For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

135..140..147.. முதல் போட்டியிலேயே அதிரவைத்த சிஎஸ்கே ஜோஷ்.. 6.4 அடிக்கு ஓடி வந்த பவுலிங் பாகுபலி!

துபாய்: சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கும் ஜோஷ் ஹசல்வுட் முதல் போட்டியிலேயே பவுலிங் மூலம் சென்னை ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

சிஎஸ்கே அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்து வருகிறது.

சென்னைக்கு எதிரான போட்டியில் டெல்லி நிதானமாக ஆடி வருகிறது. விக்கெட்டுகளை இழக்க கூடாது என்பதால் டெல்லி மிகவும் நிதானமாக ஆடி வருகிறது.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் சென்னை அணியில் இருந்து லுங்கி நிகிடி நீக்கப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹசல்வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர். 2020 ஐபிஎல் போட்டிக்கு முன்புதான் இவர் சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

யார் இவர் ?

யார் இவர் ?

ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான டெஸ்ட் வீரர் இவர். 2014ல் இந்திய அணிக்கு எதிராக இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அசால்ட்டாக இவர் 146 -149 கிமீ வேகத்தில் பந்து வீச கூடியவர். 6.4 அடி உயரத்தில் இருக்கும் இவர் மிக எளிதாக பவுன்சர், யார்க்கர் வீசுவார்.

மாஸ்டர்

மாஸ்டர்

அதிலும் இவர் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். கஷ்டமான நேரங்களில் கூலாக ஆட கூடியவர். முக்கியமாக இவர் சிறந்த பார்மில் இருக்கிறார். பெரிய அளவில் இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பார்ம் இழந்தது இல்லை. அந்த வகையில் சென்னை அணிக்கு இது நம்பிக்கை அளிக்கும் விஷயம்.

சென்னை போட்டி

சென்னை போட்டி

இந்த நிலையில் சென்னை அணிக்காக இன்று இவர் வீசிய இரண்டாவது ஓவரில் 130, 133, 140, 146, 147 கிமீ வேகத்தில் பந்து வீசினார். மிக எளிதாக 147 கிமீ வேகத்தில் பந்துகளை வீசுகிறார். அதேபோல் இவர் 2 ஓவர் வீசி வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் இன்று இவர் டெத் ஓவர்களில் பவுலிங் போட வாய்ப்புள்ளது.

Story first published: Friday, September 25, 2020, 20:10 [IST]
Other articles published on Sep 25, 2020
English summary
IPL 2020: CSK player Josh Hazlewood impresses fans in his first match against Delhi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X