அவர் சொன்னதை கேட்டீர்களா? தோனியை மதிக்காத சிஎஸ்கே நிர்வாகம்.. இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது!

துபாய்: கேப்டன் தோனியின் பேச்சை மதிக்காமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்த ஒரு முடிவுதான் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. மிக மோசமான ஆட்டம் காரணமாக நேற்று மும்பையிடம் தோல்வி அடைந்து பிளே ஆப் செல்ல இருந்த கடைசி வாய்ப்பையும் இழந்துவிட்டது.

வாழ்வா, சாவா என்ற நிலையில்தான் நேற்று மும்பையை சிஎஸ்கே எதிர்கொண்டது. நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது. ஆனால் மும்பை அணி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் எளிதாக 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் மோசமான தோல்விக்கு அணியில் ஒப்பனர்கள் சரியாக ஆடாமல் போனது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்று ஓப்பனிங் இறங்கிய ரூத்துராஜ் சரியாக ஆடவில்லை. அதேபோல் மீண்டும் வாய்ப்பு கிடைத்த என் ஜெகதீசனும் நேற்று சரியாக பேட்டிங் செய்யவில்லை. இரண்டு பேருமே நேற்று டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.

வாட்சன்

வாட்சன்

நேற்று போட்டியில் சிஎஸ்கே அதிகம் மிஸ் செய்தது என்று பார்த்தால் அது வாட்சன் இன்னிங்ஸ்தான். இதுபோல் அதிக விக்கெட் விழுந்தால், வாட்சன் திடீர் என்று பொறுமையாக ஆடி விக்கெட் விழுவதை கட்டுப்படுத்துவார். ரன் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் , பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் விழுவதை கட்டுப்படுத்துவார். ஆனால் நேற்று அப்படி யாருமே செய்யவில்லை.

காரணமா

காரணமா

தோனியும் கூட தேவையில்லாமல் சிக்ஸ், பவுண்டரி அடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நேற்று வாட்சன் இருந்திருந்தால் கண்டிப்பாக சிஎஸ்கே இவ்வளவு மோசமாக ஆடி இருக்காது. விக்கெட் விழுவதை நிறுத்தி இருப்பார். 10-20 ரன்களாவது கூடுதலாக அடித்து இருப்பார். ஆனால் நேற்று வாட்சன் இல்லை. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு அணி நிர்வாகம், தோனியின் பேச்சை பல இடங்களில் கேட்காமல் போனதுதான் காரணம் என்று கூறுகிறார்கள்.

பார்ம் இல்லை

பார்ம் இல்லை

முக்கியமாக அணியில் 4வது இடத்தில் இறங்கும் எண்ணம் தோனிக்கு முதலில் இல்லை. முதல் 3 போட்டிகளில் 6-7 இடங்களில் இறங்கவே தோனி விரும்பினார். ஆனால் அணி கொடுத்த அழுத்தம், முன்னாள் வீரர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தோனி கடைசி கட்டத்தில் இறங்குவதை தவிர்த்துவிட்டு 4வது இடத்தில் பேட்டிங் இறங்கினார். தான் பார்மில் இல்லை என்று தோனிக்கு தெரியும்.

அழுத்தம்

அழுத்தம்

அதனால்தான் தனக்கு முன்பாக ஜடேஜாவை பேட்டிங் இறங்கி ஆட வைத்தார். ஆனால் அணி கொடுத்த அழுத்தம் காரணமாக 4வது இடத்தில் பேட்டிங் இறங்கியவர் மிக மோசமாக சொதப்பினார். அந்த இடத்தில் பேட்டிங் செய்த தோனி ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. ஜடேஜா இதனால கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல் நேற்று அணிக்குள் இளம் வீரர்களை எடுப்பதில் தோனிக்கு விருப்பம் இல்லை.

ஸ்பார்க்

ஸ்பார்க்

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று அவர் வெளிப்படையாக கூறினார். பயிற்சி ஆட்டங்களில் இளம் வீரர்கள் மோசமாக ஆடியதை பார்த்துதான் தோனி இப்படி வெளிப்படையாக கூறினார். ஆனால் தோனியின் பேச்சை மதிக்காமல் அணியில் இளம் வீரர்களை எடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் சார்பாக அழுத்தம் வைக்கப்பட்டது. அதிலும் ஜெகதீசனை எடுக்க வேண்டும் என்று கடுமையாக அழுத்தம் வைக்கப்பட்டது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

தோனியின் பேட்டியை மீறி நேற்று சிஎஸ்கேவில் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அது சிஎஸ்கே அணிக்கு எதிராக மாறியது. சிஎஸ்கேவில் ரூத்துராஜை மீண்டும் களமிறக்குவதில் தோனிக்கு விருப்பம் இல்லை. ஜெகதீசன் கூட ஓகே, இரண்டு போட்டிகளில் ஆடிய ரூத்துராஜ் சரியாக ஆடவில்லை. அவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று தோனி உறுதியாக இருந்துள்ளார்.

எதிரான முடிவு

எதிரான முடிவு

ஆனால் அதையும் மீறி நேற்று ரூத்துராஜ் அணியில் எடுக்கப்பட்டு, பின் அவர் டக் அவுட் ஆனார். இந்த சீசன் முழுக்க வாட்சன் போன்ற வீரர்களுக்கு தோனி சப்போர்ட் செய்தார். சிஎஸ்கே இது போல மோசமாக தோல்வி அடைய கூடாது என்றுதான் தோனி மூத்த வீரர்களுக்கு சப்போர்ட் செய்தார். எல்லாம் முறையும் டிரெஸ்ஸிங் ரூம் குறித்தும், அங்கு நிலவ வேண்டிய இணக்கம் குறித்தும் பேசினார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதற்கு எதிராகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவுகளை எடுத்தது. வாட்சன் நீக்கப்பட்டது, தேவையில்லாமல் பேட்டிங் ஆர்டரை மாற்றி மொத்தமாக சொதப்பியது. பவுலிங் ஆர்டரை சரியாக தேர்வு செய்யாதது. ரெய்னா, ஹர்பஜனுக்கு மாற்று வீரர்களை எடுக்காதது என்று என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் நிறைய தவறுகளை செய்துள்ளது. இப்போது பிளே ஆப் வாய்ப்பையும் இழந்துள்ள நிலையில் சிஎஸ்கேவிற்கு இந்த சீசனில் கதை முடிந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: CSK should have followed Dhoni's spark comment before team selection.
Story first published: Saturday, October 24, 2020, 10:54 [IST]
Other articles published on Oct 24, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X