For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு ஏன் பவுலிங் தரல.. தோனியிடம் நேரடியாக கேள்வி கேட்ட சாஹர்..3 வார்த்தையில் தல சொன்ன அதிரடி பதில்

அபுதாபி: தனக்கு ஏன் டெத் ஓவர்களில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் தீபக் சாகர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு தோனி சொன்ன பதில் பெரிய வைரலாகி உள்ளது.

2018 ஐபிஎல் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பு என்று பார்த்தால் அது தீபக் சாகர்தான். புனே அணிக்காக விளையாடிக் கொண்டு இருந்த போது, தோனிதான் தீபக் சாகரை அணியில் எடுத்து அவரை வளர்த்துவிட்டார். அவரை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றினார்.

அதன்பின் அவரை கொஞ்சம் கொஞ்சமாக வளர வைத்து பின் சென்னை செல்லும் போது கூடவே அழைத்து சென்றார். சிஎஸ்கே அணியில் இணைந்த அவர், அணியின் முன்னணி பவுலராக மாறினார்.

CSK vs MI : 2020 ஐபிஎல் ஆரம்பம்.. எப்போது துவங்கும்? ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியுமா? முழு தகவல்கள்!CSK vs MI : 2020 ஐபிஎல் ஆரம்பம்.. எப்போது துவங்கும்? ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியுமா? முழு தகவல்கள்!

முன்னணி பவுலர்

முன்னணி பவுலர்

ஆம், சிஎஸ்கே அணியில் இணைந்த பின் தீபக் சாகர் மிக சிறந்த பவுலராக மாறினார். இந்திய அணியிலும் கூட இதனால் தீபக் சாகருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தில் இவரும் ஒருவராக பார்க்கப்படுகிறார். இவர் 140 கிமீ வேகத்தில் பந்து வீச கூடிய திறமை கொண்டவர்.

எப்படி செய்வார்

எப்படி செய்வார்

அதிலும் சென்னை அணிக்காக இவர் முதல் 10 ஓவர்களில் எப்போதும் தனது 4 ஓவர்களை போட கூடியவர். இவரின் பவுலிங் கோட்டாவை எப்போதும் தோனி முன்பே முடித்துவிடுவார். இவர் 140 கிமீ வேகத்தில் பந்து வீசினால் கூட இவருக்கு எப்போதும் தோனி கடைசி 5 டெத் ஓவர்களில் வாய்ப்பு கொடுத்தது இல்லை. டெத் ஓவர்களில் பெரும்பாலும் பிராவோ போன்ற வீரர்களே பந்து வீசி இருக்கிறார்கள்.

காரணம் கேட்டார்

காரணம் கேட்டார்

இந்த நிலையில் தனக்கு டெத் ஓவர்களில் வாய்ப்பு கொடுக்காதது குறித்து தோனியிடம் சாஹர் முதலில் கேட்டு இருக்கிறார். ஆனால் இதற்கு சாஹரிடம் தோனி சரியாக பதில் அளிக்கவில்லையாம். வெறும் ஒன்று இரண்டு வார்த்தையில் தோனி பதில் சொல்லி இருக்கிறார். அதன்பின் பவுலிங் கோச் சோப்ராவிடம் சென்று இவர் இது குறித்து கேட்டுள்ளார்.

சொன்னது என்ன

சொன்னது என்ன

அப்போது பவுலிங் கோச் சோப்ராவும், ஆம் , நீங்கள் டெத் ஓவர்களில் பந்து வீசலாம். வீசினால் அணிக்குதான் பலன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் உடனே தைரியத்தை வரவழைத்துக் கொண்டே, வேகமாக சாகர் தோனியிடம் சென்று இருக்கிறார். அவரிடம் சென்று எனக்கு ஏன் டெத் ஓவர்களில் பவுலிங் கொடுப்பது இல்லை. நான் நன்றாகத் தானே பவுலிங் செய்கிறேன். எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று கேட்டு இருக்கிறார்.

வாய்ப்பு ஏன்

வாய்ப்பு ஏன்

இப்படி சாகர் விரக்தியாக வந்து கேள்வி கேட்பார் என்று தோனி நினைக்கவில்லை. உடனே தோனி சாகரிடம், நான் வீரர்களை வளர்த்து விடுகிறேன் என்று பதில் சொல்லி இருக்கிறார். "I groom youngsters" என்று மூன்றே வார்த்தையில் தோனி பதில் சொல்லி இருக்கிறார். அதில் இருந்து தோனி என்ன செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதில், சாகர் உறுதியாகி உள்ளார்.

Story first published: Saturday, September 19, 2020, 13:48 [IST]
Other articles published on Sep 19, 2020
English summary
IPL 2020: Dhoni replied to Chahar in three words when he asked about bowling chances.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X