For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி பேட்டிங் பற்றிய அதிர வைக்கும் உண்மை.. ரகசியத்தை போட்டு உடைத்த பிளெம்மிங்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கில் ஏழாவதாக இறங்கி ஆடியது பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்த நிலையில், அது பற்றி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் பேசினார். அப்போது தோனி முன்பு போல இல்லை எனக் கூறி அதிர வைத்தார்.

ஐபிஎல் தொடர் செல்லச் செல்லதான் அவரால் பேட்டிங்கில் முன்னேற்றம் அடைய முடியும் என தோனியின் தற்போதைய நிலையை வெட்ட வெளிச்சமாக கூறி இருக்கிறார் பிளெம்மிங்.

சிஎஸ்கேவின் சிம்ம சொப்பனம்.. மொத்தமாக மாறும் சூழ்நிலை.. தோனிக்கு அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்!சிஎஸ்கேவின் சிம்ம சொப்பனம்.. மொத்தமாக மாறும் சூழ்நிலை.. தோனிக்கு அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்!

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் நிதான ஆட்டம் ஆடி தோல்வி அடைந்தது. தோல்வியை நோக்கி செல்கிறோம் எனத் தெரிந்தே சிஎஸ்கே அணி ஆடியதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. தோனி ஏழாம் வரிசையில் பேட்டிங் இறங்கியதும் கேள்விக்குள்ளானது.

நிதான பேட்டிங்

நிதான பேட்டிங்

217 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி 4 விக்கெட்கள் இழந்த பின் தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டை காப்பாற்றத் துவங்கியது. கடைசி நான்கு ஓவர்கள் இருக்கும் போது ஓவருக்கு 18 முதல் 20 ரன்கள் வரை எடுக்க வேண்டும் என்ற நிலையில் கூட நிறைய டாட் பால்கள், சிங்கிள் ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.

ஏழாம் வரிசை பேட்டிங்

ஏழாம் வரிசை பேட்டிங்

தோனி கட்டக் கடைசியாக ஏழாம் வரிசையில் தான் பேட்டிங் இறங்கினார். அவருக்கு முன் சாம் கர்ரன், கேதர் ஜாதவ் என அனைத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஆடி விட்டனர். ஜடேஜா மட்டுமே களமிறங்கவில்லை. தோனி ஏன் பெரிய இலக்கை துரத்தும் போது முன்பே பேட்டிங் செய்ய வரவில்லை என்ற கேள்வி எழுந்தது.

தோனியின் ஆட்டம்

தோனியின் ஆட்டம்

தோனி கடைசி நேரத்தில் களமிறங்கிய போது அதிக சிக்ஸர்கள் அடித்தால் மட்டுமே அணியை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது அவர் அதிரடி ஆட்டம் ஆடாமல் சிங்கிள் ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் தோல்வி உறுதியான உடன் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்தார்.

பிளெம்மிங் விளக்கம்

பிளெம்மிங் விளக்கம்

தோனியின் பேட்டிங் வரிசை, அவரது திணறல் ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளன நிலையில், பயிற்சியாளர் பிளெம்மிங் விளக்கம் அளித்தார். தோனி நீண்ட காலம் கழித்து போட்டிகளில் ஆடுவது, அவரது உடல்நிலை ஆகியவை குறித்து பிளெம்மிங் வெளிப்படையாக பேசினார்.

முன்பு போல் இல்லை

முன்பு போல் இல்லை

"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தோனி கிரிக்கெட் ஆடவில்லை. அனைவரும் தோனி முன்பு போல ஆட வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால், அது எளிதாக நடக்காது"என்றார். அதாவது தோனி முன்பு போல இல்லை, அவரது உடல்நிலை முன்பு போல அதிரடி பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை என்பதைத் தான் பிளெம்மிங் கூறி உள்ளார்.

அதுதான் முதல் போட்டி

அதுதான் முதல் போட்டி

"ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி ஆட்டம் தான் அவர் நீண்ட காலம் கழித்து ஆடிய முதல் பேட்டிங். மும்பை போட்டியில் இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்தார். அவர் தன் ஆட்டத்தை வேகமாக மாற்ற முயன்று வருகிறார்." என்று தோனி நீண்ட காலம் கழித்து ஆடுவதை தெளிவுபடுத்தினார் பிளெம்மிங்.

கொஞ்சம் நாள் ஆகும்

கொஞ்சம் நாள் ஆகும்

"ஐபிஎல் தொடர் நடக்கும் போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக சிறப்பாக ஆடுவார் என்றார். அவர் 30 பந்துகளில் 70 ரன்கள் அடிக்க வேண்டும் என நினைப்பது மிகவும் கடினமான காரியம். மற்ற பார்மில் உள்ள வீரர்கள் அதை செய்வார்கள்" என்றார் பிளெம்மிங்.

உண்மை இதுதான்

உண்மை இதுதான்

தோனி பேட்டிங் மோசமாக இருப்பதற்கு அவரது உடல்நிலையும் ஒரு காரணம் என தெரிகிறது. அவர் முன்பு போல அதிரடி ஆட்டம் ஆடும் நிலையில் இல்லை என்பதை பிளெம்மிங் தெளிவுபடுத்தி உள்ளார். ஆனால், இது சிஎஸ்கே அணியை பாதிக்காதா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

Story first published: Friday, September 25, 2020, 18:49 [IST]
Other articles published on Sep 25, 2020
English summary
IPL 2020 News in Tamil : IPL 2020 : Dhoni’s batting form and fitness is not in good condition as Flemming explains onecan’t expect Dhoni to play like in his past.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X