For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேட்ச் பிடித்து விட்டு.. அவுட் கேட்காத தோனி.. ரீப்ளேவில் வெளியான உண்மை.. அதிர வைக்கும் சம்பவம்!

துபாய் : எப்போதும் துல்லியமாக விக்கெட் கேட்கும் தோனி எளிதான கேட்ச் ஒன்றை பிடித்து விட்டு அவுட் கேட்கவில்லை.

அந்த வீரர் தொடர்ந்து ஆடி ரன் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வேட்டு வைத்தார்.

தோனி கேட்ச் பிடித்து விட்டு அவுட் கேட்காதது ரீப்ளே மூலம் தெரிய வந்தது. இதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தோனி செய்த கண்ணிமைக்கும் நேரத்தில் தோனி செய்த "மேஜிக்".. அரண்டு போன பிரித்வி ஷா.. இப்படியா பண்ணுவீங்க!?

சிஎஸ்கே - டெல்லி போட்டி

சிஎஸ்கே - டெல்லி போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. 2020 ஐபிஎல் தொடரின் 7வது லீக் சுற்றுப் போட்டியாக நடந்த இந்த மோதலில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

சிஎஸ்கே மாற்றம்

சிஎஸ்கே மாற்றம்

சிஎஸ்கே அணியில் லுங்கி நிகிடி மட்டுமே நீக்கப்பட்டு இருந்தார். அவர் முதல் இரண்டு போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கி இருந்தார். அதிக நோ பாலும் வீசினார். இந்த நிலையில் ஜோஷ் ஹேசல்வுட் அவருக்கு மாற்றாக சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டார்.

தீபக் சாஹர் துவக்கம்

தீபக் சாஹர் துவக்கம்

முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா - ஷிகர் தவான் துவக்கம் அளித்தனர். ப்ரித்வி ஷா இரண்டாவது பந்தை சந்தித்தார். அந்த பந்து அவரது காலுக்கும், பேட்டுக்கும் நடுவே செல்வது போல இருந்தது. லேசான சத்தமும் கேட்டது.

அவுட் கேட்கவில்லை

அவுட் கேட்கவில்லை

தோனி அந்த பந்தை பிடித்தார். அது அவுட் ஆக இருக்கலாம், பந்து பேட்டில் பட்டு இருக்கலாம் என யாரும் நினைக்கவில்லை. அதனால், தோனி, தீபக் சாஹர் என யாரும் அவுட் கேட்கவில்லை. அடுத்த பந்துகளை வீசத் துவங்கினார் சாஹர்.

ரீப்ளே சொன்ன உண்மை

ரீப்ளே சொன்ன உண்மை

அதன் பின்னர் காட்டப்பட்ட ரீப்ளேவில் ப்ரித்வி ஷா பேட்டில் பந்து இன்சைட் எட்ஜ் ஆகி இருப்பது தெரிய வந்தது. அப்போது லேசான சத்தம் கேட்பதும் தெரிந்தது. அதற்கு அவுட் கேட்டு இருந்தால் ப்ரித்வி ஷா அப்போதே வெளியேறி இருப்பார்.

சத்தம் கேட்கவில்லையா?

சத்தம் கேட்கவில்லையா?

அந்த எளிய விக்கெட் வாய்ப்பை கோட்டை விட்டது சிஎஸ்கே. தோனி விக்கெட் கீப்பர் என்பதால் நிச்சயம் எட்ஜ் ஆன சத்தம் அவருக்கு கேட்டு இருக்க வேண்டும். மேலும், அப்போது ஸ்லிப்பில் ஷேன் வாட்சன் கூட நின்று இருந்தார். அவரும் இதை கூறவில்லை.

சாக்கு போக்கு சொல்ல முடியாது

சாக்கு போக்கு சொல்ல முடியாது

தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் தான் நடந்து வருகிறது. எனவே, பந்து உரசிய சத்தம் கேட்கவில்லை என்று சாக்கு போக்கு சொல்ல முடியாது. இதில் ப்ரித்வி ஷாவும் எந்த சலனமும் காட்டாமல் அமைதியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

தோனி எப்போதும் ரிவ்யூ கேட்பதில், அவுட் கேட்பதில் கில்லாடியாக இருந்த நிலையில், தற்போது இந்த ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து இந்த விஷயத்தில் சொதப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோனி முன்பு போல இல்லை என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ப்ரித்வி ஷா விளாசல்

ப்ரித்வி ஷா விளாசல்

டக் அவுட் ஆகி இருக்க வேண்டிய ப்ரித்வி ஷா இந்தப் போட்டியில் சிஎஸ்கே பந்துவீச்சை பந்தாடி 43 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். 9 ஃபோர், 1 சிக்ஸ் அடித்தார் அவர். தவானுடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தார் ப்ரித்வி ஷா.

Story first published: Friday, September 25, 2020, 21:20 [IST]
Other articles published on Sep 25, 2020
English summary
IPL 2020 News in Tamil : CSK vs DC - Prithvi Shaw wicket not claimed by Dhoni and Deepak Chahar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X