For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"அவர் பேசுவதே இல்லை".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா? தேவையில்லாத சர்ச்சை

துபாய்: நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பின் தோனி அளித்த பேட்டி பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

நேற்று கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிகவும் திரில்லாக சென்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா 172 ரன்கள் எடுத்தது.

அதன்பின் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ரூத்துராஜ், ஜடேஜா, ராயுடு அதிரடி ஆட, சிஎஸ்கே அணி 178 ரன்கள் எடுத்து வென்றது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் தோனி அளித்த பேட்டி பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அவர் தனது பேச்சில், போட்டியில் இப்போதுதான் முதல் முறையாக வானிலை எங்களுக்கு சாதகமாக சென்றது. இந்த சீசனில் ஜடேஜா சிறப்பாக ஆடி வருகிறார். சிஎஸ்கேவில் டெத் ஓவர்களில் ஸ்கோர் அடித்த ஒரே வீரர் ஜடேஜாதான்.

ஜடேஜா

ஜடேஜா

அணியில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தோம். ரூத்துராஜ் தனது திறமையை நிரூபித்துள்ளார். தான் எப்படிப்பட்டவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். அவரை எங்களால் சரியாக கவனிக்க முடியவில்லை.

இளைஞர்

இளைஞர்

அவர் அணியில் வலம் வர கூடிய திறமையான இளைஞர். அவர் அதிகம் பேசமாட்டார். இதனால் அவரை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. முதல் இரண்டு போட்டிகள் அவர் நினைத்த மாதிரி செல்லவில்லை. ஆனால் அதன்பின் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார், என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

இதில், ரூத்துராஜ் சரியாக பேசவில்லை. இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்க முடியாமல் போய்விட்டது. அவரின் திறமையை புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். தோனியின் இந்த பேச்சு சர்ச்சை ஆகியுள்ளது. ஒரு கேப்டன்தான் அணியில் இருக்கும் வீரர்களிடம் பேசி அவர்களின் திறமைகளை கொண்டு வெளியே வர வேண்டும்.

வெளியே கொண்டு வர வேண்டும்

வெளியே கொண்டு வர வேண்டும்

ஒரு இளைஞர் பேசவில்லை என்று அவரை உட்கார வைக்க கூடாது. தோனியிடம் பேச பலருக்கும் அச்சம் இருக்கும். அப்படி இருக்கும் போது தோனிதான் இளைஞர்களை ஆசுவாசப்படுத்தி, அவர்களை பேச வைக்க வேண்டும். தோனி கேப்டன் போல பழகாமல் நட்பாக பழகி இருந்தால்.. ரூத்துராஜ் தனது மனதில் இருந்ததை பேசி இருப்பார். ஆனால் அதை தோனி செய்யவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.

வேறு என்ன

வேறு என்ன

தோனி அணிக்குள் இருக்கும் வீரர்களிடம் இன்னும் கொஞ்சம் இயல்பாக பழக வேண்டும் என்று கூறுகிறார்கள். அதே சமயம் தோனி தனது பேட்டியில், இந்த வருட சீசனில் சிலர் ஆடியதை பார்க்கும் போது அடுத்த வருடம் யார் அணியில் ஆடுவார்கள் என்பது தெரிகிறது என்று கூறியுள்ளார். இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே அணியில் ரூத்துராஜாவுக்கு உறுதியான இடம் இருக்கும் என்று கருதப்படுகிறது. கண்டிப்பாக ரூத்துதான் அடுத்த சிஎஸ்கே ஓப்பனர் என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, October 30, 2020, 15:56 [IST]
Other articles published on Oct 30, 2020
English summary
IPL 2020: CSK Skipper Dhoni speech on Ruturaj goes viral - Here is why
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X