For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்பவே முடியலை.. 13 வருடத்தில் இதுதான் முதல்முறை.. 168 போட்டிகள் ஆனது.. தவான் செம ஹேப்பி!

ஷார்ஜா : ஷிகர் தவான் துவக்க வீரராக இருந்தும் இதுவரை டி20 போட்டிகளில் சதம் அடித்ததே இல்லை.

அந்த குறையை 2020 ஐபிஎல் தொடரில் தீர்த்தார் அவர். 13 ஆண்டுகளாக டி20 போட்களில் தவான் சதம் அடிக்கவில்லை என்பதை சில ரசிகர்களால் நம்ப முடியவில்லை.

அவரது முதல் சதம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப் கனவை அசைத்துப் பார்த்துள்ளது தான் இதில் குறிப்பிடத்தக்கது.

பிராவோ எங்கே? கடைசி ஓவரில் பரபரப்பு.. சிஎஸ்கேவில் நடந்த மெகா சொதப்பல்.. கதையை முடித்த தவான்!பிராவோ எங்கே? கடைசி ஓவரில் பரபரப்பு.. சிஎஸ்கேவில் நடந்த மெகா சொதப்பல்.. கதையை முடித்த தவான்!

சிஎஸ்கே - டெல்லி போட்டி

சிஎஸ்கே - டெல்லி போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 34வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது.

சிஎஸ்கே ஸ்கோர்

சிஎஸ்கே ஸ்கோர்

சிஎஸ்கே அணியில் பாப் டுபிளெசிஸ் 58, வாட்சன் 36, அம்பதி ராயுடு 45*, ஜடேஜா 33* ரன்கள் குவித்தனர். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. டெல்லி அணிக்கு இது சவாலான இலக்காக இருந்தது.

டெல்லி விக்கெட்கள்

டெல்லி விக்கெட்கள்

அடுத்து ஆடிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா 0, அஜின்க்யா ரஹானே 8, ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் ஷிகர் தவான் மட்டும் நீடித்து நின்று அதிரடியாக ரன் குவித்து வந்தார். ஸ்டோய்னிஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தவான் சதம்

தவான் சதம்

இந்த நிலையில் ஷிகர் தவான் மட்டும் கடைசி ஓவர் வரை நின்று ஆடினார். அவர் 19வது ஓவரில் சதம் அடித்து பட்டையைக் கிளப்பினார். சதம் அடித்தாலும் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்பதால் அவர் அதை கொண்டாடாமல் அமைதி காத்தார்.

முதல் சதம்

முதல் சதம்

இது டி20 போட்டிகளில் தவானின் முதல் சதம் ஆகும். சர்வதேச டி20, ஐபிஎல் என எதிலும் தவான் சதம் அடித்ததில்லை. துவக்க வீரர்களால் டி20 போட்டிகளில் சதம் அடிக்க முடியும். ஆனாலும், தவான் இதுவரை சதம் அடிக்கவில்லை.

13 ஆண்டுகள் கழித்து

13 ஆண்டுகள் கழித்து

சிஎஸ்கே போட்டியில் அடித்தது தான் அவரின் முதல் சதம். 13 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் ஆடி வரும் தவான் டி20யில் தன் முதல் சதத்தை பதிவு செய்தார். 168 போட்டிகளில் 4900+ ரன்களை குவித்துள்ள தவான், 39 அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

12வது இந்திய வீரர்

12வது இந்திய வீரர்

ஐபிஎல் தொடரில் சதம் அடிக்கும் 12வது இந்திய வீரர் என்ற சாதனையும் செய்துள்ளார் ஷிகர் தவான். 2020 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் 20, 30 ரன்கள் எடுத்து வந்த தவான் கடைசி மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம், ஒரு சதம் அடித்து இருக்கிறார்.

Story first published: Sunday, October 18, 2020, 0:41 [IST]
Other articles published on Oct 18, 2020
English summary
IPL 2020 DC vs CSK : Shikar Dhawan hit maiden T20 century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X