For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஒரு சான்ஸுகாக தவிச்சிட்டு இருக்கோம்".. தமிழக வீரர்களை மதிக்காத தோனி..இந்த போட்டோவை பாருங்க புரியும்

துபாய்: சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது. இதை பற்றி தோனி கூறி இருக்கும் கருத்து இன்னும் சர்ச்சையாகி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அணிகள் சில இரண்டாம் பாதியில் சொதப்ப தொடங்கி உள்ளது.

ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற அணிகள் தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து வர தொடங்கி உள்ளது.ஆனால் சிஎஸ்கே மிக மோசமான சரிவை சந்தித்து பாதாளத்திற்கு சென்றுள்ளது.

சரிவு

சரிவு

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் உள்ளூர் வீரர்கள் சிலர் இருக்கிறார்கள். அந்தந்த மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். பெங்களூரில் கர்நாடக ரஞ்சி வீரர் படிக்கல் இருக்கிறார். டெல்லி அணியில் பலர் டெல்லி மாநிலத்தை சேர்ந்தவர்கள். ராஜஸ்தான்,கொல்கத்தா தொடங்கி எல்லா அணிகளிலும் அந்த மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் அல்லது ரஞ்சி கோப்பையில் விளையாடும் அண்டை மாநில வீரர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் சிஎஸ்கேவில் மட்டும்தான் அப்படி யாருமே இல்லை. தற்போது விளையாடும் சிஎஸ்கே அணியில் ரஞ்சிக்கோப்பை வீரர்களும் இல்லை. தமிழக வீரர்களும் இல்லை. தமிழக வீரர்களை மொத்தமாக தோனியும், சிஎஸ்கேவும் புறக்கணித்து வருகிறார்கள்.தோனியை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் காட் பாதர் போல கொண்டாடினாலும் கூட, அவர் தமிழக வீரர்கள் யாருக்கும் கொஞ்சம் கூட முன்னுரிமை கொடுக்கவில்லை.

எப்படி

எப்படி

சிஎஸ்கேவில் தமிழக வீரர்கள், பிற மாநில வீரர்கள் உட்பட சில லோக்கல் வீரர்கள் உள்ளனர். ஜெகதீசன், ஆசிப், மோனு குமார், சாய் கிஷோர், ரூது ராஜ் என்று நிறைய பேர் உள்ளனர். ஆனால் இவர்கள் யாருக்கும் தோனி வாய்ப்பு கொடுப்பதே இல்லை. ஜெகதீசன் ஒரு போட்டியில் ஆடினாலும் நன்றாக ஆடினார். ரூதுராஜ் ஆடிய நேரத்தில் மொத்தமாக சிஎஸ்கே பேட்டிங் சொதப்பியது.. இதனால் ஏற்பட்ட பிரஷரில் அவரும் அவுட் ஆனார்.

ஆனால் சிக்கல்

ஆனால் சிக்கல்

ஆனால் இவர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டு.. கடைசியில் தோனி இந்த இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் போதவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார். ஜாதவ் போன்ற வீரர்கள் பல போட்டிகளில் ஆடி ஒன்றும் செய்யாத நிலையில் அவர்களுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார். ஆனால் கண் முன்னே இருக்கும் லோக்கல் வீரர்களை தோனி வேண்டும் என்றே ஸ்பார்க் இல்லை என்று கூறி வாய்ப்பு அளிக்க மறுக்கிறார்.

மறுப்பு

மறுப்பு

தமிழகத்தில் திறமை இல்லாத வீரர்கள் இல்லை என்றால் கூட தோனியின் வாதத்தை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் நடராஜன், வருண் சக்ரவர்த்தி, முருகன் அஸ்வின், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் என்று எல்லா அணியிலும் மேட்ச் வின்னர் யார் என்று பார்த்தால் அது தமிழக வீரர்களாகத்தான் இருக்கிறார். டிஎன்பிஎல் வீரர்கள்தான் ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார்கள்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இவர்கள் இவ்வளவு நன்றாக ஆடியும் தோனி அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார். தோனியின் இந்த செயலை இணையத்தில் சிஎஸ்கே ரசிகர்களே விமர்சனம் செய்து வருகிறார்கள். இணையத்தில் இது தொடர்பாக மீம் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.. ஒரு சான்ஸ் கிடைக்குமான்னு தவிக்கிறோம்.. இப்படி ஸ்பார்க் இல்லைனு சொல்லிட்டீங்களே.. உங்கள் வாய்ல இருந்து இப்படி ஒரு வார்த்தை வரலாமா என்று சிஎஸ்கே இளம் வீரர்கள் தோனியிடம் கேட்பது போல இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தோனியை விமர்சனம் செய்து இணையத்தில் இன்னும் பல மீம்கள் வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, October 20, 2020, 13:07 [IST]
Other articles published on Oct 20, 2020
English summary
IPL 2020: Dhoni is not supporting local talents or Tamilnadu players in the CSK team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X