For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சவால் விட்டு கதையை முடித்த பொல்லார்டு.. போல்ட், பும்ராவை கண்டு மிரண்ட டெல்லி!

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் கீரான் பொல்லார்டு டாஸ் வென்று பேட்டிங் செய்யாமல், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டெல்லி அணிக்கு சாதகமான முடிவாக இது பார்க்கப்பட்டாலும் அந்த அணியால் ரன் குவிக்க முடியவில்லை.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் என கருதப்பட்டது. ஆனால், இந்த பிட்ச் குறித்து சரியாக கணிக்க முடியவில்லை எனக் கூறிய மும்பை அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணி கேப்டன் இந்த முடிவால் மகிழ்ச்சி அடைந்தார்.

மிரட்டல் பந்துவீச்சு

மிரட்டல் பந்துவீச்சு

ஆனால், போட்டியில் டெல்லி அணி தடுமாறியது. மும்பை அணியின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. பவர்பிளே ஓவர்களில் ட்ரென்ட் போல்ட் விக்கெட் வேட்டை நடத்தினார். தவான் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ப்ரித்வி ஷா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டெல்லி சரிவு

டெல்லி சரிவு

அதன் பின் டெல்லி அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 25, ரிஷப் பண்ட் 21 ரன்கள் எடுத்தது மட்டுமே டெல்லி அணிக்கு ஆறுதலாக இருந்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

110 ரன்கள்

110 ரன்கள்

டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது மிகவும் மோசமான ஸ்கோர் என்பதால் டெல்லி அணி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மும்பை கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய அழைத்தும் டெல்லி சறுக்கியது.

பும்ரா, போல்ட்

பும்ரா, போல்ட்

மும்பை அணியில் பும்ரா, ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சில் அனல் பறந்தது. இருவரும் போட்டி போட்டு விக்கெட் வீழ்த்தினர். இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பும்ரா 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார். போல்ட் 21 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

Story first published: Saturday, October 31, 2020, 17:56 [IST]
Other articles published on Oct 31, 2020
English summary
IPL 2020 DC vs MI : MI restricted DC to 110 runs with tight bowling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X