For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5 பந்தில் 5 சிக்ஸர்.. அடிச்சா சிக்ஸ் தான்.. செம பார்மில் தோனி.. கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயறிசிபயிற்சி முகாமில் தோனி ஐந்து பந்துகளில் வரிசையாக ஐந்து சிக்ஸர்கள் விளாசினார்.

Recommended Video

Dhoni Back to Form | Dhoni hit 5 sixes in 5 balls in practice session | Net Practice | IPL

அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தோனி ரசிகர்கள் அந்த வீடியோவை கொண்டாடி வருகிறார்கள்.

தோனி பார்ம் அவுட், நீண்ட காலம் கிரிக்கெட் ஆடவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் தான் பார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார்.

தோனி இல்லாத இந்திய அணி

தோனி இல்லாத இந்திய அணி

கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவராகவே ஓய்வு எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து, எந்த கிரிக்கெட் தொடரிலும் அவரை தேர்வுக் குழு சேர்க்கவில்லை. தோனி இல்லாத இந்திய அணி தான் தொடர்ந்து ஆடி வந்தது.

ஒப்பந்தம் ரத்து

ஒப்பந்தம் ரத்து

கடந்த ஜனவரி மாதம் தோனியின் பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இனி தோனி இந்திய அணியில் ஆடவே மாட்டார் என அப்போது தகவல்கள் வெளியாகின. எனினும், இந்திய அணிக்கு திரும்ப தோனிக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு இருந்தது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

ஆம், அந்த கடைசி வாய்ப்பு தான் 2020 ஐபிஎல் தொடர். இந்த சீசனில் தோனி சிறப்பாக ஆடி, தன் உடற்தகுதியையும் நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என கூறப்பட்டது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அந்த தகவலை வெளிப்படையாக கூறினார்.

சிஎஸ்கே உறுதி

சிஎஸ்கே உறுதி

அதே சமயம், தோனி ஐபிஎல் தொடரில் துவக்கம் முதலே ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவர் 2020 ஐபிஎல் தொடர் மட்டுமில்லாமல், 2021 ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து இடம் பெறுவார் என கூறியது. இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாம் துவங்கியது.

தோனி பயிற்சி

தோனி பயிற்சி

மார்ச் 2 அன்று தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி முகாமில் பங்கேற்றார். அவருடன் சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட சக வீரர்களும் பயிற்சியில் பங்கேற்றனர். தோனி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோக்கள் முன்பே வைரல் ஆகின.

5 சிக்ஸர்கள்

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் தோனி வலைப் பயிற்சியில் தொடர்ந்து ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடிக்கும் காட்சி வெளியாகி உள்ளது. அவர் யார் பந்து வீச்சுக்கு எதிராக இப்படி அதிரடி சிக்ஸ் அடித்தார் என்பது தெரியவில்லை.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

அந்த சிக்ஸர் வீடியோ வேகமாக பரவியது. தோனி ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பரப்பி வருகிறார்கள். பயிற்சி என்றாலும் தோனி நீண்ட காலம் கழித்து அதிரடி ஆட்டம் ஆடி இருப்பதால் இந்த வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது.

பார்ம் அவுட் விமர்சனம்

பார்ம் அவுட் விமர்சனம்

தோனி பார்ம் அவுட்டில் இருப்பதால் தான் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாக உள்ளது. அதே போல, அவரது உடற்தகுதி குறித்தும் பல்வேறு விமர்சனம் இருந்தது. அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தோனி.

தோனி ரன்கள்

தோனி ரன்கள்

தன் 13வது சீசன் ஐபிஎல் தொடரில் ஆடும் தோனி, இதுவரை 190 ஐபிஎல் போட்டிகள் ஆடி உள்ளார். அதில் 23 அரைசதம் உட்பட, 4,432 ரன்கள் குவித்துள்ளார். 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே, மும்பை அணியை எதிர்கொள்ளும் போட்டியை தோனி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து ஆவலாக உள்ளனர்.

Story first published: Friday, March 6, 2020, 19:37 [IST]
Other articles published on Mar 6, 2020
English summary
IPL 2020 : Dhoni hit 5 sixes in 5 balls in Chennai Super Kings practice session.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X