For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது எல்லாம் காரணமா? முதலில் மாறுங்கள்.. வெளிப்படையாக திட்டித் தீர்த்த தோனி.. யாரை சொல்கிறார்?

துபாய்: நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வியை தொடர்ந்து கேப்டன் தோனி தனது அணியில் இருக்கும் சில வீரர்கள் மீது கோபத்தை காட்டி உள்ளார்.

நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி 175 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன்பின் இறங்கிய சென்னை 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

முதலில் டாஸ் வென்று போட்டியின் போக்கை தீர்மானிக்கும் சாதகம் இருந்தும் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. இதனால் தோனிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

எப்படி?

எப்படி?

இந்த நிலையில் சென்னை அணியின் தோல்வி குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னை அணியில் தற்போது சமநிலை இல்லை. இதுதான் பெரிய பிரச்சனை. முக்கியமான வீரர்கள் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும். ராயுடு காயம் குணமடைந்து விட்டது. அடுத்த போட்டியில் அவர் ஆடுவார்.

காரணம் என்ன

காரணம் என்ன

அணியின் பலத்தை இது அதிகரிக்கும். நாங்கள் செய்த சோதனை முயற்சிகள் தோல்வியை தழுவிவிட்டது. கூடுதல் பவுலிங் ஆப்ஷன் இருந்தது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை. சில விஷயங்களை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எங்களின் தொடக்கம்தான் எப்போதும் பிரச்சனையாக இருக்கிறது.

சில வீரர்கள்

சில வீரர்கள்

சில வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தாமாக முன் வந்து அவர்கள் விளையாட வேண்டும். சிலர் சுயமாக களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இல்லையென்றால் சிஎஸ்கே மீண்டு வருவது கடினம். முக்கியமாக பவுலர்கள் தங்கள் லென்தை சரி செய்ய வேண்டும். பவுலிங் வேகத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

பீல்டர்கள் தவறு

பீல்டர்கள் தவறு

பீல்டர்கள் சிலர் சரியாக பீல்டிங் செய்யவில்லை. நேற்று சிலர் கேட்ச்களை விட்டனர். இதற்கு அங்கு இருக்கும் விளக்குகளை காரணமாக சொன்னார்கள். தற்போது இவர்கள் கேட்ச் விடுவதற்கு விளக்கு ஒரு காரணமாக மாறிவிட்டது. இதை காரணமாக கட்டி மிஸ் - பீல்டிங்கை நியாயப்படுத்த முடியாது, என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று போட்டி

நேற்று போட்டி

நேற்று நடந்த போட்டியில் முரளி விஜய் எல்லையில் சில பவுண்டரிகளை விட்டார். இதற்கு அங்கிருந்த விளக்கை அவர் காரணம் சொன்னார். அதேபோல் தொடக்கத்தில் பேட்டிங் இறங்கி அவர் சரியாக பேட் செய்யவில்லை. இதைதான் தோனி குற்றஞ்சாட்டி உள்ளார். முரளி விஜய் மீது தோனி செம கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.

Story first published: Saturday, September 26, 2020, 19:12 [IST]
Other articles published on Sep 26, 2020
English summary
IPL 2020: Dhoni accuses few players from CSK for defeat against DC
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X