தன்னை தூக்கினாலும் பரவாயில்லை.. துணிந்து குரல் கொடுத்த வாட்சன்.. ப்பா எவ்வளவு பெரிய மனசு!

துபாய்: அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை நீக்கினாலும் பரவாயில்லை என்கிற ரீதியில் மூத்த வீரர் வாட்சன் முக்கியமான விஷயம் ஒன்றை பேசி இருக்கிறார்.

சிஎஸ்கே அணி மிகப்பெரிய மாற்றங்களுக்கு தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது. டாடிஸ் ஆர்மி என்று அழைக்கப்பட்டு வந்த சிஎஸ்கேவில் தற்போது மூத்த வீரர்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக அணிக்குள் இளைஞர்கள் கொண்டு வரப்படுகிறார்கள். இளைஞர்களுக்கு அணியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.

எப்படி

எப்படி

அதிலும் ஓப்பனிங் வீரர்களை மாற்றும் முடிவில் கேப்டன் தோனி இருக்கிறார். வாட்சனை நீக்கிவிட்டு அங்கு ரூத்துராஜை நிரந்தரமாக களமிறக்க தோனி முடிவு செய்துள்ளார். இதனால் வருகிற சீசனில் வாட்சன் சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார் என்கிறார்கள்.

வாட்சன் எப்படி

வாட்சன் எப்படி

இந்த நிலையில்தான் வாட்சனே தற்போது ரூத்துராஜ் குறித்து பேசி உள்ளார். அதில், ரூத்துராஜ் சிறப்பாக ஆடுகிறார். களத்தில் ரூத்துராஜ் மிகவும் அமைதியாக இருக்கிறார். டென்ஷன் ஆவது இல்லை.

சந்தோசம்

சந்தோசம்

அதேபோல் அவர் ஷாட்களை முன்பே திட்டமிடுவது இல்லை. பந்து வருவதை பார்க்கிறார். வேகமாக செயல்பட்டு எப்படி அடிக்க வேண்டும் என்று அடிக்கிறார். அவருடன் ஆடுவது சந்தோசமாக இருக்கிறது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே ரசிகர்களும் இவரை விரும்ப தொடங்கி உள்ளனர். அவர் மிகவும் இளம் வீரர். சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ஒருவர் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார், என்று வாட்சன் புகழ்ந்து உள்ளார். அதாவது தன்னுடைய இடத்தை நிரப்ப போகும் வீரரை வாட்சன் புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

காலியாகும்

காலியாகும்

ரூத்துராஜ் வந்தால் தனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று வாட்சனுக்கு தெரியும். ஆனாலும் துணிந்து ரூத்துராஜுக்காக வாட்சன் குரல் கொடுத்துள்ளார். அவரை சூப்பர் ஸ்டார் என்று பாராட்டி இருக்கிறார். உண்மையில் வாட்சன் பெரிய மனுஷன்தான்.. அவருக்கு பெரிய மனசு என்று பலர் பாராட்டி உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: CSK player Watson praised Ruturaj as a super star
Story first published: Friday, October 30, 2020, 17:44 [IST]
Other articles published on Oct 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X