For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைகீழாக மாறிவிட்டது.. ஏதாவது செய்யுங்கள் தோனி.. சிஎஸ்கே எதிர்பார்க்காத வீழ்ச்சி.. பெரும் திருப்பம்!

துபாய்: 2020ம் வருடத்தின் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் சிஎஸ்கேவிற்கு எதிராகவும், தோனிக்கு எதிராகவும் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் விமர்சனங்களை அடுக்கி வருகிறார்கள்.

2020 ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகள் இந்த முறை அதிகம் நம்பிக்கை அளித்து வருகிறது.

இளம் வீரர்களுடன் களமிறங்கி இருக்கும் இந்த இரண்டு அணிகள் ஐபிஎல் தொடரில் இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். மும்பை, சிஎஸ்கே போன்ற அணிகள் இந்த முறை பிளே ஆப் செல்வதே சந்தேகம்தான் என்றும் கூறுகிறார்கள்.

என்ன நிலைமை

என்ன நிலைமை

இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே, ஹைதராபாத் ஆகிய அணிகள் மிக மோசமான பார்மில் உள்ளது. நல்ல டீம் இருந்தும் கூட இந்த அணிகள் மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறது. அணியில் இருக்கும் சில வீரர்கள் இன்னும் முழுமையாக பார்மிற்கு திரும்பாததும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால்

ஆனால்

ஆனால் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகள் முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் களமிறங்கி ஆடி வருகிறது. சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் இந்த அணிகளில் இடம் பிடித்து உள்ளனர். இதனால் இந்த அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.

புள்ளிகள் டேபிள்

புள்ளிகள் டேபிள்

இதனால் இந்த வருடம் ஐபிஎல் புள்ளிகள் டேபிள் மொத்தமாக மாற்றம் அடைந்துள்ளது. எப்போதும் உச்சத்தில் இருக்கும் சிஎஸ்கே, ஹைதராபாத் போன்ற அணிகள் இந்த முறை மோசமான சரிவது சந்திக்க தொடங்கி உள்ளது.

ஐபிஎல் டேபிளில் முதல் இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. அந்த அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வென்றுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3 போட்டிகள் விளையாடி அந்த அணி இரண்டில் வென்றுள்ளது.

அடுத்த இடங்கள் என்ன

அடுத்த இடங்கள் என்ன

அதற்கு அடுத்த இடத்தில் பெங்களூர் இடம்பிடித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. 3 போட்டிகள் விளையாடி அதில் இரண்டில் வென்று, ஒன்றில் தோல்வி அடைந்து பெங்களூர் மூன்றாம் இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி 3ல் விளையாடி 2ல் தோல்வி அடைந்து ரன் ரேட் (+1.498) அடிப்படையில் நான்காம் இடத்தில் உள்ளது.

மும்பையும் இதேபோல் மூன்று போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்து +0.654 ரன் ரேட் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

இத்தனை நாட்கள் கடைசி இடத்தில் இருந்த ஹைதரபாத் தற்போது முன்னேறி உள்ளது. ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்து -0.226 ரன் ரேட் உடன் 6வது இடத்தில் உள்ளது,. கொல்கத்தா அணி 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைந்து -0.767 ரன் ரேட் உடன் 7வது இடத்தில் உள்ளது.

சென்னை இடம்

சென்னை இடம்

இந்த புள்ளிகள் பட்டியலில் சென்னை எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. சென்னை அணி மூன்று போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் சென்னை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த காரணத்தால் -0.840 ரன் ரேட் உடன் 8ம் இடத்தில் உள்ளது. சென்னை தற்போது கடைசி இடத்தை பிடித்துள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

இதனால் சென்னை அணியை அதன் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இதுவரை இல்லாத சரிவை சிஎஸ்கே சந்தித்து இருக்கிறது. தோனி உடனே ஏதாவது செய்ய வேண்டும். தோனி உடனே அணியில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே மீண்டும் பழைய பார்மிற்கு திரும்பும் என்று ரசிகர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Story first published: Wednesday, September 30, 2020, 21:17 [IST]
Other articles published on Sep 30, 2020
English summary
IPL 2020: CSK went down in the points table, Dhoni has to do something in the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X