For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி பற்றி அந்த சந்தேகமே வேணாம்.. டவுட்டை கிளியர் செய்த சின்ன தல ரெய்னா!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்தை காண அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சுமார் ஓராண்டு காலமாக தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். மீண்டும் ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப உள்ளார். அதனால், தோனி மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக உயர்ந்துள்ளது.

இப்படி ஐபிஎல் நடத்துறது தப்பு.. பொறாமையில் பொங்கிய பாக். வீரர்கள்.. சரமாரியாக விளாசிய மதன் லால்!இப்படி ஐபிஎல் நடத்துறது தப்பு.. பொறாமையில் பொங்கிய பாக். வீரர்கள்.. சரமாரியாக விளாசிய மதன் லால்!

ரெய்னா பேட்டி

ரெய்னா பேட்டி

இந்த நிலையில் தோனி எந்த அளவுக்கு ஐபிஎல் தொடருக்கு தயாராகி இருக்கிறார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னா ஒரு பேட்டியில் பேசி உள்ளார். தோனி முழுமையாக தயாராகி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தோனி விலகல்

தோனி விலகல்

2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக ஆடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி. அதன் பின் உள்ளூர் போட்டிகளில் கூட தோனி பங்கேற்கவில்லை. அவரது விலகலால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

அப்போது 2020 ஐபிஎல் தொடருக்கு தயாராகத் துவங்கினார் தோனி. ஜனவரி மாதம் முதல் லேசான பயிற்சியை துவக்கிய அவர் மார்ச் துவக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்து முன்பை விட தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தோனியின் தீவிர பயிற்சி மற்றும் வலையில் அவர் அதிரடி ஷாட்கள் ஆடிய வீடியோக்கள் காரணமாக அப்போதே தோனியின் ஆட்டம் குறித்த எதிர்பார்ப்பு பல மடங்காக பெருகியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

சந்தேகம்

சந்தேகம்

தற்போது ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. அந்த அறிவிப்பு வந்தது முதலே தோனியின் ஆட்டம் குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் துவங்கியது. சிலர் தோனி ஓராண்டாக கிரிக்கெட் ஆடாத நிலையில் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என சந்தேகம் கிளப்பி வந்தனர்.

ஹெலிகாப்டர் ஷாட்டை காண்பீர்கள்

ஹெலிகாப்டர் ஷாட்டை காண்பீர்கள்

அது குறித்து ஒரு பேட்டியில் பதில் அளித்தார் சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா. "மார்ச் மாத பயிற்சியின் போது நான் அவருடன் இருந்தேன். அவர் மிக கடுமையாக பயிற்சி செய்தார். நிச்சயமாக அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை நீங்கள் விரைவில் காண்பீர்கள்" என்றார் ரெய்னா.

ஆவலாக இருக்கிறார் தோனி

ஆவலாக இருக்கிறார் தோனி

மேலும், தோனி பெரிய கிரிக்கெட் வீரர். அவரது சிறந்த தாக்குதலை களத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவும், தன் ரசிகர்களை குஷிப்படுத்தவும் அவர் ஆவலாக இருப்பதாகவும் சுரேஷ் ரெய்னா உறுதியாக கூறினார்.

தோனி பயிற்சி துவக்கம்

தோனி பயிற்சி துவக்கம்

முன்னதாக தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தின் உள் அரங்கில் கிரிக்கெட் பயிற்சியை துவக்கி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 20க்கு பின் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப உள்ள நிலையில் அதற்கு முன்பாக தோனி பயிற்சியை துவக்கி இருக்கிறார்.

Story first published: Saturday, August 8, 2020, 2:50 [IST]
Other articles published on Aug 8, 2020
English summary
IPL 2020 : Dhoni is well prepared, Suresh Raina clears doubts of some fans. He also assured that we will see Dhoni’s helicopter shot soon in UAE.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X