அதே தப்பு.. சிக்க வைத்த மார்கன்.. கடைசி வரை திணறிய கொல்கத்தா.. தோல்விக்கு இதுதான் காரணம்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் இயான் மார்கனின் அணித் தேர்வு தான் காரணம் என்ற விமர்சனம் எழுந்தது.

அந்த அணித் தேர்வால் தான் கொல்கத்தா அணி கடைசி பந்து வரை போட்டியை எடுத்துச் சென்றது.

CSK vs KKR : 1 பந்தில் 1 ரன் தேவை.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஜடேஜா.. கடைசி பந்து வரை திக்திக்!

ஐந்து பந்துவீச்சாளர்கள்

ஐந்து பந்துவீச்சாளர்கள்

இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு எளிதாக முன்னேறலாம் என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்து இருந்தது. இதுதான் அந்த அணியின் கேப்டன் இயான் மார்கன் செய்த தவறு.

தோனி செய்த அதே தவறு

தோனி செய்த அதே தவறு

தோனி 2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இதே தவறை செய்தார். எப்போதும் ஆறு, ஏழு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் தோனி இந்த முறை சரியாக 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி வந்தார். அதனாலேயே முதல் சில போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

என்ன சிக்கல்?

என்ன சிக்கல்?

சரியான மாற்று பந்துவீச்சாளர்கள் இல்லாமல், சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் ஒரு பந்துவீச்சாளர் மோசமாக பந்து வீசினாலும் அவரை ஒதுக்கி விட்டு மற்ற பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் கொடுக்க முடியாது. அந்த சிக்கலில் தான் சிக்கியது கொல்கத்தா.

நிதிஷ் ராணா

நிதிஷ் ராணா

அந்த அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர். இந்த சீசனில் பந்துவீச மிக குறுகிய வாய்ப்பு மற்றுமே பெற்ற நிதிஷ் ராணாவுக்கு ஒரு ஓவர் மட்டும் கொடுத்தார் இயான் மார்கன். அந்த ஓவரில் சிஎஸ்கே 16 ரன்களை எடுத்தது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் கம்லேஷ் நாகர்கோட்டி தான் சிஎஸ்கே அணிக்கு பந்து வீசினார். வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்கள் 19 ஓவர்களிலேயே முடிந்த நிலையில், கடைசி ஓவரில் 10 ரன்களை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் சுழற் பந்துவீச்சாளர் கம்லேஷ்வீசினார்.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளில் சிக்ஸ் அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார் இயான் மார்கன் கூடுதல் பந்துவீச்சாளரை தேர்வு செய்து இருந்தால் இந்த இக்கட்டான நிலையில் வேறு பந்துவீச்சாளருக்கு ஓவர் கொடுத்திருக்க முடியும். .

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020 CSK vs KKR : KKR did this huge mistake against CSK
Story first published: Friday, October 30, 2020, 0:44 [IST]
Other articles published on Oct 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X