For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனா பரிசோதனைகள்... சிஎஸ்கே வீரர்கள் தோனி, மோனு குமாரின் மாதிரிகள் சேகரிப்பு

ராஞ்சி :யூஏஇயில் அடுத்த மாதம் 19ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், வரும் 20ம் தேதியையொட்டி 8 ஐபிஎல் அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்களது பயணத்தை துவக்கவுள்ளனர்.

Recommended Video

தோனியைப் பற்றி CSK வெளியிட்ட New update

இந்த பயணத்திற்கு முன்னதாக அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் மோனு குமார் ஆகியோரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

சிபிஎல்லை விட்டு வெளியேறிய ராம்நரேஷ்... சொந்த காரணங்கள்தானாம்.. ஜமய்க்கா தாலவாஸ்சிபிஎல்லை விட்டு வெளியேறிய ராம்நரேஷ்... சொந்த காரணங்கள்தானாம்.. ஜமய்க்கா தாலவாஸ்

அபுதாபி, ஷார்ஜா, துபாயில் போட்டிகள்

அபுதாபி, ஷார்ஜா, துபாயில் போட்டிகள்

கொரோனா பரவல் இந்தியாவில் அதிகமாக உள்ள நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரையில் அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. இந்த தொடரை பயோ பபள் முறையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

பிசிசிஐ விதிமுறையில் அறிவுறுத்தல்

பிசிசிஐ விதிமுறையில் அறிவுறுத்தல்

வரும் 20ம் தேதியையொட்டி அனைத்து அணிகளும் தங்களது யூஏஇ பயணத்தை திட்டமிட்டுள்ள நிலையில், முன்னதாக அணி வீரர்களுக்கு இருமுறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிசிசிஐ தனது விதிமுறையில் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து 8 அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தோனி, மோனு குமார் மாதிரிகள் சேகரிப்பு

தோனி, மோனு குமார் மாதிரிகள் சேகரிப்பு

இதனிடையே, சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அணி வீரர் மோனு குமார் ஆகியோரின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. குருநானக் மருத்துவமனை மற்றும் ரிசர்ச் மையத்தின் மருத்துவ குழுவினர் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்கு சென்று இந்த மாதிரிகளை சேகரித்துள்ளதாக அதன் மைக்ரோ பிராக்சிஸ் லாபின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

21ம் தேதி யூஏஇ பயணம்

21ம் தேதி யூஏஇ பயணம்

பரிசோதனை முடிவு இன்று தெரியவரும். இந்த பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வரும்பட்சத்தில் வரும் 14ம் தேதி சென்னைக்கு இவர்கள் இருவரும் பயணம் மேற்கொள்வார்கள். இதையடுத்து சென்னையில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்கும் இவர்கள் தொடர்ந்து 21ம் தேதி சார்ட்டர்ட் விமானம் மூலம் யூஏஇக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

Story first published: Thursday, August 13, 2020, 20:54 [IST]
Other articles published on Aug 13, 2020
English summary
Both Dhoni and Kumar will leave for Chennai on August 14 if they are tested negative
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X