For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படித்தான் ஆடுவேன்.. கெத்து காட்டி அடம்பிடித்த இளம் வீரர்.. முதல் பந்திலேயே அதிர வைத்த ஆர்ச்சர்!

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணியின் இளம் துவக்க வீரர் ப்ரித்வி ஷா நல்ல திறமைகள் இருந்தும் சில சிறிய தவறுகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் அதே தவறை செய்ய போட்டியின் முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்து அனுப்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்.

ஆஸ்திரேலியாவுக்கு சூப்பர்... பஞ்சாப் அணிக்கு சொதப்பலா... காரணம் சொல்கிறார் மாக்ஸ்வெல்ஆஸ்திரேலியாவுக்கு சூப்பர்... பஞ்சாப் அணிக்கு சொதப்பலா... காரணம் சொல்கிறார் மாக்ஸ்வெல்

டெல்லி - ராஜஸ்தான் போட்டி

டெல்லி - ராஜஸ்தான் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் இடையே ஆன 30வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ப்ரித்வி ஷா அவுட்

ப்ரித்வி ஷா அவுட்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வழக்கம் போல ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா துவக்கம் அளித்தனர். ப்ரித்வி ஷா முதல் ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். ஜோப்ரா ஆர்ச்சர் புதிய பந்தை வீசினார். முதல் பந்திலேயே ப்ரித்வி ஷா பவுல்ட் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

எப்படி ஆடினார்?

எப்படி ஆடினார்?

ப்ரித்வி ஷா இந்த பந்தை ஆடிய விதம் உடனடியாக விமர்சனத்துக்கு உள்ளானது. புதிய பந்தில் எப்படியும் ஆர்ச்சர் ஸ்விங் செய்வார் என்றாலும், ப்ரித்வி ஷா தன் கால்களை அசைக்காமல் நின்று ஸ்விங் ஆன பந்தை ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே ஆட முயன்றார்.

அதே தவறு?

அதே தவறு?

ஆனால், பந்து இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்ப்புகளை பதம் பார்த்தது. கடந்த 2018 அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் முதல் ப்ரித்வி ஷா இதே போன்று பலமுறை ஆட்டமிழந்துள்ளார். இது அவரது பலவீனம் என்பதை எதிரணிகள் உணர்ந்தே அவரை எளிதாக வீழ்த்தி வருகின்றன.

நிலையற்ற பார்ம்

நிலையற்ற பார்ம்

ப்ரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேன் என்றாலும், அவரது டெக்னிக்கில் சில குறைகள் உள்ளன. அதனாலேயே, அவரால் ஒவ்வொரு போட்டியிலும் நிலையாக நின்று ரன் குவிக்க முடிவதில்லை. இந்த சீசனில் அவர் எடுத்த ரன்கள் - 5, 64, 2, 66, 42, 19, 4, 0.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

ஏற்ற இறக்கமாக மட்டுமே ரன் குவித்து வரும் ப்ரித்வி ஷா பேட்டிங் கே குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. சிலர் இரண்டு, மூன்று போட்டிகளுக்கு ஒரு முறை 60 ரன்கள் எடுப்பதை விட ஒவ்வொரு போட்டியிலும் 20, 30 ரன்கள் எடுக்கும் வீரர் தான் சிறந்தவர் என விமர்சனம் செய்துள்ளனர்.

ஆர்ச்சர் மிரட்டல்

ஆர்ச்சர் மிரட்டல்

ப்ரித்வி ஷாவின் தவறை சுட்டிக் காட்டும் அதே வேளையில், ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை பாராட்டியே தீர வேண்டும். எப்போதும் போல துல்லியமாக, மின்னல் வேகத்தில் வீசினார் ஆர்ச்சர். ப்ரித்வி ஷா விக்கெட்டை அடுத்து, ரஹானே விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Story first published: Wednesday, October 14, 2020, 20:36 [IST]
Other articles published on Oct 14, 2020
English summary
IPL 2020 DC vs RR : Prithvi Shaw bowled out by Jofra Archer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X