For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதுக்காவது அனுமதி கொடுப்பீர்களா?.. திடீரென்று கேட்ட தோனி.. தொடக்கத்திலேயே தல செய்த செம சம்பவம்!

அபுதாபி: சென்னை மற்றும் மும்பைக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முரளி கார்த்திக்கிடம் தோனி எழுப்பிய சில கேள்விகள் பெரிய வைரல் ஆகியுள்ளது.

சென்னை மற்றும் மும்பைக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது அபுதாபியில் நடந்து வருகிறது. சென்னை அணி தொடக்கத்தில் இருந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரோஹித், டீ காக், திவாரி, சூர்யா குமார் யாதாவென்று வரிசையாக முக்கியமான வீரர்கள் மும்பையில் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். பாண்டியா மட்டும் கொஞ்ச நேரம் அதிரடியாக ஆடி வந்தார்.

என்னங்க பாதி தான் இருக்கு.. இருந்தாலும் செம ஸ்டைல்.. தோனியின் புது தாடி.. வைரல்!என்னங்க பாதி தான் இருக்கு.. இருந்தாலும் செம ஸ்டைல்.. தோனியின் புது தாடி.. வைரல்!

டாஸ் வென்றார்

டாஸ் வென்றார்

இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் போடும் போதே தோனி தன்னுடைய அதிரடியை காட்ட தொடங்கிவிட்டார். டாஸ் போட்ட போது, முரளி கார்த்திக் தோனியை பார்த்து கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று கூறினார். லாக்டவுன் விதிமுறைகள் உள்ளது. அதனால் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். தூரத்தில் நின்றபடியே பதில் சொல்லுங்கள் என்று கூறினார்.

ஸ்லீப்

ஸ்லீப்

இதற்கு காமெடியாக பதில் அளித்த தோனி, அருகருகே நிற்க கூடாதா?அப்படி என்றால் கீப்பருக்கு அருகே ஸ்லிப் நிற்க்க அனுமதி உண்டா. சமூக இடைவெளி என்று அதற்கும் தடை போடுவீர்களா, அல்லது அனுமதி கொடுப்பீர்களா என்று கேட்டார். இதற்கு முரளி கார்த்திக் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். அதன் பின் உங்கள் உடலை நன்றாக ஏற்றிவிட்டீர்கள் என்று முரளி கார்த்திக் கூறினார்.

ஜிம் காரணம்

ஜிம் காரணம்

அதற்கு தோனி, ஆம் லாக்டவுன் நேரத்தில் உடலை ஏற்றிவிட்டேன். லாக்டவுனில் செய்த உடற்பயிற்சி காரணமாக உடலை ஏற்றி உள்ளேன், என்று குறிப்பிட்டார். அதனபின் நாங்கள் பவுலிங் தேர்வு செய்து இருக்கிறோம். நேரம் செல்ல செல்ல பனி அதிகம் ஆகும். குளிர் அதிகம் ஆகும். இதனால் கடைசி நேரத்தில் குளிரில் பீல்டிங் செய்வது கடினம்.

மிக கடினம்

மிக கடினம்

அதேபோல் பவுலிங் செய்வதும் கடினம். அதனால் இப்போதே பவுலிங் செய்கிறோம், குளிர் காரணமாக, பந்து ஈரமாகும். இதனால் பந்து வழுக்கி செல்லும். என்று தோனி குறிப்பிட்டார். தோனி குறிப்பிட்டதஹு போலவே தற்போது பிட்ச் முழுக்க முழுக்க சென்னை பவுலர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.

Story first published: Saturday, September 19, 2020, 21:09 [IST]
Other articles published on Sep 19, 2020
English summary
IPL 2020: CSK skipper Dhoni asked about slips for social distancing during toss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X