For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

12 கோடி வேஸ்ட்.. இவர் கேப்டன் பதவியை பறித்து டீமை விட்டு தூக்குங்க.. பொங்கிய ரசிகர்கள்!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இக்கட்டான நிலையில் இருக்கிறார்.

தற்காலத்தில் உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன ஸ்டீவ் ஸ்மித், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார்.

அதனால் தான் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணி நிர்வாகம். ஆனால், அவரது சமீபத்திய செயல்பாடு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

யப்பா சாமி முடியலை!! வேலையைக் காட்டிய ரஹானே.. மொத்தமாக தலையில் துண்டை போட்டுக் கொண்ட டெல்லி டீம்!யப்பா சாமி முடியலை!! வேலையைக் காட்டிய ரஹானே.. மொத்தமாக தலையில் துண்டை போட்டுக் கொண்ட டெல்லி டீம்!

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார். 2018ஆம் ஆண்டு தடையால் அவரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை. அதை அடுத்து 2019ஆம் ஆண்டு பாதி தொடரில் அவர் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இரண்டு அரைசதங்கள்

இரண்டு அரைசதங்கள்

கடந்த ஆண்டு சிறப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித், இந்த ஆண்டு மிக மோசமாக சொதப்பி வருகிறார். முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் இரண்டு அரைசதங்கள் அடித்தார். அதன் பின் பேட்டிங்கில் மிக மோசமாக ஆடி வருகிறார் .

தொடர் தோல்விகள்

தொடர் தோல்விகள்

அவர் மோசமாக ரன் எடுக்காமல் ஆட்டமிழந்த போட்டிகளில் எல்லாம் ராஜஸ்தான் அணியும் தோல்வி அடைந்துள்ளது. இது அவருக்கு தனிப்பட்ட முறையில் கடும் அழுத்தத்தை அளித்துள்ளது. கேப்டனாகவும் சிக்கலில் இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

ஒற்றை இலக்க ரன்கள்

ஒற்றை இலக்க ரன்கள்

2020 ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எட்டு போட்டிகளில் எடுத்த ரன்கள் - 69, 50, 3, 5, 6, 24, 5, 1. ஐந்து போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இது ஒரு சிறந்த பேட்ஸ்மேனின் செயல்பாடு அல்ல.

டெல்லி போட்டி

டெல்லி போட்டி

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 162 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது ஸ்டீவ் ஸ்மித் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தான் துவக்க வீரராக ஆடினால் சரியாக வரவில்லை என மூன்றாம் வரிசைக்கு மாறினார். அப்போதும் அதே போல தான் ஆட்டமிழந்து வருகிறார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

12 கோடி கொடுத்து ஸ்டீவ் ஸ்மித்தைவாங்கியது, தக்க வைத்தது அவர் களத்தில் வெறுமனே பீல்டிங் செய்யத் தானா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்டீவ் ஸ்மித்தின் தனிப்பட்ட ஆட்டம் மோசமாக இருப்பதோடு, அணியும் தோல்விகளை சந்தித்து வருகிறது.

டேவிட் மில்லர்

டேவிட் மில்லர்

இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை விட்டு விலகி விட்டு டேவிட் மில்லர் போன்ற பிற திறமையான வெளிநாட்டு வீரர்களுக்கு ராஜஸ்தான் அணியில் இடம் கிடைக்க வழி விட வேண்டும் என்ற பேச்சும் கிளம்பி உள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 23:37 [IST]
Other articles published on Oct 14, 2020
English summary
IPL News : DC vs RR : Steve Smith serious form out affects Rajasthan Royals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X