For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லில் திருப்பம்.. பைனல் செல்ல வாய்ப்பு இருந்த அணிக்கு இப்படி ஒரு நிலையா?.. விளையாடும் விதி!

துபாய்: ஐபிஎல்லில் பைனல் செல்ல வாய்ப்பு இருக்கும் அணியாக கருதப்பட்ட டெல்லி அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். முக்கியமான வீரர்கள் பலர் காயம் அடைந்த காரணத்தால் தற்போது அந்த அணி மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் மும்பைக்கு இணையாக வலுவான அணியாக டெல்லி அணி பார்க்கப்பட்டது. மும்பை போலவே டெல்லி அணியிலும் ஓப்பனிங், மிடில் ஆர்டர், பவுலிங் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

அதிலும் இரண்டு அணியிலும் அதீத வேகத்தில் பந்து வீச கூடிய டாப் கிளாஸ் பவுலர்கள் இருக்கிறார்கள். டெல்லி அணி பவுலிங்- பேட்டிங் என்று இரண்டிலும் முழுமையான அணியாக இருக்கிறது.

டாப் ஆர்டர்

டாப் ஆர்டர்

இந்த வருட சீசனில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்காக டெல்லி, மும்பை இடையே கடுமையான போட்டி நடந்து வருகிறது. இரண்டு அணிகளுமே தலா 2 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. 8 போட்டிகளில் 6ல் வென்று டெல்லி முதல் இடத்தில் உள்ளது. 7 போட்டியில் 5ல் வென்று மும்பை இரண்டாம் இடத்தில் உள்ளது.

டெல்லி எப்படி

டெல்லி எப்படி

பிளே ஆப் போட்டிகளில் டெல்லி வெற்றிபெற்று பைனல் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டது. டெல்லி அணி மிக குறைவான இலக்குகளை வைத்து கூட அதை டிபன்ட செய்கிறது. இதன் மூலம் பேட்டிங் மட்டுமல்ல நாங்கள் பவுலிங்கிலும் சிறப்பான அணிதான் என்பதை டெல்லி நிரூபித்து உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லி அணி மிக முக்கியமான சிக்கலில் மாட்டியுள்ளது.

தொடக்கம்

தொடக்கம்

இந்த தொடரின் தொடக்கத்திலேயே டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனால் முதல் சில போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்டது. ஆனால் அவரின் காயம் சரியாகாத காரணத்தால்.. வரிசையாக 7 போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. அதன்பின் இஷாந்த் சர்மா ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

பண்ட் எப்படி

பண்ட் எப்படி

அதன்பின் அணியின் இன்னொரு பவுலர் மிஸ்ரா காயம் காரணமாக விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. இவரும் தொடரில் இருந்து வெளியேறினார். அதோடு முதல் போட்டியிலேயே காயம் அடைந்த அஸ்வின் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கையில் காயம் ஏற்பட்ட அஸ்வின் இரண்டு போட்டிகள் கழித்துதான் மீண்டு வந்தார்.

டெல்லி எப்படி நிலை

டெல்லி எப்படி நிலை

அதன்பின்தான் டெல்லி அணிக்கு இன்னொரு சிக்கல் வந்தது. இரண்டு முக்கிய பவுலர்களை இழந்த டெல்லி இன்னொரு பேட்ஸ்மேனையும் இழக்கும் நிலைக்கு சென்றது. டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளாக விளையாடவில்லை.

விளையாடவில்லை

விளையாடவில்லை

களத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரின் காலில் சதை பகுதி கிழிந்து இருக்கிறது. இதனால் இன்னும் சில போட்டிகளில் இவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர் எப்போது மீண்டும் வருவார் என்பதே தெரியவில்லை என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். பண்ட் இப்படி காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் காயம் அடைந்தார்.

காயம் அடைந்தார்

காயம் அடைந்தார்

நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் பீல்டிங் செய்யும் போது கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் பட்டார். இதனால் பாதி போட்டியில் அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டது. கீழே விழுந்த இவர் மிக மோசமாக வலியில் துடித்தார். இவருக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது, அடுத்த போட்டிகளில் இவர் விளையாட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

டெல்லி அணி

டெல்லி அணி

மிகவும் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்த டெல்லி அணியில் இப்படி அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமான பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இப்படி காயம் காரணமாக விளையாட முடியாமல் தவிப்பது அந்த அணிக்கு பின்னடைவாக மாறியுள்ளது. இனி வரும் போட்டிகளில் டெல்லி பெரிய அணிகள் உடன் மோத உள்ளது.

பெரிய அணிகள்

பெரிய அணிகள்

முக்கியமான அணிகளை இனி வரும் போட்டிகளில் டெல்லி எதிர்கொள்ளும் . டெல்லி பிளே ஆப் செல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்கு பின் தொடர் வெற்றிகளை டெல்லி தக்க வைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. பைனல் செல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட டெல்லி அணி இனி வரும் போட்டிகளில் வெற்றிகளை பெற முடியுமா என்று சந்தேகம் வந்துள்ளது.

Story first published: Thursday, October 15, 2020, 16:50 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
IPL 2020: Delhi team have to find a replacement for the players ruled out of the season before play off soon.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X