For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீசனுக்கு முன்பு அவரை அனுப்பியது நினைவு இருக்கா? தோனியை துரத்தும் அந்த பிரச்சனை.. எவ்வளவு திமிர்!

துபாய்: முக்கியமான வீரர் ஒருவரை அணியில் இருந்து நீக்கியதுதான் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமாக சொதப்பி உள்ளது. அடுத்தடுத்து வரிசையாக தோல்விகளை சந்தித்து ஏமாற்றம் அடைந்து உள்ளது.

தொடர் தோல்விகளால் சிஎஸ்கே துவண்டு போய் உள்ளது. சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு மோசமான பேட்டிங் ஆர்டர் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது ஓப்பனிங் சொதப்பினால் மிடில் ஆர்டரில் சரியாக ஆடுவதற்கு வீரர்கள் இல்லாமல் சிஎஸ்கே கஷ்டப்பட்டு வருகிறது. ஓப்பனிங் வீரர்கள் இந்த தொடரில் சரியாக ஆடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

ஒரு போட்டியில் வாட்சன் ஆடினால், இன்னொரு போட்டியில் டு பிளசிஸ் ஆடுகிறார். இரண்டு பேரும் மொத்தமாக சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுவது இல்லை. ஓப்பனிங் இறங்கி ஆடிய வரும் சாம் கரனும் பெரிய அளவில் கடைசி வரை ஆடுவது கிடையாது. இதனால் சிஎஸ்கே அணி மொத்தமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி உள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இன்னொரு பக்கம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிஎஸ்கேவில் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. தோனி கடந்த 10 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 40+ ரன்களை எடுத்துள்ளார். வேறு எந்த போட்டியிலும் தோனி அதிரடி காட்டவில்லை. அதேபோல் மிடில் ஆர்டரில் இறங்கும் கேதார் ஜாதவ் ஏன் அணியில் இருக்கிறார் என்றே தெரியாத நிலை உள்ளது.

ஜாதவ்

ஜாதவ்

மிடில் ஆர்டரில் ஜடேஜா மட்டுமே கொஞ்சம் நிலையாக ஆடி வருகிறார். சிஎஸ்கேவின் இந்த மிடில் ஆர்டர் பிரச்னையை கடந்த சீசன்களில் சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்கள்தான் தீர்த்து வந்தனர். ஒரு சில போட்டிகளில் ஆடினாலும் தேவையான மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப்பை சாம் பில்லிங்ஸ்தான் அமைத்துக் கொடுத்தார். ஆனால் இப்போது அப்படி ஒரு பேட்ஸ்மேன் சிஎஸ்கேவில் இல்லை.

சாம் பில்லிங்ஸ்

சாம் பில்லிங்ஸ்

2020 ஐபிஎல் தொடருக்கு சாம் பில்லிங்ஸ் சிஎஸ்கேவில் இருந்து வெளியேறினார். ஆனால் அவருக்கு பதிலாக நல்ல மிடில் ஆர்டர் வீரரை அணியில் எடுக்கவில்லை. அப்போது தோனி எடுத்த நடவடிக்கை தற்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பி உள்ளது. தோனி சிஎஸ்கேவில் இருந்து வெளியேறிய யாருக்கும் மாற்றும் வீரர்களை எடுக்கவில்லை. எதோ ஒரு நம்பிக்கையில் தோனி செயல்பட்டது அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

எதிரியாக மாறியது

எதிரியாக மாறியது

சிஎஸ்கே அணி இதேபோல் திமிராக நிறைய முடிவுகளை இந்த சீசனில் மேற்கொண்டது. பல முக்கியமான வீரர்கள் வெளியில் சென்ற போதும் கூட அவர்களுக்கு சரியான மாற்று வீரர்களை அணியில் எடுக்கவில்லை. அது எல்லாம் தற்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

Story first published: Friday, October 23, 2020, 19:21 [IST]
Other articles published on Oct 23, 2020
English summary
IPL 2020: CSK shouldn't have sent batsmen like Sam Billings out of the team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X