For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மரண அடி.. 200 கோடி அவுட்.. சிஎஸ்கேவுக்கு ஒரே மாதத்தில் ஆப்பு வைத்த கொரோனா.. கசிந்த தகவல்!

சென்னை : ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேர் மதிப்பு சரிவின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை இழந்துள்ளது.

Recommended Video

IPL 2020 |CSK shares lost nearly 200 crores in few months

கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது. அதன் காரணமாகவே சிஎஸ்கே அணியின் ஷேர் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.

அந்த விஷயத்தில் கங்குலி செஞ்ச அளவுக்கு தோனி, கோலி செய்யலை.. உண்மையை உடைத்த யுவராஜ் சிங்!அந்த விஷயத்தில் கங்குலி செஞ்ச அளவுக்கு தோனி, கோலி செய்யலை.. உண்மையை உடைத்த யுவராஜ் சிங்!

200 கோடி சரிவு

200 கோடி சரிவு

கடந்த சில மாதங்கள் முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேர் மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய் என் கணிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் நிலைகுலைந்து உள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் ஷேர் மதிப்பு 800 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

அன்லிஸ்ட்டட் ஷேர்

அன்லிஸ்ட்டட் ஷேர்

சிஎஸ்கே அணி 2015இல் அன்லிஸ்ட்டட் ஷேர் ஆக தன் அணியின் பங்குகளை மாற்றியது. ஷேர்களை பொது மக்கள் வாங்கும் வகையில் மாற்றிய முதல் ஐபிஎல் அணியாக இருந்தது சிஎஸ்கே. இந்த ஷேர்களின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்தது.

நவம்பர் 2018 நிலை

நவம்பர் 2018 நிலை

நவம்பர் 2018இல் சிஎஸ்கே அணியின் ஒரு ஷேர் விலை ரூ.13 முதல் 15 வரை இருந்தது. அப்போது மொத்த ஷேர் மதிப்பு 450 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிஎஸ்கே அணியின் ஷேர் மதிப்பு மேலும் உயர்ந்தது.

விலையில் முன்னேற்றம்

விலையில் முன்னேற்றம்

கடந்த சில மாதங்கள் முன்பு ஒரு ஷேரின் விலை 30 ரூபாயாக இருந்தது. அப்போது சிஎஸ்கே அணியின் ஷேர் மொத்த மதிப்பு 1,000 கோடியாக இருந்தது. இது அந்த அணியின் பிராண்ட் மதிப்பு உச்சத்தை எட்டியதை உணர்த்தியது.

விலை சரிவு

விலை சரிவு

இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் ஷேர் 24 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. ஒரு ஷேருக்கு 6 ரூபாய் சரிந்துள்ள நிலையில், மொத்த ஷேர் மதிப்பு தடாலடியாக 200 கோடி குறைந்து 800 கோடி ஆகி உள்ளது. இது பெரிய இழப்பாகும்.

காரணம் ஐபிஎல் நிலை

காரணம் ஐபிஎல் நிலை

சிஎஸ்கே அணியின் ஷேர் மதிப்பு இத்தனை வேகமாக சரிய முக்கிய காரணம் ஐபிஎல் தொடர் தான். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா? என்ற ஊசலாட்டத்தில் உள்ளது. பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் குழப்பத்தில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சம்

கொரோனா வைரஸ் அச்சம்

மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த திட்டம் என்ன என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவது மிக மிக கடினமாக மாறி உள்ளது.

தொடர் நடக்க வாய்ப்பு குறைவு

தொடர் நடக்க வாய்ப்பு குறைவு

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களில் பல மடங்காக மாறி உள்ளது. 1600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலை திடீரென மாறாது என்பதால் ஐபிஎல் தொடர் அடுத்த சில மாதங்கள் வரை நடைபெறுவது கடினமே.

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி - 809 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் - 732 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி - 629 கோடியாக இருந்தது. அந்த மதிப்பு அனைத்தும் தற்போது கடும் சரிவை சந்திக்கும்.

ஐபிஎல் மதிப்பு சரியும்

ஐபிஎல் மதிப்பு சரியும்

அதே போல, ஐபிஎல் பிராண்ட் மதிப்பு கடந்த 2019இல் 48,000 கோடியாக இருந்தது. அந்த மதிப்பும் இந்த ஆண்டு சரிவை சந்திக்கும். கொரோனா வைரஸ் கடும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஐபிஎல் மிகப் பெரும் இழப்பை சந்திக்க உள்ளது.

Story first published: Wednesday, April 1, 2020, 12:52 [IST]
Other articles published on Apr 1, 2020
English summary
IPL 2020 : Unlisted CSK shares lost nearly 200 crores in few months due to coronavirus outbreak.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X