தால் எப்படி.. ஒரு ஓவர் போடவே திணறிய வீரர்.. பாவம்!

துபாய்: சிஎஸ்கே அணியில் இன்று சேர்க்கப்பட்டு இருக்கும் மோனு குமார் மிக மோசமாக பவுலிங் செய்தார்.

இன்று பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

பேட்டிங் இறங்கிய பெங்களூர் முதலில் திணறினாலும் போக போக நன்றாக ஆடியது. 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி மொத்தம் 145 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இன்று ஆடிய சிஎஸ்கே அணியில் கூடுதலாக இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். அணியில் இருந்து ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹசல்வுட் நீக்கப்பட்டு இன்று ஆடும் அணியில் மோனு குமார் மற்றும் மிட்சல் சான்டர் சேர்க்கப்பட்டார். துபாய் ஸ்பின் பிட்ச் என்பதால் இன்று சிஎஸ்கே அணியில் மூன்று முழு நேர ஸ்பின் பவுலர்கள் இருந்தனர்.

எப்படி

எப்படி

இன்று சிஎஸ்கே அணியில் களமிறங்கிய மோனு குமார் 25 வயது நிரம்பியவர். ராஞ்சியை சேர்ந்த இவர், இந்திய அண்டர் 19 அணிக்காக ஆடிய உள்ளார். 2014ல் இந்திய அண்டர் 19 அணிக்காக உலகக் கோப்பை போட்டியில் ஆடி உள்ளார். இவருடன் அதே சமயத்தில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன், மன்தீப் சிங் போன்ற வீரர்கள் ஆடினார்கள்.

எந்த மேட்ச்

எந்த மேட்ச்

இவருடன் ஆடிய பலர் கிரிக்கெட் உலகில் வளர்ந்து உள்ள நிலையில் மோனு குமார் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 2010, 2011 ஆண்டுகளில் இவர் சிஎஸ்கே அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். 2018ல் மீண்டும் சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்ட இவர் ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

சென்னை அணியில் எடுக்கப்பட்ட இவர் 2 வருடமாக நெட் பயிற்சியில் மட்டுமே பவுலிங் செய்து வந்தார். அதேபோல் தோனியின் மகள் ஜிவாவை இவர்தான் பேபி சிட்டிங் செய்து வந்தார். பல முறை தோனி விமானத்தில் இருந்து வரும் போது மோனு குமார்தான் ஜிவாவை தூக்கி வந்து இருக்கிறார். அந்த அளவிற்குதான் இவர் அணியில் மதிக்கப்பட்டார்.

இன்று கஷ்டம்

இன்று கஷ்டம்

இன்று அணிக்குள் வந்த மோனு குமார் மிக மோசமாக திணறினார். ஒரு ஓவர் போடுவதற்கே இவர் மூச்சு வாங்கினார். 125 -130 கிமீ வேகத்தில்தான் பந்து வீசினார். ஆனால் அதற்கே இவருக்கு மூச்சு திணறியது. விக்கெட் எடுக்க வேண்டாம் .. ஆனால் ரன் செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் நிறைய பந்துகளை வைட் போட்டார்.

மோசம்

மோசம்

இன்று இவரின் பவுலிங்கை பார்த்து பலரும் கிண்டல் செய்தனர். என்ன இவர் இப்படி மூச்சு திணறுகிறார் என்று கிண்டல் செய்தனர். 2 வருடம் பெஞ்சில் உட்கார வைத்தால் இப்படித்தான் நடக்கும் என்று தோனியையும் பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

Story first published: Sunday, October 25, 2020, 17:03 [IST]
Other articles published on Oct 25, 2020
English summary
IPL 2020: CSK Monu Kumar not so well with his length and line in the match against RCB
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X