சிஎஸ்கே செய்த காரியம்.. மொத்த பிளே-ஆஃப்பும் மாறியது.. எஸ்கேப் ஆன ராஜஸ்தான்!

துபாய் : சிஎஸ்கே அணியால் ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் வாய்ப்புக்கள் மாறி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் இன்னும் சில லீக் சுற்றுப் போட்டிகளே மீதமுள்ள நிலையில் பிளே-ஆஃப் குறித்த பரபரப்பு எழுந்துள்ளது.

அதில் குறிப்பாக, சிஎஸ்கே - கொல்கத்தா இடையே ஆன போட்டி முக்கிய பங்கு வகித்தது.

CSK vs KKR : 1 பந்தில் 1 ரன் தேவை.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஜடேஜா.. கடைசி பந்து வரை திக்திக்!

பிளே-ஆஃப்

பிளே-ஆஃப்

சிஎஸ்கே அணி ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு அதிகரிக்க முடியும். அதே சமயம், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தங்கள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலை இருந்தது.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

இந்த நிலையில், இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி. பந்துவீச்சில் சொதப்பியதால் சிஎஸ்கே அணி வென்றது. இந்த வெற்றியால் மற்ற அணிகள் மகிழ்ச்சியில் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி

ஆம், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தொடர்ந்து பிளேஆஃப் செல்ல தங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளன. முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு 16 புள்ளிகளுடன் முன்னேறியது.

சிஎஸ்கே அணியின் நிலை

சிஎஸ்கே அணியின் நிலை

புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் பஞ்சாப், அடுத்து இருக்கும் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் அனைவருக்கும் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு தக்க வைக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்லாமல் போனாலும் மற்ற அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்பை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020 CSK vs KKR : Mumbai Indians qualified for Play-off in 2020 IPL
Story first published: Friday, October 30, 2020, 1:26 [IST]
Other articles published on Oct 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X