For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த விஷயத்துல மட்டும் சிஎஸ்கேவை அடிச்சுக்கவே முடியாது.. போன வருஷமும் இதே தான் நடந்தது!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் அதிக விக்கெட், அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

அந்தப் போட்டியில் ஆடிய விதம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினாலும் அந்த அணியின் ரசிகர்கள் விட்டுக் கொடுக்காமல் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

எவ்வளவு புறக்கணிப்பு.. அரசியல்.. சென்னை மேட்சை பார்த்து கொதித்து போன கம்பீர்.. கடும் குற்றச்சாட்டு!எவ்வளவு புறக்கணிப்பு.. அரசியல்.. சென்னை மேட்சை பார்த்து கொதித்து போன கம்பீர்.. கடும் குற்றச்சாட்டு!

வெறுப்பேற்றும் ரசிகர்கள்

வெறுப்பேற்றும் ரசிகர்கள்

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி முடிவுக்கு பின் வெளியான புள்ளிவிவரத்தில் சிஎஸ்கே வீரர்கள் முன்னிலையில் இருப்பதை குறிப்பிட்டு மற்ற அணி ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு சுமாராக இருந்தது. அந்த மைதானம் சிறியது என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் குவித்தது. ஆனால், பந்துவீச்சை விட சிஎஸ்கே அணி சேஸிங் செய்த விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தோனி திட்டம்

தோனி திட்டம்

கேப்டன் தோனி மிக நிதானமாக சேஸிங் செய்ய திட்டமிட்டார். பாப் டுபிளெசிஸ், ஜாதவ் மத்திய ஓவர்களில் மிக நிதானமாக ரன் சேர்த்து வந்தனர். பவுண்டரி அடிக்க முயற்சி செய்யவில்லை. அதன் பின் டுபிளெசிஸ் அதிரடி ஆட்டம் ஆடினாலும், தோனி நிதான ஆட்டம் ஆடி தோல்வியை உறுதி செய்தார்.

நெட் ரன் ரேட்

நெட் ரன் ரேட்

சிஎஸ்கே அணி 217 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட முடியாது என்பதால் நெட் ரன் ரேட் இழப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். தோனி வெற்றிக்கு போராடாமல், தோல்வி உறுதியான பின் கடைசி ஓவரில் மூன்று சிக்ஸ் அடித்ததும் சர்ச்சை ஆனது.

சிஎஸ்கே வீரர்கள் முன்னிலை

சிஎஸ்கே வீரர்கள் முன்னிலை

இப்படி தோல்வி மற்றும் சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, சிஎஸ்கே ரசிகர்கள் எதற்காகவும் தங்கள் அணியை விட்டுக் கொடுப்பதாக இல்லை. நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே ஆன போட்டியின் முடிவுக்கு பின் ஐபிஎல் தொடரில் இதுவரை வீரர்களின் செயல்பாடு பற்றிய புள்ளிவிவரம் வெளியானது.

சாம் கர்ரன்

சாம் கர்ரன்

இதில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சாம் கர்ரன் இருக்கிறார். அவர் இரண்டு போட்டிகளில் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 8 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்துள்ளார். அவரது சராசரி 15.25 ஆகும்.

லுங்கி நிகிடி

லுங்கி நிகிடி

அதே பட்டியலில் இரண்டாம் இடத்திலும் சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் தான் இடம் பெற்றுள்ளார். லுங்கி நிகிடியும் இரண்டு போட்டிகளில் 4 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவரது சராசரி 23.50 ஆகும்.

பாப் டுபிளெசிஸ்

பாப் டுபிளெசிஸ்

அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சிஎஸ்கே அணியின் பாப் டுபிளெசிஸ் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இரண்டு போட்டிகளில் 130 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 130 ஆகும். ஒரு போட்டியில் நாட் அவுட்டாக ஆடிய அவர், இரண்டு போட்டிகளிலும் அரைசதம் கடந்திருந்தார்.

கடந்த சீசன்

கடந்த சீசன்

கடந்த சீசனில் பேட்டிங்கில் சிஎஸ்கே வீரர்கள் யாரும் முதல் இடத்தில் தொடர்ந்து இடம் பெறவில்லை. ஆனால், பந்துவீச்சில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர் முதல் இடத்தை மாற்றி, மாற்றி பிடித்து வந்தனர். 2019 சீசனில் முடிவில் இம்ரான் தாஹிர் அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு போட்டிகளில்..

இரண்டு போட்டிகளில்..

இந்த சீசனில் சிஎஸ்கே வீரர்கள் முதல் இடத்தில் இருப்பதாக அந்த அணியின் ரசிகர்கள் பெருமை பேசினாலும், சிஎஸ்கே தவிர மும்பை இந்தியன்ஸ் மட்டுமே இரண்டு போட்டிகளில் அடி உள்ளது. மற்ற அணிகளும் தங்கள் இரண்டாவது போட்டியில் ஆடி முடிக்கும் போது சிஎஸ்கே வீரர்கள் முதல் இடத்தை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, September 24, 2020, 14:37 [IST]
Other articles published on Sep 24, 2020
English summary
IPL 2020 News in Tamil : CSK players Faf du Plessis and Sam Curran tops most runs, most wickets list
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X