For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண்ணா கொஞ்சம் அங்கே பார்.. செக் வைத்த வார்னர்.. கெத்தாக பதில் சொன்ன தோனி!

துபாய் : டாஸில் வென்ற டேவிட் வார்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலவீனத்தை வைத்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி சேஸிங் செய்வதில் தோல்வி அடைந்து வருவதால், அவர் சிஎஸ்கே அணிக்கு செக் வைத்ததாகவே கருதப்பட்டது.

ஆனால், தோனி சிஎஸ்கே அணியின் அதிரடி மாற்றத்தை அறிவித்து அதிர வைத்தார்.

தூக்கி அடிக்கப்பட்ட முரளி விஜய்.. 3 மாற்றங்களை செய்த தோனி.. சிஎஸ்கே முடிவிற்கு என்ன காரணம்? பின்னணிதூக்கி அடிக்கப்பட்ட முரளி விஜய்.. 3 மாற்றங்களை செய்த தோனி.. சிஎஸ்கே முடிவிற்கு என்ன காரணம்? பின்னணி

சிஎஸ்கே பலவீனம்

சிஎஸ்கே பலவீனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு போட்டிகளில் சேஸிங் திட்டமே இல்லாமல் மோசமாக சேஸிங் செய்து தோல்வி அடைந்து இருந்தது. சிஎஸ்கே அணி வெற்றிக்காக ஆடுகிறதா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்தது.

ஹைதராபாத் அணி நிலை

ஹைதராபாத் அணி நிலை

மறுபுறம் ஹைதரபாத் அணியின் மிடில் ஆர்டர் சரியாக இல்லை. வார்னர், பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் இருந்தும் அந்த அணியின் மிடில் ஆர்டர் மோசமாக உள்ளது. எனினும், சிஎஸ்கே அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது அந்த அணி.

வார்னர் எடுத்த முடிவு

வார்னர் எடுத்த முடிவு

இந்த நிலையில், 14வது லீக் பொட்டில் சிஎஸ்கே அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர். அவர் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்து, பின் எதிரணியை கட்டுப்படுத்துவதில் தான் சிறப்பாக செயல்படும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.

தோனி செய்த அதிரடி மாற்றம்

தோனி செய்த அதிரடி மாற்றம்

ஆனால், சிஎஸ்கே அணி சேஸிங்கில் சொதப்பும் என்பதை வைத்தே அந்த அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறினர். வார்னர் சவால் விட்டாலும் தோனி அவருக்கு பதிலடி கொடுத்தார். சிஎஸ்கே அணியை முற்றிலும் மாற்றி களமிறக்கினார் தோனி.

என்ன சொன்னார் தோனி?

என்ன சொன்னார் தோனி?

சிஎஸ்கே அணியில் முரளி விஜய், ருதுராஜ் கெயிக்வாட், ஜோஷ் ஹேசல்வுட் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் அம்பதி ராயுடு, ஷர்துல் தாக்குர், டிவைன் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த மாற்றத்தால் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்யவும், இரண்டாவதாக பேட்டிங் செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார்.

11 பேட்ஸ்மேன்கள்

11 பேட்ஸ்மேன்கள்

சிஎஸ்கே அணியில் தற்போது 11 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆம், தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா, ஷர்துல் தாக்குர் என கடைசி மூன்று பேட்ஸ்மேன்கள் கூட கடந்த காலங்களில் சில போட்டிகளில் நன்றாக ஆடி ரன் எடுத்துள்ளனர். அதனால், சிஎஸ்கே அணி பேட்டிங்கில் வலுவானதாக மாறி உள்ளது.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி வீரர்கள் விவரம் - ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, பாப் டுபிளெசிஸ், கேதர் ஜாதவ், தோனி, ரவீந்திர ஜடேஜா, டிவைன் பிராவோ, சாம் கர்ரன், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா

Story first published: Friday, October 2, 2020, 19:53 [IST]
Other articles published on Oct 2, 2020
English summary
IPL 2020 News in Tamil : CSK vs SRH - David Warner challenges Dhoni to chase as CSK failed to chase in last two matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X