காலியாகும் ரோஹித் சர்மா பிளான்.. ஐபிஎல்லில் நினைத்து பார்க்காத திருப்பம்..ஆட்டம் போடும் குட்டி பசங்க

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் மும்பை அணியை விட வலிமையான அணியாக தற்போது டெல்லி அணி உருவெடுத்து உள்ளது. நாக் அவுட் போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதினால் டெல்லி அணியே வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

2020 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் நிறைய திருப்பங்களுடன் தொடர் நடந்து வருகிறது.

அதிலும் சிஎஸ்கே, ஹைதராபாத் போன்ற அணிகள் இந்த முறை மோசமாக ஆடி தோல்வியை தழுவி வருகிறது. இன்னொரு பக்கம் பெங்களூர், கொல்கத்தா போன்ற அணிகள் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

ஏன்

ஏன்

இந்த தொடருக்கு முன்னதாகவே மும்பை அணி தீவிரமாக ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வந்தது. டி காக், பாட்டின்சன் போன்ற வீரர்களை அணியில் எடுத்தது. நாதன் நைல் போன்ற வீரர்களையும் மும்பை தனது அணியில் எடுத்தது. முழுக்க முழுக்க சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை குறி வைத்துதான் மும்பை அணி வீரர்களை அணியில் சேர்த்தது. சிஎஸ்கேவை காலி செய்து மீண்டும் சாம்பியன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு மும்பை தயார் ஆனது.

பவுலர்கள்

பவுலர்கள்

பவுலர்கள் தேர்வு தொடங்கி எல்லாமே சிஎஸ்கே, ஹைதராபாத் போன்ற அணிகளை எதிர்கொள்ளும் வகையிலேயே மும்பை அணி தயார் செய்து வந்தது. ஆனால் மும்பை தொடங்கி எந்த அணியும் எதிர்பார்க்காத வகையில் இந்த தொடரின் மிக சிறந்த அணியாக டெல்லி அணி உருவெடுத்து உள்ளது. அதிலும் மும்பையை விட வலிமையான அணியாக டெல்லி உருவெடுத்துள்ளது.

அணி எப்படி

அணி எப்படி

அணியின் பேட்டிங் வலிமை என்று பார்த்தால் இரண்டு அணிகளுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், தவான், ஷா, பண்ட், ஸ்டோய்னிஸ் , ஹெட்மயர் என்று டெல்லி அணியின் பேட்டிங்கும், ரோஹித், டீ காக், பாண்டியா, பொல்லார்ட், சூர்ய குமார் யாதவ் என்று மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

பவுலிங் எப்படி

பவுலிங் எப்படி

அதேபோல் பவுலிங்கும் இரண்டும் அணியிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. டெல்லியில் ரபாடா, ஆண்ரிச், அஸ்வின், அக்சர் பட்டேல் என்று பெரும் படையே உள்ளது. மும்பையில் பும்ரா, நாதன் நைல், ட்ரென்ட் போல்ட், ராகுல் சாகர் என்று வலிமையான படை உள்ளது. இரண்டு அணிகளின் கேப்டன்களும் கூட சிறப்பாகவே செயலாற்றி வருகிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இரண்டு அணிக்கும் வித்தியாசம் என்று பார்த்தால் அது பாண்டிங்தான். டெல்லி அணி என்பது வெறும் ஷ்ரேயாஸ் அணி கிடையாது. அங்கு பல முக்கியமான திட்டங்களை பாண்டிங்தான் தீட்டுகிறார். திட்டங்களை எல்லாமே பாண்டிங்தான் வகுக்கிறார். இதனால்தான் மிக மோசமாக தோல்வியின் விளிம்பிற்கு சென்றால் கூட டெல்லி மீண்டு வந்து வெற்றிபெறுகிறது.

வெற்றி

வெற்றி

இதனால்தான் 160 போன்ற ஸ்கோர்களை கூட அடித்துவிட்டு மிக எளிதாக அதை டெல்லி டிபன்ட் செய்ய முடிகிறது. அசால்ட்டாக பேட்ஸ்மேன்கள் சொதப்பினால் பவுலர்கள் போட்டியை முடிக்கிறார்கள். மும்பையிடம் தற்போது மிஸ்ஸாகும் விஷயம் பிளான் பி. சென்னை மற்றும் பெங்களூர் அணிகளிடம் மும்பை தோல்வி அடைய ஒரே காரணம் சரியான பிளான் பி இல்லாததுதான்.

பிளான் பி

பிளான் பி

டெல்லியிடம் எப்போதும் பிளான் பி உள்ளது. கடைசி நொடியில் கூட டெல்லியிடம் மீண்டு வருவதற்கான சரியான பிளான் இருக்கிறது. ஆனால் மும்பையிடம் அப்படி பிளான்கள் இல்லை. டீம் வலுவாக இருப்பதால் மட்டுமே மும்பை வெற்றிபெற்று வருகிறது. இதனால் நாக் அவுட் போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதினால் டெல்லி அணியே வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கணிப்பு

கணிப்பு

டெல்லி அணியில் பாண்டிங் பயிற்சி காரணமாக மொத்தமாக அணியின் பிளான் எல்லாம் மாறியுள்ளது. அதேபோல் மும்பை அணியில் தற்போது பென்ச்சில் இருக்கும் வீரர்கள் அவ்வளவு வலிமையாக இல்லை . ஆனால் டெல்லி அணியிடம் பென்ச்சில் இருக்கும் வீரர்களும் நல்ல வலிமையாக இருக்கிறார்கள். இதனால் டெல்லி - மும்பை அணிகளில் டெல்லிதான் லீடிங்கில் இருக்கும் அணியாக உள்ளது!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Delhi has the upper hand over the Mumbai Indians this season.
Story first published: Sunday, October 18, 2020, 15:23 [IST]
Other articles published on Oct 18, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X